சந்தேகம் எனும் பேராபத்துக்கு தீர்வு காணும் 5 ஆலோசனைகள்!

சந்தேகக் கணவன், மனைவி
சந்தேகக் கணவன், மனைவி
Published on

திருமணம் என்னும் பலமான பந்தத்தை அசைத்துப் பார்க்கக்கூடிய பேராயுதம் ‘சந்தேகம்’ என்றால் அது மிகையல்ல. ஏனென்றால் எந்த அளவுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையை சந்தேகம் கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் இருவருக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கக் கூடும். வீட்டில் சாதாரணமாக நடைபெறும் சண்டைகள் உடனுக்குடன் முடிவுக்கு வந்துவிடும். ஆனால், இந்த சந்தேகம் மட்டும் மனதில் நீங்காமல் இடம் பிடித்துக்கொள்ளும். சந்தேகமே பல சண்டைகளுக்கு அடிப்படையாகவும் அமைந்துவிடும். இதன் காரணமாக நாளடைவில் இருவரும் விவாகரத்து பெறக்கூடிய சூழல் கூட வந்துவிடலாம். ஆகவே, சந்தேகத்தை போக்குவதற்கான ஆக்கபூர்வமான யோசனைகள் குறித்து நாம் பரிசீலனை செய்ய வேண்டும். கணவன், மனைவி இருவரிடையே உண்டாகும் சந்தேகத்துக்கு தீர்வு காணும் 5 ஆலோசனைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. சந்தேகம் என்னவென்று பரிசீலனை செய்யுங்கள்: உங்கள் கணவர் அல்லது மனைவியின் செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்துவிட்டால், உங்கள் மனதில் அதுகுறித்த அச்சம் நிலைகொண்டிருக்கும். எடுத்த எடுப்பிலேயே இதனைக் கேட்டு விட முடியாது. அதேசமயம் மனதிற்குள் பூட்டி வைத்திருந்தாலும் சந்தேகம் அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது. ஆகவே, உங்கள் மனதில் தோன்றும் சந்தேகம் சரிதானா என்பதை ஒன்றுக்கு பலமுறை எடை போட்டு பரிசீலனை செய்யுங்கள்.

2. மனம் விட்டுப் பேசவும்: உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டுப் பேசுவதுதான் எந்த ஒரு பிரச்னைக்கும் சிறந்த தீர்வாக அமையும். ஒரு சார்பாக நீங்கள் மறைத்து வைத்திருக்கும் சந்தேகம் இன்னும் பல கேள்விகளுக்கு வழி ஏற்படுத்தும். ஆகவே, எதுவாக இருந்தாலும் சரியான தருணம் பார்த்து வாழ்க்கை துணையுடன் கலந்து ஆலோசிக்கவும். குறிப்பாக, கனிவான தோரணையுடன் பேசத் தொடங்கவும். என்ன காரணங்களால் நீங்கள் சந்தேகம் கொள்கிறீர்கள் என்பதை விளக்கமாகக் கூறவும்.

3. ஒப்புக்கொள்ளுங்கள்: பொருத்தமானதாக இருக்க முடியாது. ஏதேனும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். உங்கள் வாழ்க்கை துணையிடமும் சிறு குறைபாடுகள் இருக்கலாம். சில சமயம் தவறான புரிதல்கள் காரணமாக பிரச்னைகள் தோன்றலாம். ஒருவேளை உங்கள் வாழ்க்கை துணைக்கு உங்கள் கண்ணோட்டத்தில் இருந்து மாறுபட்ட சிந்தனை இருந்தால் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
15,000 முட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ராட்சத ஆம்லெட் திருவிழா பற்றி தெரியுமா?
சந்தேகக் கணவன், மனைவி

4. எதிர்மறையான சிந்தனை தவிர்க்கவும்: மழைக்காலத்தை நீங்கள் ஆனந்தமாய் ரசித்துக் கொண்டிருக்கும்போது, கீழே வழுக்கி விழும் நபரை பார்க்காத வரையில் நாமும் வழுக்கி விழுந்து விடுவோமோ என்ற சந்தேகம் உங்கள் மனதில் வராது. அதுபோலத்தான் வாழ்க்கையும். ஏதேனும் எதிர்மறையான விஷயங்களை பார்க்கும்போது அல்லது அதனுடன் ஒன்றிணைந்து செல்லும்போதுதான், அவை நம் வாழ்க்கையிலும் எதிரொலிக்குமோ என்ற அச்சம் ஏற்படும். ஆகவே, அவற்றிலிருந்து விலகி இருக்கவும். குறிப்பாக, யோகா மற்றும் தியானம் செய்வது நல்ல பலனைத் தரும்.

5. அதிகமான யோசனை கூடாது: எதையும் அளவுக்கு அதிகமாக யோசனை செய்வது வெற்றிக்கு உதவாது. யோசிக்கிறோம் என்ற பெயரில் நம் மனதில் கவலையும், பதற்றமும் அதிகரிக்குமே தவிர, எந்த ஒரு விஷயத்திற்கும் அது தீர்வாக அமையாது. ஆகவே, மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசி தீர்வு காணவும்.

மேற்கண்டவற்றை கடைபிடித்து பாருங்கள். கணவன், மனைவி இடயே சந்தேகம் என்ற நோய் முற்றிலும் அகன்று மகிழ்ச்சியான மனநிலை இருக்கும். அதுவே நம் வாழ்க்கையை உயர்த்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com