குழந்தைகளின் அடம் பிடிக்கும் குணத்தை போக்கும் 5 ட்ரிக்ஸ்கள்!

5 tricks to get rid of stubbornness in children
5 tricks to get rid of stubbornness in children
Published on

குழந்தைகள் என்றாலே நம்முடைய செல்லங்கள்தான். ஆனால், அவர்கள் அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டால், நமக்கு வரும் கோபமோ அலாதி. பிடிவாதமாய் இருக்கும் பெரியோர்களை சமாளித்து விடலாம். ஆனால், குழந்தைகளை சமாளித்து அவர்களை சமாதானம் செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. உங்கள் வீட்டுப் பிள்ளைகள் ரொம்ப அடம் பிடிக்கிறார்களா? கவலையை விடுங்கள். அவர்களை ஈசியாக சமாதானம் செய்து விடலாம். ஆனால், அதற்கு நீங்கள் இந்த ட்ரிக்ஸ்களை பயன்படுத்த வேண்டும்.

1. அதிகம் பேச வேண்டாம்: குறும்புக்கார குழந்தைகளிடம் நிறையப் பேசுவது வீண். மாறாக, எவ்வளவு மௌனமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு வாக்குவாதம் அங்கே நடைபெறாது. எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எதை கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். ஆனால், உங்களின் இந்தப் பழக்கம்தான் அவர்களை பிடிவாதமாக ஆக்குகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, அவர்கள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களுக்குத் தேவையுள்ளதை மட்டுமே வாங்கிக் கொடுங்கள். இதன் மூலம், குழந்தைகள் புரிந்துகொள்ளும் போக்கை வளர்த்துக் கொள்கிறார்கள்.

2. கோபப்பட வேண்டாம்: குழந்தைகள் அன்பை விரும்புகிறார்கள். எனவே, அலுவலகப் பிரச்னைகள், குடும்பப் பிரச்னைகளை குழந்தைகள் மீது காட்டாதீர்கள். உண்மையில்,  பெற்றோர்களுக்கு நிறைய  மன அழுத்தங்கள் உள்ளன. இதனால் குழந்தையின் மனம் மிகவும் பாதிக்கப்படும். உங்கள் கோபம் குழந்தையின் மனதில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. இது உங்கள் மீது நீண்டகால வெறுப்புக்கு வழிவகுக்கும்.

3. அடிக்க வேண்டாம்: குழந்தைகளின் நடத்தைகள் சில சமயங்களில் எரிச்சலூட்டும். இதனால் பல பெற்றோர்கள் அவர்களை திட்டவும், அடிக்கவும் செய்கிறார்கள். அவ்வாறு அடிப்பது அவர்களை மேலும் கோபப்படுத்தலாம். உண்மையில், அது அவர்களை மேலும் பிடிவாதமாக ஆக்கும் அபாயத்தில் உள்ளது. எனவே, நீங்கள் பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். பின் அவர்களுக்கு மெதுவாக விளக்கவும்.

4. அதிக ஒழுக்கம் அவசியமில்லை: குழந்தைகளுக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியம். ஆனால், இது அதிகப்படியான பிரச்னைகளை ஏற்படுத்தும். ஒழுக்கம் என்ற பெயரில் ஒவ்வொரு சிறு விஷயத்திற்கும் குழந்தைகளை தண்டிப்பது நல்லதல்ல. இது அவர்களின் பிடிவாதத்தை மேலும் வளர்க்கும். மேலும், பெற்றோர்கள் சொல்லை கேட்க விரும்புவதில்லை. எனவே குழந்தைகளிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருக இவற்றைச் செய்தாலே போதும்!
5 tricks to get rid of stubbornness in children

5. தவறுகளை விளக்குங்கள்: அவர்களுக்கு எது சரி, எது தவறு என்ற புரிதல் குறைவாக இருப்பதால் சரி, தவறு பற்றி சொல்லுங்கள். குழந்தைகளின் நடத்தை சில நேரங்களில் கோபப்பட வைக்கும். குறிப்பாக, தெரியாமல் செய்த சில தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கு பதிலாகச் சிரித்தால் அதுதான் சரி என்ற உணர்வு போய்விடும். எனவே, தவறுகளை மெதுவாக விளக்கவும். அதனால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உங்கள் சரியான-தவறான முடிவுக்காக அவர்கள் காத்திருக்க முடியும்.

மேற்கண்ட ஐந்து ட்ரிக்ஸ்களை பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளை அடம்பிடிக்கும் குணத்திலிருந்து மீட்டெடுங்கள். பிறகு பாருங்கள் அவர்கள் பட்டாம்பூச்சாய் பறப்பார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com