வாழ்வை வளமாக்கும் ஜப்பானிய ‘வாபி சாபி’ தத்துவத்தின் 5 முக்கிய போதனைகள்!

5 Key Teachings of Japanese 'Wabi Sabi' Philosophy to Enrich Life
5 Key Teachings of Japanese 'Wabi Sabi' Philosophy to Enrich Life
Published on

ன்றைய வாழ்க்கை முறை அதிக மன அழுத்தம் தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது. பொருளாதார தேடலில் மனிதர்கள் தங்களை தொலைத்துக் கொண்டு, துன்பங்கள் சூழ வாழ்கிறார்கள். ஜப்பானியர்களின் பண்டைய கால வாழ்க்கை முறையான, ‘வாபி சாபி’ என்கிற தத்துவம் இயற்கையுடன் இணைந்து வாழ்வது பற்றி கூறுகிறது. அதனுடைய முக்கியமான ஐந்து போதனைகளைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

‘வாபி சாபி’ என்பது அபூரணத்தில் உள்ள அழகைத் தொடர்ந்து தேடவும், வாழ்க்கையின் இயற்கையான சுழற்சியை ஏற்றுக்கொள்ளவும் நம்மைத் தூண்டும் ஒரு கருத்தாகும். நாம் மற்றும் வாழ்க்கை உட்பட எல்லாமே நிலையற்றவை, முழுமையற்றவை, சாத்தியமற்றது மற்றும் நிறைவற்றவை என்பதை இது நினைவூட்டுகிறது.

எளிமையான அழகை அங்கீகரிப்பது வாபி. பணம், பொருள் போன்ற மாயையில் இருந்து விலகவும் இதயத்தை எளிமையான அழகால் நிரப்பவும் வாபி தூண்டுகிறது. இந்தத் தத்துவத்தின் மூலம் ஒருவர் ஆன்மிக செழுமையை அனுபவிக்க முடியும். சாபி என்பது ஒருவர் வளரும் விதம், வயது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு காணும் பொருட்களில் அழகு மறைந்திருப்பதை அறிவுறுத்துகிறது. இந்த இரண்டு கருத்துக்களும் சேர்ந்து, வாழ்க்கையை அணுகுவதற்கான ஒரு மேலோட்டமான தத்துவத்தை உருவாக்குகின்றன.

1. இருப்பதை ஏற்றுக்கொள்தல்: வாழ்க்கையை மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக்கொள்வதன் மூலம் ஒருவர் சுதந்திரத்தை காண முடியும். ஜப்பானின் யமபுஷி துறவிகள் உபயோகிக்கும் வார்த்தை, ‘உகேதமோ.' அதாவது, நான் திறந்த இதயத்துடன் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்பதாகும். அது நமது வாழ்க்கையை எவ்வாறு செயல்படுகிறது நீங்கள் உங்கள் வேலையை இழக்கப் போகிறீர்களா? திடீரென மழை பெய்கிறதா? அதனால் உங்களது வெளிப்புற நிகழ்வு ரத்து செய்யப்பட்டு விட்டதா உங்களுக்கு விபத்து ஏற்பட்டு விட்டதா? எல்லாவற்றுக்கும் ஓகே என்று சொல்ல வேண்டும்.

வாழ்க்கையில் ஏற்படும் கெட்ட நல்ல விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால் வாழ்க்கைக்கான சுதந்திரத்தையும் வளர்ச்சிக்கான பாதையையும் காண முடியும். வாழ்க்கையில் வரும் துன்பங்களை எதிர்த்தால் துன்பம் கூடிக்கொண்டே போகும். சூழ்நிலைக்கு ஏற்ப சரணடைவது வாழ்க்கையை எளிதாக வாழ வைக்கும். அடுத்து நடக்கப்போவதை நல்லதாக தீர்மானிக்கும்.

