முதுமையில் மகிழ்ச்சியாக வாழ கடைபிடிக்க வேண்டிய 6 விஷயங்கள்!

முதுமைக்கால மகிழ்ச்சி
முதுமைக்கால மகிழ்ச்சி

யதாகி விட்டாலே பலருக்கும் மகிழ்ச்சி என்பது தொலைந்து போகும். அதற்குக் காரணம் தள்ளாமை, இல்லாமை, நோய்கள் என ஆட்டிப் படைக்கும் காரணங்கள்தான். ஆனால், இவற்றைக் கடந்தும் முதுமையில் மகிழ்ச்சியாக வாழலாம். அது நம் கையில்தான் இருக்கிறது.

1. குடும்பப் பொறுப்புகளிலிருந்து ஒதுக்கப்படுவதையும், பதவியில் இருந்ததன் மூலம் சமூகத்தில் அனுபவித்து வந்த அந்தஸ்துகளை இழப்பதையும், எந்தக் கசப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவராக இருப்பினும், எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருப்பினும், முதுமை உங்களை ஒரு சராசரி மனிதராக மாற்றிவிடும். இதைப் புரிந்துகொள்ளுங்கள். சிகரத்தில் ஏறிய எவரும் அங்கேயே இருப்பதில்லை. கீழே இறங்கி வந்துதான் ஆக வேண்டும். வாழ்க்கையும் அப்படிப்பட்டதே! தாமரை இலை மீது உருளும் தண்ணீர்த் துளி போலப் பற்றற்று வாழப் பழகுங்கள்.

2. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இளமைக்கால நண்பர்களையும் உடன் பணிபுரிந்த ஊழியர்களையும் தவறாமல் சந்தியுங்கள். ஏனென்றால், நாட்கள் செல்லச் செல்ல அதுபோன்ற வாய்ப்புகள் உங்களுக்கு அரிதாகவே கிடைக்கும். அவர்களுடன் வாக்கிங் செல்வது, உணவு அருந்துவது, கோயில்களுக்குச் செல்வது. சுற்றுலா போவது என நேரத்தைச் செலவிடுங்கள். அவர்களும் உங்கள் வயதில்தான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு மனம் நோகாதபடி பேசுங்கள்.

3. முதுமைக் காலத்தில் உங்களுடன் பெரும்பாலான நேரங்களில் இருக்கப்போவது உங்கள் வாழ்க்கைத் துணைவர்தான். அழைப்பு எப்போது வரும் என்பது இருவருக்குமே தெரியாது. ஒருவர் இன்னொருவருக்கு முன்னதாக விடைபெற இருப்பதால், வாழ்க்கைத்துணையுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் பொன் போன்றது. புலம்பல்களோ, எரிச்சல் வார்த்தைகளோ இல்லாமல் எப்போதும் உற்சாகமாகப் பேசி மகிழுங்கள்.

நண்பர்களுடன் உற்சாகம்
நண்பர்களுடன் உற்சாகம்

4. முதுமையை நினைத்து பயம் வேண்டாம். அதைச் சாபமாக எண்ணிச் சலிப்படையாதீர்கள். வயோதிகத்தை வரமாக எண்ணிப் போற்றி மகிழுங்கள். ஒவ்வொரு நாளையும் நீங்கள் புதிதாகப் பிறந்த மற்றொரு தினம் போலக் கருதுங்கள்.எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் இருங்கள். இனிய வார்த்தைகளே பேசுங்கள். ஓடும் நதி ஒருபோதும் திரும்பிப் பின்னோக்கி ஓடுவதில்லை. வாழ்க்கையும் அதுபோன்றதுதான். அதை மகிழ்ச்சியானதாக மாற்றுங்கள்.

இதையும் படியுங்கள்:
கல்லீரல் பிரச்சினை இருப்பவர்களுக்கு உதவும் அஸ்வகந்தா!
முதுமைக்கால மகிழ்ச்சி

5. முதுமைக் காலத் தேவைகளுக்காக என கணிசமான அளவு சேமிப்பு வைத்திருங்கள். செலவழிக்க வேண்டிய நேரத்தில் அதைச் செலவழியுங்கள். ஓய்வுக்காலப் பணிக்கொடை போன்றவற்றை உங்களுக்காக என வைத்துக்கொள்வது நல்லது. கடைசி காலங்களில் உங்களது முதுமையைப் பயன்படுத்தி உங்கள் பணம் மற்றும் உடைமைகளை உங்களிடம் இருந்து பறிக்கச் சிலர் முயற்சிக்கலாம். அப்படிப்பட்ட மனிதர்களிடம் கவனமாக இருங்கள். உங்களுக்குத் தேவையில்லை எனக் கருதும் பணத்தையும் உடைமைகளையும் நீங்களாகவே மற்றவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com