Office Chair வாங்கப் போறீங்களா? Wait.. Wait.. இதத் தெரிஞ்சுக்கிட்டு வாங்குங்க!

office chair
6 things to consider when buying an office chair for home!
Published on

வீட்டில் இருந்து பணிபுரியும் நபர்களுக்கு ஒரு நல்ல ஆபீஸ் சேர் என்பது, நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்யும் நம்முடைய உடல் நலத்திற்கு மிகவும் முக்கியமானது. சரியான சேரை தேர்ந்தெடுப்பது என்பது முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.‌ இந்தப் பதிவில் ஒரு ஆபீஸ் சேர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றி பார்க்கலாம். 

1. சரியான உயரம்: ஒரு ஆபீஸ் சேர் என்பது சரியான உயரத்தில் இருக்க வேண்டும். உட்காரும்போது கால்கள் தரையை முழுமையாகத் தொட வேண்டும்.‌ முழங்கால்கள் 90 டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும்.  மேஜையின் உயரம் கைமுனையைத் தொடும்போது, முழங்கை 90 டிகிரி கோணத்தில் இருக்கும் வகையில் சரியாக இருக்க வேண்டும்.‌

2. முதுகுப்பகுதி ஆதரவு: முதுகுத்தண்டு வளைவுகளை ஆதரிக்கும் வகையில் சேரின் முதுகுப்பகுதி இருக்க வேண்டும். நம்முடைய முதுகுத்தண்டு வளைவுகளைப் பொறுத்து சேரின் வளைவு மாறுபடும். எனவே, கீழ் முதுகுக்கு ஆதரவு இருக்கும் சேர்கள் மிகவும் சிறந்தவை. 

3. கைப்பிடிகள்: சேரின் கைப்பிடிகள் முழங்கைகளை சரியான நிலையில் வைத்திருக்க உதவும். கைப்பிடிகள் எளிதில் அட்ஜஸ்ட் செய்யும் வகையில் இருப்பது நல்லது. மேலும், இவை மென்மையான பொருட்களால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். 

4. இருக்கை: நாம் உட்காரும் இருக்கை மென்மையாகவும், வசதியாகவும் இருக்க வேண்டும். இருக்கையின் அகலம், உங்கள் உடலுக்கு பொருத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதுவும் அட்ஜஸ்ட் செய்யும் வகையில் இருப்பது நல்லது. 

இதையும் படியுங்கள்:
கை விரல் மூட்டுகளில் கருப்பாக உள்ளதா? இனி நோ கவலை! இதை ட்ரை பண்ணுங்க...!
office chair

5. பொருள்: சேர் நீடித்து உழைக்கும் பொருளால் ஆனதாக இருக்க வேண்டும்.‌ வலை, தோல், பேப்ரிக் போன்ற பொருட்கள் பொதுவாக இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. உங்களது தேவைகளுக்கு ஏற்ப பொருளைத் தேர்வு செய்து வாங்கவும். 

6. விலை: எப்போதும் உங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப சேரை தேர்வு செய்யவும். விலை அதிகமாக இருப்பதால், நல்ல சேர் என அர்த்தமில்லை. உங்களுக்குத் தேவையான எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு, உங்களது தேவைகளுக்கு ஏற்ப சரியான சேரை தேர்வு செய்யவும். 

ஒரு நல்ல ஆபீஸ் சேர் வாங்குவது என்பது நீண்ட காலத்திற்கு உங்கள் உடல் நலனைப் பாதுகாப்பதற்கான முதலீடாகும். மேற்கண்ட 6 விஷயங்களைக் கருத்தில் கொண்டு உங்களுக்கு ஏற்ற சரியான சேரை தேர்வு செய்து வாங்குங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com