Varicose vein treatment
Varicose vein treatment

முறுக்கப்பட்ட நரம்பு பாதிப்பும் நிவாரணமும்!

Published on

ற்போது பலரிடமும் ‘வெரிகோஸ்’ எனப்படும் சுருள் நரம்பு பாதிப்புகள் அதிகம் காணப்படுகின்றன. 'வெரிகோஸ்' என்ற லத்தீன் மொழி சொல், ‘முறுக்கப்பட்ட’ என்ற பொருள் தருகிறது. இந்த நரம்புகள் சிலந்தி வலைகள் போல தோற்றந்தில் கரும் பச்சை நிறத்தில்  முடிச்சுகள் போன்று வீங்கிப் பருத்து கால்களில் காணப்படும். குறிப்பாக, வயது வந்தோரில் 20 சதவிகிதம் வரை இந்த நரம்புகள் பாதிப்பு தருகிறது.

நரம்பு பாதிப்பு எதனால் உருவாகிறது?

நரம்புகள் நமது கால்களில் இருந்து இரத்தத்தை மேலே கொண்டு செல்லும்போது, ​​அவை புவியீர்ப்புக்கு எதிராக செயல்படுகின்றன. கால்களில் உள்ள தசைகளின் சுருக்கம், இரத்தத்தை மேல்நோக்கி தள்ளும் பம்ப்கள் போல வேலை செய்கிறது. நரம்புகளில் உள்ள வால்வுகள் இரத்தம் பின்னோக்கிப் பாய்வதைத் தடுக்கின்றன. வயதாகும்போது தசைகள் அல்லது வால்வுகள் பலவீனமடைந்து, இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போது இந்த  நரம்பு பாதிப்புகள் தோன்றும்.

வெரிகோஸ் வெயின் ஏற்படுவதில் மரபியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. நீண்ட நேரம் நிற்பது, உடல் பருமன், காலில் காயம் மற்றும் இடுப்புக்கு கீழே மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிவது போன்றவையும் இந்த நிலை தோன்றுவதற்கு காரணமாக இருக்கலாம்.

குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கு இந்த நிலை உருவாகும் வாய்ப்பு அதிகம். கர்ப்பம், மாதவிடாய் நிறுத்தம், குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் மற்றும் ஹார்மோன் மாற்று சிகிச்சை போன்றவையும்  இந்த நரம்பு பாதிப்புக்கு அடிப்படையாகிறது.

பொதுவாக, உடற்பயிற்சி, உடல் எடையை குறைத்தல், இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது மற்றும் நீண்ட நேரம் நிற்காமல் அல்லது ஒரே இடத்தில் உட்காராமல் இருப்பது போன்ற சுய பாதுகாப்பு கவனங்கள் அவசியம்.

மேலும், மருத்துவம் பரிந்துரைக்கும் காலுறைகளை பயன்படுத்துவது சிறந்த வழி. இவை கால்களுக்கு மேல் உறுதியாகப் பொருந்தி தசைகள் மற்றும் நரம்புகள் இரத்த ஓட்டம் தடைபடாமல உதவுவதற்கு மென்மையான அழுத்தத்தைப் பயன்படுத்துகின்றன. இந்த காலுறைகளின் பொருத்தம் சரியாக இருப்பது முக்கியம். மிகவும் இறுக்கமானவை பாதிப்பை அதிகரிக்கும். மிகவும் தளர்வானவை அணிந்தால் பயனற்றதாகி விடும்.

இதையும் படியுங்கள்:
ஆங்கிலேய அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த மருது சகோதரர்கள் நினைவு தினம்!
Varicose vein treatment

அதிக பாதிப்புகளுக்கு மருத்துவம் தரும் சிகிச்சைகள் சில:

ஸ்கெலரோதெரபி: பாதிக்கப்பட்ட சிறு நரம்புகளை மூடுவதற்கு ஒரு ஊசி போடப்படுகிறது.

நுரை ஸ்கெலரோதெரபி: பெரிய நரம்புகளை மூடுவதற்கு நுரை செலுத்தப்படுகிறது.

லேசர் சிகிச்சை: இதில் கதிர்வீச்சின் வெப்பம் நரம்புகளை மூடுகிறது.

எண்டோஸ்கோபிக் சிரை அறுவை சிகிச்சை: இது பெரும்பாலும் கால் புண்கள் உருவாகும்போது பயன்படுத்தப்படுகிறது. சிறிய கீறல்களைப் பயன்படுத்தி, ஒரு சிறிய கேமரா காலில் செருகப்பட்டு, பாதிக்கப்பட்ட நரம்புகளைக் கண்டறிந்து பின் அவை கருவிகளைப் பயன்படுத்தி அகற்றப்படுகின்றன.

இப்படி பல முறைகள் இருந்தாலும் மருத்துவர் அந்த பாதிப்பின் தீவிரத்தை பரிசோதித்த பின்னரே தகுந்த சிகிச்சையை பரிந்துரைக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com