பெண்களை மன அழுத்தத்திலிருந்து விடுவிடுத்து மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் 5 ஆலோசனைகள்!

பெண்கள் மகிழ்ச்சிக்கு 5 ஆலோசனைகள்
பெண்கள் மகிழ்ச்சிக்கு 5 ஆலோசனைகள்
Published on

ரு ஆண் எப்போதும் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதில் ஆர்வமாக இருக்கிறான். ஆனால், பெண் தனது சந்தோஷங்களை எப்போதும் சந்தேகத்துடன் அணுகுகிறாள். பெண் என்றால் எப்போதும் தியாகியாக, சோகத்தை விரும்பிச் சுமப்பவளாக இருக்க வேண்டும் என்று சமூகம் ஆண்டாண்டு காலமாக அவளுக்கு நிர்ப்பந்தித்துள்ளது. மகிழ்ச்சியாக இருந்தால் தன்னைச் சுயநலவாதி என்று சொல்லி விடுவார்களோ என்ற எண்ணம் அவர்களைச் சிரிப்பதற்கும்கூடத் தயங்க வைக்கும்.

பெண்கள் தங்கள் மனத்தில் உள்ள சின்னச் சின்ன ஆசைகளை வெளிப்படையாகச் சொல்ல நாம் பழக்கப்படுத்தியுள்ளோமா? அப்படி அவர்கள் சொல்லும்போது அவற்றை எத்தனை பேர் காது கொடுத்துக் கேட்கின்றனர்? இப்படியான சூழலிலிருந்து பெண் தனக்கான தேவைகளை, தனது விருப்பங்களைத் தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வாய்ப்புகள் எவை என்பதை பற்றிய 5 ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கவும்: எப்பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் அந்தந்தத் தருணங்களை மகிழ்ச்சியாக அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு அவுட்டிங் சென்று மாலை நேர காபி குடிக்கும்பொழுது காலையில் நடந்த வீட்டுச் சண்டைகளை அசைபோடுவதை நிறுத்தலாம். அந்தக் காபியின் மணம், சுவை என ரம்யமான சூழலில் கரைந்து போகலாம். உங்களது மகிழ்ச்சியை யாராலும் தொந்தரவு செய்ய முடியாது என்பதில் உறுதியாக இருக்கலாம். இந்த நேரத்தில் செல்போனில் தொலைவதையும் தொலைக்காட்சி பார்ப்பதையும் தவிர்த்திடுங்கள்.

எந்தச் சூழலிலும் அங்கே அந்த நிமிடத்தில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் எந்த விஷயங்களுக்காக நன்றியுடன் இருக்க முடியும் என்பதைக் கவனிக்கலாம். இனிமையான நினைவுகளில் மூழ்கலாம். இப்படி உங்களது மனதை பாசிட்டிவாக மாற்றிக்கொள்வதன் மூலம் நீங்கள் கவலைகளைக் கரைந்து போகச் செய்யலாம்.

2. பிடித்தமான உடற்பயிற்சியைச் செய்யவும்: நீங்கள் எந்த விளையாட்டில் மூழ்கும்போது, எப்படிப்பட்ட உடற்பயிற்சியைச் செய்யும்போது, எண்டோர்பின்கள் உங்களது மூளையில் உருவாகிறது என்று கண்டறியலாம். உங்களுக்குப் பிடித்த விளையாட்டை அன்றாட வழக்கமாக்கிக் கொள்ளலாம். உடற்பயிற்சி உங்களை மகிழ்ச்சியாக உணரச் செய்வதோடு, ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உடற்பயிற்சியின்போது கிடைக்கும் நட்பு வட்டமும் உங்களை ரிலாக்ஸ்டாக உணரச் செய்யும்.

இதையும் படியுங்கள்:
உயர் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும் 6 வகை மூலிகை மற்றும் ஸ்நாக்ஸ்!
பெண்கள் மகிழ்ச்சிக்கு 5 ஆலோசனைகள்

3. நண்பர்களிடம் மனம் திறந்து பேசவும்: மன அழுத்தத்தின்போது நண்பர்களின் ஆதரவு மிகப்பெரிய மாயங்களைச் செய்கிறது. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மனம் திறந்து பேசுங்கள். இதனால் மனத்தின் பாரம் குறையும்/ சில பிரச்னைகளைக் கையாள்வதற்கான வழிகள் கிடைக்கும். வாழ்க்கை உங்களுக்கு எளிதாகத் தோன்றும்.

4. நகைச்சுவை உணர்வு தேவை: யூடியூப்பில் நகைச்சுவைகளைப் பார்த்துச் சிரிப்பது. கேலி செய்வது அல்லது வேடிக்கையான வீடியோக்களைப் பார்த்துச் சிரிப்பது அனைத்தும் உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும் வழிகள். அதிர்ச்சி, நோய் மற்றும் மன அழுத்தத்தின் வலியைக் குறைக்க நீங்கள் நகைச்சுவையைப் பயன்படுத்தலாம். இது உங்கள் மகிழ்ச்சிக்கு நல்லது. ஏனெனில் நகைச்சுவை உணர்வே வாழ்க்கையின் நேர்மறையான பக்கத்தைப் பார்க்க உதவுகிறது.

5. வாசிப்பின் கதவுகளைத் திறக்கவும்: வாசிப்பு உங்களுக்கான புதிய கதவுகளைத் திறந்துவிடுகிறது. உங்களுக்குப் பிடித்தமான கற்பனைகளை உணர வாசிப்பு மிகவும் உதவும். பிடித்தமான புத்தகங்களை படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வாழ்வில் சந்திக்கும் பலவிதமான சிக்கல்களுக்குப் புத்தகத்தில் படிக்கும் விஷயங்களில் இருந்து தீர்வு கிடைக்கலாம். நமது நேரத்தை இனிமையாக்கி, மனதை அமைதியாக்கும் வாசிப்பை எப்போதும் தொடருங்கள்.

மேற்கண்ட 5 குறிப்புகளை உங்கள் வாழ்வில் எப்போதும் பின்பற்றுங்கள். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி எப்பொழுதும் உங்களுடனேயே இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com