குழந்தைகளுக்கு OCD இருப்பதை உணர்த்தும் 6 அறிகுறிகள்! 

OCD Kid
6 Signs That Kids Have OCD!
Published on

குழந்தைகளின் மனவளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி பெற்றோர்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். சில சமயங்களில் குழந்தைகளின் சில நடத்தைகள் பெற்றோர்களுக்கு கவலை அளிக்கலாம். அவற்றில் ஒன்றுதான் Obsessive Compulsive Disorder (OCD). இது பொதுவாக பெரியோர்களுக்கு மட்டுமே ஏற்படும் என நினைக்கின்றனர். ஆனால், இது குழந்தைகளையும் பாதிக்கலாம். இந்தப் பதிவில் குழந்தைகளுக்கு OCD இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்.‌

  1. OCD உள்ள குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட செயலை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பார்கள்.‌ உதாரணமாக, கைகளை அடிக்கடி கழுவுதல், பொருட்களை ஒரு குறிப்பிட்ட வரிசையில் வைத்தல், கதவுகளை பலமுறை சரி பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இந்த செயல்களை செய்யாமல் இருந்தால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். 

  2. அசுத்தம், நோய்த் தொற்று, தீங்கு ஏற்படுவது போன்றவற்றைப் பற்றி OCD உள்ள குழந்தைகள் அதிகமாக கவலைப்படுவார்கள். அவர்கள் தங்களது சுற்றுப்புறத்தைத் தொடர்ந்து கண்காணித்து தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். 

  3. இவர்கள் எளிதில் மனச்சோர்வுக்கு ஆளாகலாம். தங்களை தனிமைப்படுத்திக் கொள்வார்கள். யாருடனும் பேச மாட்டார்கள். பள்ளி நண்பர்களுடன் கூட தொடர்பு கொள்ளத் தயங்குவார்கள். 

  4. மேலும், அவர்களுக்கு கோபம் அதிகமாக வரும். பொறுமை சுத்தமாக இருக்காது. அவர்கள் விரும்பும் விஷயங்களைத் தடுக்க முயற்சிக்கும்போது அவர்கள் அதிகமாக கோபத்தை வெளிப்படுத்துவார்கள். 

  5. OCD காரணமாக குழந்தைகளுக்கு தூக்கம் இல்லாமல் போகலாம். அல்லது அடிக்கடி இரவில் விழித்துக் கொள்ளும் பிரச்சனை இருக்கலாம். இவர்களது நடத்தை இவர்களுக்கே ஒரு நெருடலை ஏற்படுத்தி, பிறர் இவற்றைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று அச்சப்படுவார்கள். இதனால் வெளியுலகத் தொடர்பை முற்றிலுமாகத் தவிர்ப்பார்கள். 

  6. OCD உள்ள குழந்தைகளுக்கு கவனம் செலுத்துவதில் சிரமம் இருக்கும். அவர்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல், எளிதில் எல்லா விஷயங்களிலும் திசைதிருப்பப்படுவார்கள். இதனால், அவர்களால் எதிலும் முறையாக செயல்பட முடியாது. 

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தை பற்றிய புகழ்ச்சி மற்றவர் மனதைப் புண்படுத்தும் என்பதை அறிவீர்களா?
OCD Kid

குழந்தைகளுக்கு OCD பாதிப்பு இருப்பதைக் கண்டறிவது கடினம்.‌ ஏனென்றால், சில குழந்தைகள் தங்கள் நடத்தைகளை அவ்வளவு எளிதில் வெளிப்படுத்த மாட்டார்கள். மேலும், சில சமயங்களில் இந்த அறிகுறிகள் மற்ற மனநலக் கோளாறுகளின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். எனவே, உங்கள் குழந்தைக்கு மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால், ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகி உடனடியாக ஆலோசிப்பது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com