2. சிறந்து விளங்க முயற்சி செய்யுங்கள்: முழுமை தன்மையை எண்ணி செயல்படாமல் சிறந்தவராக இருக்க முடிந்ததை செய்ய வேண்டும். ஒரு நல்ல கணவனாக, மனைவியாக நல்ல தோழனாக அலுவலகத்தில் நல்ல பணியாளராக சிறந்து விளங்குவதற்கு தேவையான முயற்சிகளை செய்ய வேண்டும். முழுமையான பரிபூரணத்தை அடைய நினைக்காமல் செய்யும் வேலையில் கவனம் வைத்து அதை மேம்படுத்த வேண்டும். வாழ்க்கையில் அனைத்து விஷயங்களும் அபூர்ணமான நிலையில் உள்ளன. எதிலும் முழுமைத் தன்மை இல்லை.

3. எல்லாவற்றின் அழகையும் பாராட்டுங்கள்: எல்லா பொருட்களிலும் அழகுணர்ச்சியை கண்டு பாராட்ட வேண்டும். அது எந்த நிலையில் இருந்தாலும் சரி. உடைந்த கோப்பை, கால் உடைந்த நாய்க்குட்டி என காணும் அத்தனை பொருட்களிலும் அழகைக் காண வேண்டும். வாழ்க்கையில் பலமுறை மனிதர்கள் உடைந்து போகிறார்கள். உடைந்த பொருள்களில் அழகு இல்லை என்று நினைக்கக் கூடாது. அவரை எப்படி சரியாகப் பயன்படுத்துவது என்று யோசிக்க வேண்டும். உடைந்த மனதுடன் இருக்கும் ஒரு மனிதனை ஒதுக்காமல் அவருக்கு தன்னாலான எல்லா ஊக்கத்தையும் கொடுத்து உதவ வேண்டும்.

4. வேகத்தை குறைப்பது; எளிமையை கடைப்பிடிப்பது: எந்த செயலையும் மெதுவாக செய்ய வேண்டும். எளிமையை கடைப்பிடிக்க வேண்டும். விரைந்து சென்று வேலைகளை செய்து இறுதியில் என்ன பயன் என்று ஆச்சரியப்படும் அளவில்தான் வாழ்க்கை இருக்கிறது. வேகத்தை குறைப்பதே அவசரகதியான வாழ்க்கைக்கு மாற்று மருந்தாகும். இது சுய உணர்வை ஏற்படுத்த உதவுகிறது. வேகவேகமாக காரியங்களைச் செய்யும்போது தன்னுடைய சுய நடத்தையை கூட ஒருவரால் பகுத்தறிய முடிவதில்லை. அதனால்தான் அவர் தன் மனம் போன போக்கில் செயல்படுகிறார். எளிமையான வாழ்க்கையும் மிக அவசியம். மேலும் மேலும் பொருட்களையும் பணத்தையும் சேர்த்துக்கொண்டே போகாமல் எனக்கு என்ன தேவை என்ற கேள்வியை கேட்டால் மிகச் சிறிய சிறியவையே உங்கள் வாழ்நாளுக்கு போதுமானதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
தொண்டையை பாதுகாக்க சில எளிய ஆரோக்கிய வழிகள்!
5 Key Teachings of Japanese 'Wabi Sabi' Philosophy to Enrich Life

நம்மிடம் இருப்பதை வைத்து திருப்தியாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இந்த சமூகம் மகிழ்ச்சியை கண்டுபிடிப்பதில் வெறித்தனமாக இருக்கிறது. அடுத்தடுத்த தேடல்களில் தனது மகிழ்ச்சியை தொலைத்து விட்டு தேவையில்லாத விஷயங்களில் மகிழ்ச்சியைத் தேடுகிறது. அதிகமான வேலை செய்தாலும் வெறுமையே ஒருவரை ஆட்டுவிக்கும். ஒருமுறை இலக்கை அடைந்து விட்டால் நிரந்தரமான மகிழ்ச்சியை அடைவோம் என்பது மாயை என்று ஹார்ட்வர்ட் நேர்மறை உளவியலாளர் பென்-ஷாஹர் கூறுகிறார்.

5. எந்த நிலையிலும் மன நிறைவோடு இருப்பது: ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது மனநிறைவுடன் இருக்கிறார் என்றால், சோகமாக இருக்கும்போதும் அந்த மன நிறைவுடன் இருக்க வேண்டும். ஒருவரால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதேபோல எல்லா நேரமும் சோகமாக இருக்க முடியாது. எனவே, அந்த நேரத்தில் நடப்பதை மனநிறைவோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com