ஏசி இல்லாமல் வீட்டை ஊட்டி போல மாற்றுவது எப்படி.. இந்த 5 சீக்ரெட் டிப்ஸை உடனே ட்ரை பண்ணுங்க!

keep-your-home-cool
keep-your-home-cool
Updated on

கோடைக்காலத்தில் வெளியே தான் வெயில் கொளுத்துகிறது என்றால், வீட்டுக்குள்ளும் ஏதோ ஓவனுக்குள் உட்கார்ந்திருப்பது போல ஒரு தகிப்பு இருக்கும். எல்லோர் வீட்டிலும் 24 மணி நேரமும் ஏசியை ஓடவிட முடியாது, அப்படி செய்தால் கரண்ட் பில் எகிறிவிடும். 

ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் இந்த வெயிலை வீட்டுக்குள் நுழைய விடாமல் மிக எளிதாக தடுத்து நிறுத்த முடியும். வெயிலின் தாக்கத்தில் இருந்து வீட்டை எப்படி ஒரு ஏசி ரூம் போல கூலாக மாற்றுவது என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

திரைச்சீலைகள், மூங்கில் தட்டிகள்!

வீட்டுக்குள் வெயில் நேரடியாக வருவதை தடுப்பதில் முதல் ஆயுதம் ஜன்னல் திரைச்சீலைகள் தான். சாதாரண மெல்லிய துணிகளை மாட்டி வைப்பதை விட, சூரிய ஒளியை நூறு சதவீதம் தடுக்கும் பிளாக்அவுட் கர்ட்டன்களை பயன்படுத்துவது ரொம்பவே நல்ல ரிசல்ட்டை தரும். அடர்த்தியான வெளிர் நிறங்களில் இந்த திரைகளை வாங்கினால், அது ஒளியை ஈர்க்காமல் அப்படியே திருப்பி அனுப்பிவிடும். 

அதேபோல பால்கனி மற்றும் வராண்டாக்களில் பாரம்பரியமான மூங்கில் தட்டிகள் அல்லது வெட்டிவேர் தட்டிகளை கட்டி தொங்கவிடலாம். அதில் கொஞ்சம் தண்ணீரை ஸ்ப்ரே செய்து விட்டால், வீட்டுக்குள் வரும் காற்று ஜில்லென்று ஏசி காற்று போலவே இருக்கும். இது பாட்டி காலத்து ஐடியா என்றாலும் எக்கச்சக்க பலன்களை கொடுக்கும்.

சன் கண்ட்ரோல் ஃபிலிம்!

உங்கள் வீட்டில் கண்ணாடிகளால் ஆன பெரிய ஜன்னல்கள் இருந்தால், அதன் வழியாகத்தான் அதிகப்படியான வெப்பம் உள்ளே வரும். இதை தடுக்க ஜன்னல் கண்ணாடிகளில் சன் கண்ட்ரோல் ஃபிலிம் எனப்படும் மெல்லிய பேப்பர்களை ஒட்டி வைக்கலாம். இது சூரியனின் கொடூரமான புற ஊதா கதிர்களை வீட்டுக்குள் விடாமல் ஒரு பாதுகாப்பு கவசம் போல தடுத்து நிறுத்தும். 

இதையும் படியுங்கள்:
வீட்டுக்குள் வளர்க்கும் மணி பிளாண்ட்: பூச்சிகளைத் தடுக்குமா அல்லது ஈர்க்குமா?
keep-your-home-cool

வீட்டுக்குள் ஒரு குட்டி தோட்டம்!

இயற்கையான முறையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க செடிகள் ரொம்பவே உதவும். ஜன்னல் ஓரங்கள் மற்றும் பால்கனிகளில் கொடி போல படரும் செடிகளை வளர்ப்பது ஒரு சிறப்பான ஐடியா. இந்த செடிகள் நேரடி வெயிலை தடுத்து ஒரு குடையை போல செயல்படும். மேலும் வீட்டுக்குள் கற்றாழை, மணி பிளான்ட் போன்ற செடிகளை வைத்தால், அது காற்றில் உள்ள வெப்பத்தை உறிஞ்சி வீட்டை எப்போதுமே பிரெஷ்ஷாக வைத்துக்கொள்ளும்.

சரியான நேரம்!

பலரும் செய்யும் ஒரு பெரிய தப்பு, வெயில் நேரத்தில் காத்து வரட்டும் என்று ஜன்னலை திறந்து வைப்பது தான். காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை ஜன்னல்களை முற்றிலுமாக மூடி வைப்பது தான் புத்திசாலித்தனம். வெயில் குறைந்த பிறகு மாலை நேரத்திலும், அதிகாலையிலும் ஜன்னல்களை திறந்து வைத்தால் குளிர்ந்த காற்று வீட்டுக்குள் அழகாக வந்து தங்கும். தேவையில்லாமல் மின் விளக்குகளை பகலில் பயன்படுத்துவதையும் தவிர்ப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
வெள்ளை நிற சட்டையில் மஞ்சள் கறை! கோடைக்கால பிரச்னைகள்... சிம்பிளான 'ஹேக்' தீர்வுகள்!
keep-your-home-cool

இந்த சிம்பிளான டிப்ஸ்களை ஃபாலோ பண்ணினாலே போதும், அக்னி நட்சத்திர வெயில் வந்தாலும் உங்கள் வீட்டை அது பெரிதாக பாதிக்காது. ஏசியை மட்டுமே நம்பியிருக்காமல், இது போன்ற சிறிய மாற்றங்களை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். வெயிலை தடுத்து வீட்டை குளிர்ச்சியாக மாற்றுவதுடன் மட்டுமில்லாமல் உங்களது மின்சார கட்டணத்தையும் பெருமளவு குறைத்து பணத்தை மிச்சப்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com