கணவன், மனைவி சண்டையை சமாதானத்துக்குக் கொண்டுவரும் எளிய 5 ஆலோசனைகள்!

கணவன் மனைவி சண்டை - சமாதானம்
கணவன் மனைவி சண்டை - சமாதானம்
Published on

‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்பார்கள். அதேபோல், கணவன் - மனைவி சண்டை இல்லாத குடும்பமே கிடையாது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அவை தொடரக்கூடாது. பொதுவான, ஒரு கருத்து உண்டு. கணவன் - மனைவிக்குள் சண்டை வந்தால் அது சில நிமிடங்களில் நீடிக்க வேண்டும். அப்படி நீடிக்கும் சண்டை சமாதானமாகி யாராவது ஒருவர் முதலில் பேச ஆரம்பித்து விட்டாலே போதும். எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டுவிடலாம்.

அதை விடுத்து, கணவன் - மனைவி சண்டையிட்டுக் கொண்டு வாரக்கணக்கிலும் மாதக்கணக்கிலும், ஏன் சிலர் வருடக் கணக்கிலும் முகம் கொடுத்துப் பேசாத தம்பதிகள் உண்டு. இதனால் பாதிக்கப்படுவது அவர்கள் வாழ்க்கையும் குழந்தைகள் வாழ்க்கையும்தான். ஏதோ காரணத்துக்காக சண்டையிட்டு விட்டோம். சரி, அடுத்தது என்ன செய்ய வேண்டும். இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பி சமாதானமாகப் பேசி அதை சரி செய்ய வேண்டும். எப்படி செய்வது என்றுதானே யோசிக்கிறீர்கள். அதற்கான 5 விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.

1. உணர்ச்சியின் தீவிரத்தை குறையுங்கள்: 24 மணி நேர விதி என்பது ஒரு பயனுள்ள உத்தியாகும். இதில் இணையர்கள் இருவருரின் மனமும் அமைதி கொள்ளும் வரை மிகவும் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி விவாதிப்பதை வேண்டுமென்றே ஒத்திவைக்கிறார்கள். இதன் மூலம் இருவருக்கும் இடையே அவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவும், செயலாக்கவும் போதுமான நேரம் கிடைக்கிறது. இதைப் பின்பற்றுவதன் மூலம் மோதல்கள் மேலும் தீவிரமடைவதைத் தடுக்கலாம். இது இணையர்களுக்குள் தெளிவான மனநிலையை ஏற்படுத்தி, பிரச்னையை புரிதலுடன் அணுக அனுமதித்து உணர்ச்சியின் தீவிரத்தை குறைக்கிறது.

2. நல்ல வார்த்தையைப் பயன்படுத்துங்கள்: உங்கள் இணையருடன் சில குறிப்பிட்ட வார்த்தை அல்லது சமிக்ஞையை உருவாக்குவதன் மூலம் மோதல்களை திறம்பட நிர்வகிக்கலாம். இணையர்களில் ஒருவர் உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும்போதோ அல்லது கலந்துரையாடலில் இருந்து சிறிது இடைவெளி வேண்டும் என நினைத்தாலோ, இது தெளிவான மற்றும் அர்த்தமுள்ள தகவல் தொடர்பு முறையாக இருக்கும். இதன் மூலம் அமைதியான மற்றும் தெளிவான கண்ணோட்டத்துடன் உரையாடலை தொடங்குவதற்கான நேரம் கிடைக்கிறது. இந்த அணுகுமுறையை பின்பற்றுவதால் இருவருக்கும் இடையிலான உறவில் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலை வலுப்படுத்த முடியும்.

3. உடல் ரீதியான தொடுகை: மோதல்களின்போது உடல் ரீதியான தொடுகை, ஒரு பாதுகாப்பையும், இணக்கத்தையும், நெருக்கத்தையும் தரும். மென்மையான தொடுதல்கள் அல்லது அணைப்புகள் உடலில் ஆக்ஸிடாஸின் வெளியீட்டை அதிகப்படுத்துகின்றன. கருத்து வேறுபாடுகள் மற்றும் வாக்குவாதங்களுக்கு மத்தியிலும் கூட, மன அழுத்தத்தைக் குறைப்பதிலும், உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை அதிகரிப்பதிலும் இந்த சிறப்பு ஹார்மோன் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதையும் படியுங்கள்:
பழைய சோற்றின் பாரம்பரியம் தெரியுமா?
கணவன் மனைவி சண்டை - சமாதானம்

4. வீடியோக்களை உருவாக்குதல் மற்றும் கடிதங்கள் எழுதுதல்: வீடியோக்களை உருவாக்கிக் காண்பிப்பது, கடிதங்கள் எழுதுவது போன்றவை வழக்கத்திற்கு மாறானதாகத் தெரியலாம். ஆனால், மோசமான உரையாடல்களின்போது, ​​குறிப்பாக சிக்கலான விஷயங்கள் பற்றிப் பேசும்போது, சிறந்த புரிதலையும் தெளிவையும் இது தருகிறது. விளக்கப்படங்கள், வரைபடங்கள் மற்றும் பிற காட்சிக் கருவிகளின் உதவியுடன் நம் மனதில் உள்ளவற்றை தெளிவாக எடுத்துரைக்க முடியும். இதேபோல், கடிதங்கள் எழுதுவதன் மூலம் மோதல்களின்போது தங்கள் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை கட்டுக்கோப்பாக மற்றும் சிந்தனைப்பூர்வமாக வெளிப்படுத்த முடியும்.

5. எப்போதும் ‘நான்‘ என்ற வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: மோதல்களின்போது, ‘நீ’ என்ற வார்த்தைக்குப் பதிலாக, ‘நான்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதால், நேர்மறையான, அமைதியான உணர்வை ஊக்குவிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக, ‘நீ எப்போதும் என்னைக் கோபப்படுத்துகிறாய்’ எனக் கூறுவதற்கு பதிலாக, ‘இதெல்லாம் நடப்பதைப் பார்த்து நான் சங்கடப்படுகிறேன்’ என சொல்லிப்பாருங்கள். இப்போது உங்கள் இணையை குற்றம் கூறியது போல் இருக்காது. உங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்தியது போலவே அமையும். இந்த அணுகுமுறை இருவருக்கும் இடையே உள்ள சிக்கலைத் தீர்க்கும் சூழலை வளர்க்கிறது. அங்கு இருவரும் தங்களது பிரச்னை கேட்கப்பட்டதாகவும் மதிக்கப்படுவதாகவும் உணர்கிறார்கள். இறுதியில் இது அவர்களுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com