ஒரு வீட்டின் இதயமாகக் கருதப்படுவது கிச்சன். இதன் சுகாதாரமும், பாதுகாப்பும் மிகவும் முக்கியமானது. இது நாம் தினமும் உணவை தயாரிக்கும் இடமாக இருப்பதால், கிச்சனில் உள்ள பொருட்கள் நம்முடைய உடல் நலத்தை நேரடியாக பாதிக்கின்றன. சில பொருட்கள் அவற்றின் தன்மை காரணமாக கிச்சனில் வைக்கப்படும்போது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இந்தப் பதிவில் கிச்சனில் வைக்கக்கூடாத 6 முக்கியப் பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.
மரப்பெட்டி மற்றும் காகிதப்பெட்டி: மரப்பெட்டி, காகிதப்பெட்டி ஆகியவை ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சிகொள்ளும் தன்மை கொண்டவை. இதனால், பூச்சிகள் பாக்டீரியாக்கள் இவற்றில் எளிதில் பெருகி உணவுப் பொருட்களை கெடுத்துவிடும். மேலும், மரப்பெட்டிகளில் இருந்து வெளியேறும் மரத்தூள் உணவுப் பொருட்களில் கலந்து ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பழைய துணிகள்: கிச்சனில் பழைய துணிகளைப் பயன்படுத்தி பொருட்களைத் துடைப்பது போன்ற பழக்கங்கள் பலருக்கு இருக்கும். ஆனால், அந்தப் பழைய துணிகளில் பாக்டீரியாக்கள் எளிதில் ஒட்டிக்கொள்ளும். இவை உணவுப் பொருட்களில் கலந்து நோயைப் பரப்பலாம்.
மஞ்சள் நிற பிளாஸ்டிக்: மஞ்சள் நிற பிளாஸ்டிக் பொருட்கள் குறிப்பாக உணவுப் பொருட்களை சேமித்து வைக்கப் பயன்படுத்தும் டப்பாக்கள், வெப்பத்தின் தாக்கத்தால் நச்சுப் பொருள்களை வெளியேற்றும். இவை உணவுடன் கலக்கும்போது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
உடைந்த கண்ணாடி பொருட்கள்: உடைந்த கண்ணாடி பொருட்களின் கூர்மையான பகுதிகள் காயத்தை உண்டாக்கும். மேலும் அந்தத் துண்டுகள் சில சமயங்களில் உணவில் விழுந்து கலந்துவிட்டால் பெரும் ஆபத்தாக முடிந்துவிடும்.
மின்சாதனப் பொருட்கள்: டோஸ்டர், மிக்சி போன்ற மின்சார உபகரணங்களை பயன்படுத்திய பின்னர், அப்படியே கிச்சனில் விடக்கூடாது. இவை குழந்தைகளைக் கவர்ந்து அவர்கள் விளையாடும்போது மின்சார ஷாக் ஏற்பட வாய்ப்புள்ளது.
பழைய செய்தித்தாள்கள்: செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் மை உணவில் கலக்கும்போது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். மேலும், செய்தித்தாள்கள் ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சிக்கொள்ளும் தன்மை கொண்டவை என்பதால், பூச்சிகள், பாக்டீரியாக்கள் இவற்றில் எளிதில் பெருகி உணவுப் பொருட்களை கெடுத்துவிடும்.
எனவே, மேலே குறிப்பிட்ட 6 பொருட்களை கிச்சனில் வைப்பதைத் தவிர்ப்பதன் மூலம் உடல் நலத்தையும் குடும்ப பாதுகாப்பையும் உறுதி செய்யலாம். மேலும், கிச்சனை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதால் நம்முடைய மன அமைதியும் பாதுகாக்கப்படும்.