மன இறுக்கத்தைப் போக்கி மகிழ்ச்சியை மலரச் செய்யும் 5 யோசனைகள்!

மன இறுக்கத்தைப் போக்கும் யோசனைகள்
மன இறுக்கத்தைப் போக்கும் யோசனைகள்https://www.photoroom.com
Published on

ரு குடும்பத்தில் குடும்பத் தலைவனும் சரி, தலைவியும் சரி மன இறுக்கம் இல்லாமல் இருந்தால்தான் அந்தக் குடும்பம் மகிழ்ச்சியான குடும்பமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தினசரி வாழ்வில் ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு மன இறுக்கம் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. அவற்றை எப்படித்தான் சரி செய்வது என்ற எண்ணம் பலரது மனதிலும் இருக்கும். மன இறுக்கத்தை எளிதாகப் போக்குவதற்கான 5 யோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.

1. சத்தான உணவைச் சாப்பிடுங்கள்: ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவு வகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. வெளியில் ஹோட்டல்களில் டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களால் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2. நன்றாகத் தூங்குங்கள்: நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே புத்துணர்ச்சி அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளையை சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்.

3. நடைப்பயிற்சி: தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (ஜாகிங்) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை, கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெரிதும் தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் ‘அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்ல வேண்டுமா?’ எனத் தோன்றுவது இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40 வயதுக்காரர் 20 வயது இளைஞனைப் போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

இதையும் படியுங்கள்:
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜன்மாஷ்டமி!
மன இறுக்கத்தைப் போக்கும் யோசனைகள்

4. ஓய்வெடுங்கள்: பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுக்கவும். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. சிரியுங்கள்: மனம் விட்டு சிரியுங்கள். ‘மனம் விட்டு’ என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்த எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக, முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com