வீட்டின் வாசலில் இந்த 5 பொருட்களை ஒருபோதும் வைக்காதீங்க!

வாசலில் சில பொருட்களை வைப்பது நேர்மறை ஆற்றலைத் தடுத்து வறுமையை உண்டாக்கும்.
வாஸ்து தோஷம்
வாஸ்து தோஷம்Gemini image
Updated on

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என்று தனிச் சிறப்புண்டு. வீடு வாங்குவது முதல் வீட்டில் வைக்கும் பொருட்கள் வரை அனைத்திற்கும் வாஸ்து விதிகள் உள்ளன. அந்த வகையில் வீட்டின் நுழைவாயிலில் சில பொருட்களை வைக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. வீட்டின் நுழைவாயில் தான் ஒட்டுமொத்த வீட்டின் ஆற்றல் மற்றும் அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கும் இடமாகக் கூறப்படுகிறது. வீட்டின் முக்கிய நுழைவாயில் வழியாகவே நேர்மறை ஆற்றலும் (லட்சுமி கடாட்சம்), நல்ல காற்றும் வீட்டுக்குள் நுழைகின்றன. எனவே வாசலில் சில பொருட்களை வைக்கக் கூடாது என்று ஆன்மீக சாஸ்திரமும் அறிவியலும் ஒரு சேரக் கூறுகின்றன.

1. செருப்புகள் மற்றும் செருப்பு ஸ்டாண்ட்: 

சாஸ்திரப்படி, வாசற்படி என்பது லக்ஷ்மி தேவி குடியிருக்கும் இடம். இங்கு அழுக்கு மற்றும் அசுத்தமான செருப்புகளை விடுவது நேர்மறை ஆற்றலை தடை செய்யும். வறுமையையும் எதிர்மறை ஆற்றலையும் கொண்டுவரும். அறிவியல் படி வெளியே சென்று வரும் காலணிகளில் வெளிப்புறத்தில் இருக்கும் லட்சக்கணக்கான கிருமிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கும்.

வாஸ்து தோஷம்
வாஸ்து தோஷம்Gemini image

வாசல் காற்றோட்டமாக இருக்கும் போது இந்தக் கிருமிகள் காற்றின் மூலம் எளிதாக வீட்டிற்குள் பரவி நோய்த்தொற்றை உண்டாக்கும். எனவே செருப்புகள் மற்றும் செருப்பு ஸ்டாண்டை வீட்டு வாசலில் நுழைவாயிலுக்கு எதிரில் வைக்காமல் இருப்பது நல்லது.

2. குப்பைத் தொட்டி மற்றும் துடைப்பம்:

துடைப்பத்தை எல்லோர் கண்ணிலும் படும்படி வாசலில் வைக்கக்கூடாது. துடைப்பத்தை வாசலில் மற்றவர் பார்வையில் படும்படி வைத்தால் செல்வம் கரையும் என்று கூறப்படுகிறது. குப்பைத் தொட்டியை வாசலில் வைத்தால் அதிர்ஷ்டம் வீட்டை விட்டு வெளியேறிவிடும், பணவரவை குறைக்கும் மற்றும் வீட்டில் நிம்மதியைக் கெடுக்கும் என்றும் கூறப்படுகிறது. 

அறிவியல் படி வாசலில் துடைப்பம் இருந்தால் அதில் உள்ள தூசிகள் மற்றும் அழுக்குகள் காற்றில் பறந்து வந்து வீட்டுக்குள் மீண்டும் வந்து சேரும். அழுகும் குப்பைகள் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இது வாசல் வழியே வரும் சுத்தமான காற்றை மாசுபடுத்துவதுடன், ஈக்கள் மற்றும் கொசுக்களை ஈர்த்து ஆரோக்கியத்தைக் கெடுக்கும். வாசலில் துடைப்பம் இருந்தால் தடுமாறி விழும் ஆபத்தும் உண்டு.

இதையும் படியுங்கள்:
உங்க வீட்ல புறா தங்குதா.. அப்போ உங்களுக்கு அடிக்க போகுது பெரிய ஜாக்பாட்!
வாஸ்து தோஷம்

3. உடைந்த மற்றும் பழுதான கடிகாரம் போன்ற பொருட்கள் (Broken Items): 

சாஸ்திரப்படி உடைந்த நாற்காலி, கண்ணாடி அல்லது ஓடாத கடிகாரம் மற்றும் பழுதடைந்த எலக்ட்ரானிக் பொருட்களை வாசலில் வைப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்த்து குடும்ப முன்னேற்றத்தைத் தடை செய்யும் என்று கூறப்படுகிறது. அறிவியல் படி உடைந்த கண்ணாடி அல்லது கூர்மையான பொருட்கள் வாசலில் இருந்தால், வீட்டிற்குள் நுழைபவர்களுக்கு காயம் உண்டாகலாம். மேலும் வாசல் எப்போதும் ஆபத்து இல்லாத வழியைக் கொண்டிருக்க வேண்டும்.

4. முள் செடிகள், வாடிய மற்றும் காய்ந்த செடிகள்: 

சாஸ்திரப்படி கற்றாழை, ரோஜா, கள்ளிச்செடி போன்ற முள் உள்ள செடிகள் மற்றும் வாடி காய்ந்த செடிகள் வீட்டின் பிரதான வாசலில் இருந்தால் குடும்ப உறுப்பினர்கள் இடையே தேவையில்லாத சண்டைகளையும், மனக் கசப்புகளையும் உருவாக்கும். அத்துடன் வீட்டின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். வாடிய மற்றும் காய்ந்த செடிகள் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வருவதுடன், வீட்டில் துரதிஷ்டத்தையும் உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது. அறிவியல் படி வாசலில் முள் செடிகள் இருந்தால் ஆடைகளில் மாட்டிக் கிழியலாம் அல்லது வீட்டில் உள்ள சிறு குழந்தைகளுக்கு குத்தி காயத்தை ஏற்படுத்தலாம். காய்ந்த செடிகள் பூச்சிகளின் புகலிடமாக மாறலாம்.

இதையும் படியுங்கள்:
ஒட்டடை அடிக்கிறதே வேலையா போச்சா? இனி வீட்டுப் பக்கம் சிலந்தி வராது!
வாஸ்து தோஷம்

5. இருண்ட சூழல்: 

சாஸ்திரப்படி மாலை நேரத்திலும், இரவிலும் வீட்டின் வாசல் இருட்டாக இருக்கக் கூடாது. வெளிச்சம் இல்லாத வாசல் மூதேவியின் (அவலக்ஷ்மி) வருகையை ஊக்குவிக்கும் என்பதால் வாசலில் வெளிச்சம் தரும் விளக்குகளைப் போட்டு வெளிச்சமாக வைத்திருக்க வேண்டும்.

அறிவியல் படி இருட்டான வாசல் விஷப்பூச்சிகளுக்கு அடைக்கலமாக மாறும். அத்துடன் வீட்டுக்கு வருபவர்களுக்கும் பாதை சரியாகத் தெரியாமல் தடுமாற்றம் உண்டாகலாம்.

இந்த வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் வீட்டின் பிரதான வாசலில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை வாஸ்து தோஷம் அகற்றி, லட்சுமி கடாட்சம் மற்றும் நேர்மறை ஆற்றல் நிறைந்த அமைதியான வாழ்க்கைச் சூழலை உடனடியாக உருவாக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com