
நட்புங்கிறது வாழ்க்கையில ரொம்ப முக்கியமான ஒண்ணு. நல்ல நண்பர்கள் நம்மள ஊக்கப்படுத்துவாங்க, கஷ்டத்துல தோள் கொடுப்பாங்க, சந்தோஷத்தை பகிர்ந்துப்பாங்க. ஆனா, சில சமயம் நாம ரொம்ப நம்புற சில நண்பர்கள், நம்மளையே கீழே இழுக்க ஆரம்பிப்பாங்க. அது நமக்கு தெரியாமலே கூட நடக்கலாம். அந்த மாதிரி நட்புகள் உங்க வாழ்க்கையில எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். உங்க நட்புறவு ஆரோக்கியமா இல்லையான்னு தெரிஞ்சுக்க உதவும் 6 Red flags என்னென்னனு இங்க பார்ப்போம்.
1. ஒரு உண்மையான நண்பன் உங்க தவறுகளை சுட்டிக்காட்டுவான். ஆனா, எப்பவும் உங்களோட குறைகளையே பேசிக்கிட்டு, உங்களை மட்டம் தட்டிக்கிட்டே இருந்தா அது ஆரோக்கியமான நட்பு இல்லை. "உன்னால இது முடியாது", "நீ அதுக்கு சரிப்பட மாட்ட"ன்னு சொல்லி உங்க தன்னம்பிக்கையை குறைக்கிறவங்க நண்பர்களா இருக்க முடியாது.
2. நீங்க ஒரு விஷயத்துல நல்லா பண்ணா, அவங்க உங்களை வாழ்த்தாம, "இதைவிட நான் பெஸ்ட்டா பண்ணுவேன்"னு போட்டி போட்டு உங்களை தோற்கடிக்க நினைப்பாங்க. உங்களோட வெற்றியை அவங்களோட தோல்வியா பார்க்கிறவங்க, உண்மையான நண்பர்களா இருக்க மாட்டாங்க.
3. நீங்க சந்தோஷமா இருக்கும்போது, அவங்க அதை பார்த்து சந்தோஷப்படாம, ஒருவித பொறாமையோட இருப்பாங்க. உங்க மகிழ்ச்சியில பங்கு எடுத்துக்காம, அதை ஏதோ ஒரு காரணத்துக்காக குறைச்சு மதிப்பிடுவாங்க.
4. அவங்களுக்கு ஒரு தேவைனா மட்டும் உங்களை தேடி வருவாங்க. உங்க தேவைனா கண்டுகொள்ள மாட்டாங்க. எல்லா விஷயத்துலயும் அவங்க நலனை மட்டுமே பார்க்குறவங்க, சுயநலவாதிகள்தான்.
5. நண்பர்கள்கிட்ட நாம நிறைய ரகசியங்களை பகிர்ந்துப்போம். அந்த ரகசியங்களை மத்தவங்ககிட்ட சொல்லி, உங்களை சங்கடப்படுத்தினா, அது ஒரு பெரிய 'ரெட் ஃபளாக்'. நம்பிக்கையை உடைக்கிறவங்க உண்மையான நண்பர்களா இருக்க முடியாது.
6. மற்ற நண்பர்கள்கிட்ட இருந்து உங்களை பிரிச்சு, அவங்க கூட மட்டுமே இருக்கணும்னு எதிர்பார்க்குறது. இல்லனா, மத்தவங்ககூட நீங்க பழகும்போது ஒருவித பொறாமையை காட்டறது. இந்த மாதிரி நடக்கும்போது, உங்களை ஒரு வட்டத்துக்குள்ள அடைக்க முயற்சி செய்றாங்கன்னு அர்த்தம்.
இந்த 6 அறிகுறிகள் உங்க நட்புல இருந்தா, அந்த உறவை நீங்க மறுபரிசீலனை செய்யணும். சில சமயம் இப்படிப்பட்ட நட்பு உங்க மன அமைதியையும், வளர்ச்சியையும் ரொம்பவே பாதிக்கும்.