கணவன் மனைவி உறவு என்பது மிகவும் உன்னதமானது. இதில் ஒளிவு மறைவுகள் இருக்கக்கூடாது என சொல்லப்பட்டாலும், சில விஷயங்களை கணவன்மார்கள் மனைவியிடம் இருந்து மறைப்பதால், குடும்ப வாழ்க்கை நல்லபடியாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த பதிவில் ஆண்கள் தன் மனைவியிடம் ஒருபோதும் சொல்லக்கூடாத 5 விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
1. பலவீனங்கள்: பொதுவாகவே நம்முடைய பலவீனத்தை யாரிடமும் நாம் பகிரக்கூடாது. என்னதான் மனைவியாகவே இருந்தாலும் நம்முடைய பலவீனத்தை அவர்களிடம் பகிர்ந்துவிட்டால், அதை சொல்லிக்காட்டி நம்மை கிண்டல் செய்வதோ, அல்லது அவர்களுக்கு வேண்டியவற்றை அடைய உங்கள் பலவீனத்தை முயற்சிக்கவும் செய்யலாம். எனவே ஒருபோதும் உங்கள் மனைவியிடம் உங்கள் பலவீனத்தை தெரியப்படுத்தாதீர்கள்.
2. உங்கள் அவமானம்: நீங்கள் ஏதோ ஒரு தருணத்தில் யார் மூலமாவது அவமானப்படுத்தப்பட்டிருந்தால், தப்பித் தவறிக் கூட உங்கள் மனைவியிடம் சொல்லிவிடாதீர்கள். இதை ஒவ்வொரு ஆணும் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒருவேளை கணவன் மனைவிக்கு மத்தியில் ஏதாவது பிரச்சனை வரும்போது, மனைவி தன் கணவன் அடைந்த அவமானத்தை சொல்லிக் காட்டி மேலும் அவமானப்படுத்தும் வாய்ப்புள்ளது.
3. வருமான ரகசியங்கள்: கணவன் தனக்கு எப்படியெல்லாம் வருமானம் வருகிறது சார்ந்த ரகசியங்களை ஒருபோதும் மனைவியிடம் பகிரக்கூடாது. ஏனெனில் பெண்களுக்கு ஆண்களின் வருமானம் பற்றிய உண்மை முழுவதும் தெரிந்துவிட்டால், ஒன்று, பெண்கள் மேலும் செலவுகளை செய்ய முற்படுவார்கள். அல்லது ஆண்கள் செய்யும் செலவுகளை தடுக்கத் தொடங்குவார்கள். இது ஆண்களுக்கு நல்லதல்ல. எனவே உங்கள் வருமானம் சார்ந்த முழு உண்மையை மனைவியிடம் பகிர வேண்டாம்.
4. சேமிப்பு ரகசியம்: எப்படி மனைவியிடம் சம்பாத்தியத்தை பற்றிய உண்மையை வெளிப்படுத்தக் கூடாதோ, அதேபோல நீங்கள் சேமிக்கும் பணம் சார்ந்த ரகசியங்களையும் ஒருபோதும் சொல்லக்கூடாது. உங்கள் சேமிப்பு ரகசியம் உங்கள் மனைவிக்குத் தெரிந்தால், ஏதோ ஒரு தருணத்தில் அதை செலவு செய்வதற்கு அவர்கள் பயன்படுத்த முயற்சிக்கலாம். அல்லது நீங்கள் திடீரென செலவு செய்யும்போது கேள்வி கேட்டு உங்களை துன்புறுத்தலாம். இது அதிக பணச்செலவை உங்களுக்கு ஏற்படுத்திவிடும்.
5. செய்யும் உதவி: எந்த உதவி செய்தாலும் அதை முடிந்தவரை மனைவிக்கு தெரியாமல் செய்ய முயலுங்கள். பிறருக்கு உதவும் தகவல்கள் எப்போதும் ரகசியமாக இருக்க வேண்டும். பிறருக்கு நீங்கள் உதவுவதை உங்கள் மனைவியிடம் பகிரும்போது, ஏதோ ஒரு தருணத்தில் உங்கள் மனைவிக்கானதை நீங்கள் செய்து கொடுக்காதபோது, “அவர்களுக்கு செய்வீர்கள் எனக்கு செய்ய முடியாதா?” என நீங்கள் செய்த தர்மத்தை சொல்லிக்காட்டி உங்களை மனவேதனை அடையச் செய்யும் வாய்ப்புள்ளது.