திருமண உறவு என்பது இரண்டு தனி நபர்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் அனுபவங்கள் கலந்த ஒரு சிக்கலான கலவையாகும். இதில் பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவரிடம் நெருக்கமாக இருக்க விரும்பினாலும், சில விஷயங்களை எப்போதும் மறைக்கின்றனர். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இந்த பதிவில் பெண்கள் தங்கள் கணவரிடம் பொதுவாக மறைக்கும் 5 ரகசியங்கள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.
நிதிநிலைமை: பல பெண்கள் தங்கள் கணவரிடம் அவர்களின் உண்மையான நிதி நிலையைப் பற்றி சொல்வது கிடையாது. ஏனெனில், சிலர் கணவனை விட அதிகமாக சம்பாதிப்பதால், அது அவர்களுக்கு மத்தியில் பிரச்சனையை ஏற்படுத்தும் என நினைக்கின்றனர்.
உடல் மாற்றங்கள்: தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை எந்த பெண்ணும் தன் கணவனிடம் சொல்வதில்லை. வயது தொடர்பான மாற்றங்கள், கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக ஏற்படும் மாற்றங்களை பெண்கள் கணவனிடம் இருந்து மறைக்கவே விரும்புகின்றனர். ஏனெனில், பெண்கள் தங்கள் கணவரின் கண்ணுக்கு தான் அழகாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.
கடந்த கால உறவுகள்: பெண்கள் தங்களின் கடந்த கால உறவுகள் பற்றி கணவரிடம் முழுமையாக வெளிப்படுத்துவது இல்லை. ஏனெனில், பெண்கள் தங்களின் கணவனைப் புரிந்துகொள்வதைப் போல, ஆண்கள் தன் மனைவியின் கடந்த கால விஷயங்களை எளிதாக எடுத்துக் கொள்வதில்லை. அது தற்போதைய உறவில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது.
உணர்வு ரீதியான பிரச்சினை: பெரும்பாலான பெண்கள் தங்களின் உணர்வு ரீதியான பிரச்சினைகளை தங்கள் கணவரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை. இதற்குக் காரணம் ஏற்கனவே குடும்ப சுமையை சுமந்து கொண்டிருக்கும் கணவனால், இதுபோன்ற விஷயங்கள் மேலும் சுமையை ஏற்படுத்தும் என்பதால், இதை மறைக்கின்றனர்.
ஆசைகள் மற்றும் இலக்குகள்: தங்களின் ஆசைகள் மற்றும் இலக்குகளைப் பற்றி பெண்கள் கணவனிடம் முழுமையாக வெளிப்படுத்துவது இல்லை. இதற்கு முக்கிய காரணம் அவர்களின் கணவர்கள் தங்கள் ஆசைகளை புரிந்துகொண்டு ஆதரிக்க மாட்டார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு இருப்பதுதான். ஆனால், இன்றைய காலத்தில் பெரும்பாலும் கணவர்கள் பெண்களின் ஆசைகளைப் புரிந்து கொள்கிறார்கள். எனவே, பெண்கள் இனியும் தங்களது ஆசைகளை கணவனிடம் வெளிப்படுத்த அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு திருமண உறவில் வெளிப்படத் தன்மை என்பது மிகவும் முக்கியம். இருப்பினும் பெண்கள் சில விஷயங்களை கணவனிடம் இருந்து மறைக்கின்றனர். இதற்கு, மேலே குறிப்பிட்ட விஷயங்கள் காரணமாக இருக்கலாம். ஒரு ஆரோக்கியமான உறவை உருவாக்க, கணவர்கள் தங்கள் மனைவிகளை நம்பிக்கையுடன் இருக்க ஊக்குவிக்க வேண்டும். பெண்களும் அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்த தயங்கக்கூடாது. நம்பிக்கை, புரிதல், மரியாதை ஆகியவை ஒரு ஆரோக்கியமான திருமண உறவின் அடிப்படை என்பதைப் புரிந்துகொண்டு இருவரும் நடக்க வேண்டும்.