கணவன், மனைவி ஒற்றுமை பலப்பட 5 யோசனைகள்!

Unity of husband and wife
Unity of husband and wife

ணவன், மனைவி உறவு என்பது மிகவும் புனிதமானது. திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் ஆயுள் உறவு என்று கூட இதைச் சொல்லலாம். ஏனென்றால், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆயுளுக்கும் உடன் இருக்கும் ஒரு உறவு இது. கணவன், மனைவி உறவுக்குள் சண்டையும் சச்சரவுகளும் மனக்கசப்புகளும் இருக்கத்தான் செய்யும். அவை இல்லாமல் வாழ முடியாது.

கணவன், மனைவி உறவில் பல நேரங்களில் சாதாரண பிரச்னைகள் கூட பெரிதாகி விவாகரத்து வரை சென்று விடுவது உண்டு. கணவனும் மனைவியும் இருவருமே சில விஷயங்களைக் கடைப்பிடித்தால் சண்டை, சச்சரவுகள் என்பதே இல்லாமல் வாழலாம். அதற்கு சில யோசனைகளை இந்தப் பதிவில் காணலாம்.

1. கணவன் / மனைவி இருவருக்குள் சண்டை வருவது சகஜமான ஒன்றுதான், அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் ஏற்படுவது சகஜம். அதற்காக ஒருவர் தனது துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது தவறான ஒன்றாகும். இதுபோன்று துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின் உணர்வை பாதிக்கக்கூடும். மனம் மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகமும் இதனால் ஏற்படும். மேலும், இதனால் இருவரது சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படும்.

2. கணவன், மனைவி உறவில் வெறுப்பு இருக்கக்கூடாது. அப்படி வெறுப்பு இருந்தால் அது வலி, கோபம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். வெறுப்புணர்வை வைத்திருப்பது உங்கள் கணவன் / மனைவியின் ஆழ்மனதில் தவறான சிந்தனையை ஏற்படுத்திவிடும். வெறுப்புகளை வைத்திருப்பது உறவு முறிவு, மனச்சோர்வு, பதற்றம் மற்றும் கோபம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். புண்படுத்தும் நிகழ்வுகள் அல்லது நடத்தை குறித்து கசப்பாக மாறாமல் இருக்க, உங்கள் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை உங்கள் துணையிடம் வெளிப்படையாகப் பேசுங்கள்.

3. உங்கள் கணவனை / மனைவியை ஒருபோதும் அவர்களது முந்தைய உறவோடோ அல்லது வேறொருவரின் உறவோடு ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி நீங்கள் அவர்களை வேறொருவருடன் ஒப்பிட்டுப் பேசினால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவார். அப்படி நீங்கள் உங்கள் துணையை மற்றவருடன் ஒப்பிட்டுப் பேசுகிறீர்கள் என்றால் அவர்கள் செய்யும் தவறுகளை மட்டுமேதான் நீங்கள் உற்றுநோக்குகிறீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. இதனால் உங்கள் கணவன், மனைவி உறவில் பெரியளவில் சிக்கல் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
கானல் நீர் எவ்வாறு உருவாகிறது தெரியுமா?
Unity of husband and wife

4. உங்கள் கணவன் / மனைவியின் தொலைபேசி  அல்லது பிற சாதனங்களை அவர்களுக்குத் தெரியாமல் பார்ப்பது மிகவும் தவறான செயலாகும். இது உங்கள் துணையின் தனியுரிமையை மீறக்கூடிய மோசமான செயலாகும். இது அவர்கள் மீதான நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது. இவ்வாறு செய்வது உங்களுக்கு மட்டுமின்றி, உங்கள் துணைக்கும் ஒருவித மனச்சோர்வை ஏற்படுத்திவிடும். இதுபோன்று சந்தேகக் கண்ணோட்டத்துடன் உங்கள் துணையின் செயலை உற்றுநோக்குவது தவறான புரிதலை ஏற்படுத்தும். உங்கள் உறவில் விரிசலையும் ஏற்படுத்தும்.

5. உங்கள் கணவன் / மனைவி யாருடனாவது பேசினால் அவர்களை கட்டுப்படுத்துவது போன்ற செயல்களை நீங்கள் ஈடுபடக் கூடாது. இப்படி அவர்களது விருப்பம் எல்லாவற்றிலும் நீங்கள் மூக்கை நுழைத்தால் அது அவர்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com