மாமியாரிடம் ஒருபோதும் பகிரக் கூடாத 5 விஷயங்கள்... மீறினால்?

5 Things You Should Never Share With Mother-in-law.
5 Things You Should Never Share With Mother-in-law.
Published on

தாய்-மகள் உறவு போலவே மாமியார்-மருமகள் உறவும் ஒரு குடும்பத்தின் முக்கிய அஸ்திவாரங்களில் ஒன்றாகும். இருப்பினும் இந்த உறவு பெரும்பாலும் சிக்கல்கள் மற்றும் மனக்கசப்புகளால் பாதிக்கப்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணம் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் இருப்பதே. குறிப்பாக, மருமகள் என்ன விஷயங்களை மாமியாரிடம் பகிர்ந்துகொள்ளலாம், எதை பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பது குறித்து தெரியாமல் போவதால், பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

மாமியார் மருமகள் உறவில் சிக்கல்களுக்கு காரணங்கள்: 

முதல் காரணமானது தலைமுறை இடைவெளிதான். இருவரும் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவரின் வாழ்க்கைமுறை, மதிப்புகள் நம்பிக்கைகள் ஆகியவற்றில் பெரிய வேறுபாடுகள் இருக்கும். அடுத்ததாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பார்கள். இந்த எதிர்பார்ப்புகள் பொருந்தாவிட்டால் மனக்கசப்பு ஏற்படலாம். 

ஒவ்வொரு குடும்பத்திலும் தனித்தனி பழக்கவழக்கங்கள் இருக்கும். இந்த பழக்க வழக்கங்களில் ஏற்படும் மோதல்கள் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சில சமயங்களில் தன் மகன் மீது தான்தான் அதிக பாசம் வைக்க வேண்டும் என மாமியார் நினைக்கலாம் அல்லது கணவனின் முழு கவனமும் தன் மீது மட்டுமே இருக்க வேண்டும் என மருமகள் நினைக்கலாம். இது பொறாமையைத் தூண்டி பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதுதவிர உறவினர்கள், நண்பர்கள் போன்ற வெளி ஆட்கள் இந்த உறவில் தலையிட்டு பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். 

மருமகள் மாமியாரிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாத விஷயங்கள்: 

  1. கணவரைப் பற்றிய எந்தவித குறைபாடுகளையும் மாமியாரிடம் மருமகள் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இது மாமியாரின் மனதை புண்படுத்தி இருவரின் உறவையும் கெடுக்கும். 

  2. தனது தனிப்பட்ட விஷயங்கள், குறிப்பாக கடந்த கால உறவுகள், ஆரோக்கிய பிரச்சனைகள் போன்றவற்றை மாமியாரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. இது அவர்களுக்கு இடையே தேவையற்ற தூரத்தை ஏற்படுத்தும். 

  3. கணவருடன் ஏற்படும் சண்டைகள் கருத்து வேறுபாடுகளை மாமியாரிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும். 

  4. மாமியாரின் மற்ற குடும்ப உறுப்பினர்கள் குறித்த எதிர்மறையான கருத்துக்களை ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது. இது குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தும். 

  5. பணம் தொடர்பான பிரச்சனைகள், கடன் செலவுகள் போன்றவற்றை மாமியாரிடம் மருமகள் பகிர் வேண்டிய அவசியமில்லை. இது இருவரின் உறவில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தக்கூடும். 

இதையும் படியுங்கள்:
மாமியார் - மருமகள் ஒற்றுமைக்கு அவசியம் அறிய வேண்டிய விஷயங்கள்!
5 Things You Should Never Share With Mother-in-law.

மாமியார் - மருமகள் உறவு என்பது மிகவும் நுட்பமான உறவு. இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் மரியாதை, பொறுமை மற்றும் புரிதலுடன் நடந்து கொள்ள வேண்டும். மருமகள் மாமியாரிடம் என்ன விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம், என்ன விஷயங்களை பகிர்ந்துகொள்ளக் கூடாது என்பதைப் பற்றி தெளிவாக இருப்பது மிகவும் முக்கியம். ஏதேனும் பிரச்சனை என்றால், இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசி தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்துக் கொள்வது நல்லது. ஒரு நல்ல உறவுக்கு இருவரின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com