ஸ்மார்ட் டிவி வாங்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

5 important things to consider when buying a smart TV
5 important things to consider when buying a smart TV
Published on

ந்தியாவில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் அதிகரித்து விட்டன. இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழுக்க போட்டி போட்டுக்கொண்டு தள்ளுபடியை வாரி வழங்கி வருவதால் ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், ஹெட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அதுவும் இப்போது பிரபலமான பிராண்ட்களின் ஸ்மார்ட் டிவிகள் கூட 10,000 ரூபாய் விலைக்குள் கிடைக்கிறது.

நீங்கள் 32 இன்ஸ் ஸ்மார்ட் டிவிகள் முதல் 65 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் வரை 10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் வாங்கிக்கொள்ள முடியும். இப்படி குறைவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகளில் ஒருசில டிவிகள்தான் நல்ல தரத்துடன் நீடித்து உழைக்கின்றன. பெரும்பாலான ஸ்மார்ட் டிவிகள் அவற்றை வாங்கிய சில நாட்களில் தனது வேலையை காட்டி விடுகின்றன. டிஸ்பிளே பிரச்னை, ஒளிபரப்பு பிரச்னை, சவுண்ட் பிரச்னை என குறைந்த விலை ஸ்மார்ட் டிவிகளில் ஆயிரத்தெட்டு பிரச்னைகள் கூறப்படுகின்றன.

குறைந்த விலையில் கிடைக்கிறது என்று வாங்கப்படும் ஸ்மார்ட் டிவிகள் பல்வேறு பிரச்னையை ஏற்படுத்துகின்றன. இதனால் ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியை எப்படி அடையாளம் காண்பது என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கலாம். குழப்பம் இன்றி தெளிவாக ஒரு டிவியை வாங்க ஐந்து அம்சங்களை கவனித்தாலே போதும். அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் கண்ணாடியை எங்கே வைத்தால் என்ன பலன் தெரியுமா?
5 important things to consider when buying a smart TV

1. டிஸ்பிளே பேனல்: ஒரு ஸ்மார்ட் டிவிக்கு மூல ஆதாரமே டிஸ்பிளேதான். ஏனெனில், டிஸ்பிளே நன்றாக இருந்தால்தான் தரமான, துல்லியமான ஒளிபரப்பை பெற முடியும். ஆகவே, ஸ்மார்ட் டிவி வாங்குவதற்கு முன்பு அந்த டிவியின் டிஸ்பிளே என்ன? என்பதை கவனிக்க வேண்டியது அவசியம். நீங்கள் வாங்கும் டிவியில் LCD, TFT, AMOLED, OLED, IPS அல்லது QLED ஆகிய டிஸ்பிளே பேனல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஒளிபரப்பு 4K அல்லது அல்ட்ரா HD தரம் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. சவுண்ட் சிஸ்டம்: ஸ்மார்ட் டிவிகளில் சவுண்ட் நன்றாக இருந்தால் தெளிவான சவுண்ட் கிடைத்து பாடல்களை, திரைப்படங்களை ரசிக்க முடியும். ஆகவே, நீங்கள் வாங்கும் டிவியில் நல்ல சவுண்ட் சிஸ்டம் இருக்கிறதா? என்று செக் செய்யுங்கள். ஒரு நல்ல ஆடியோ அனுபவத்திற்கு ஸ்மார்ட் டிவியில் குறைந்தது 30W ஒலி வெளியீடு இருப்பதை உறுதி செய்யுங்கள்.

3. இணைப்பு ஆப்ஷன்கள் (Connectivity options): இன்று பெரும்பாலான ஸ்மார்ட் டிவிகள் USB சாதனங்களை நம்பியிருப்பதால் நீங்கள் வாங்கும் டிவியில் 2 முதல் 3 HDMI மற்றும் USB போர்ட்கள் இருப்பதை உறுதி செய்யவும்.

இதையும் படியுங்கள்:
அணில்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்!
5 important things to consider when buying a smart TV

4. ரேம் மற்றும் ஸ்டோரேஜ்: ஸ்மார்ட் டிவியில் அதிக ரேம் மற்றும் ஸ்டோரேஜ் இருந்தால் சிறப்பாக செயல்படும். நீங்கள் விரும்பிய சீரியல், பாடல்களை சேமித்து வைக்க குறைந்தபட்சம் 32GB ஸ்டோரேஜ் கொண்ட டிவியை தேர்வு செய்யுங்கள்.

5. வாரன்ட்டி மற்றும் அப்டேட்: ஸ்மார்ட் டிவி வாங்குவதற்கு முன்பாக அது எவ்வளவு வாரன்ட்டி கொடுக்கிறது என்று பார்ப்பது மிகவும் அவசியம். ஏனெனில், வாரன்ட்டி இருந்தால்தான் டிவியில் ஏதும் பிரச்னை ஏற்பட்டால் நிறுவனங்களிடம் நீங்கள் முறையிட முடியும். இதேபோல், ஸ்மார்ட் டிவிகளிலும் புதுப்புது அப்டேட்கள் செய்யப்படுவதால் லேட்டஸ் அப்டேட் செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவிகளை வாங்குவது சிறந்தது.

நீங்கள் ஸ்மார்ட் டிவி வாங்குவதற்கு மேற்கண்ட அம்சங்களை மட்டும் பார்த்தாலே நல்ல தரமான டிவியை உங்களால் வாங்க முடியும். இதன் மூலம் பணத்தை சேமிப்பது மட்டுமின்றி, தேவையற்ற பிரச்னைகள் வராமலும் தடுக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com