கல்லீரல் பிரச்சினை இருப்பவர்களுக்கு உதவும் அஸ்வகந்தா!

liver problems
Ashwagandha helps people with liver problems!
Published on

மனித உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. இது நச்சுக்களை நீக்குதல், செரிமானத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் புரதங்களை உற்பத்தி செய்தல் போன்ற பல செயல்களை செய்கிறது. கல்லீரல் பாதிக்கப்பட்டால் செரிமானப் பிரச்சனை, சோர்வு மஞ்சள் காமாலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த பதிவில் கல்லீரல் பிரச்சனை இருப்பவர்களுக்கு அஸ்வகந்தா எப்படியெல்லாம் உதவுகிறது என்பது பற்றி பார்க்கலாம். 

அஸ்வகந்தா இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய மூலிகை மருந்து. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. குறிப்பாக, கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கவும் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அஸ்வகந்தா பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

கல்லீரல் பிரச்சனைகளுக்கு அஸ்வகந்தா எவ்வாறு உதவுகிறது? 

கல்லீரல் பாதிப்பின் முக்கிய காரணிகளில் ஒன்று அழற்சி. அஸ்வகந்தாவில் உள்ள ஆன்ட்டி அழற்சி பண்புகள் கல்லீரல் செல்களில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகின்றன. 

மேலும், கல்லீரல் பாதிப்புக்கு ஆக்சிஜனேற்ற அழுத்தமும் காரணமாக உள்ளது. அஸ்வகந்தாவில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் கல்லீரல் செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. 

அஸ்வகந்தா கல்லீரல் செல்களை புதிதாக உருவாக்கவும், சேதமடைந்த செல்களை சரி செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. 

கல்லீரல் பாதிப்பு உடையவர்கள் செரிமானப் பிரச்சனையை சந்திப்பார்கள். எனவே தொடர்ச்சியாக அஸ்வகந்தா சாப்பிட்டு வருவதால், செரிமான பிரச்சனை மேம்பட்டு மலச்சிக்கலைக் குறைக்க உதவும். 

மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் பாதிப்பின் ஒரு பொதுவான அறிகுறி. அஸ்வகந்தா மஞ்சள் காமாலையை குறைக்கவும், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் பெரிதளவில் உதவுகிறது. 

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியத்தை அள்ளித் தரும் அஸ்வகந்தா! 
liver problems

அஸ்வகந்தாவை எவ்வாறு பயன்படுத்துவது: 

அஸ்வகந்தாவை பொடியாக, மாத்திரையாக, கேப்சூல்கள் மற்றும் டீ போன்ற வடிவங்களில் எடுத்துக் கொள்ளலாம். கல்லீரல் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க பொதுவாக ஒரு நாளைக்கு 500 முதல் 1000 மில்லி கிராம் அஸ்வகந்தா பரிந்துரைக்கப்படுகிறது. 

அஸ்வகந்தாவை எடுத்துக் கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் அவை நீங்கள் ஏற்கனவே எடுத்துக் கொண்டிருக்கும் சில மருந்துகளுடன் தொடர்பு கொள்ளலாம் என்பதால், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் அஸ்வகந்தாவை எடுத்துக்கொள்ள வேண்டாம். 

குறிப்பாக, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள், குழந்தைகள் மற்றும் சில மருத்துவ நிலைமைகளைக் கொண்டவர்கள் அஸ்வகந்தாவை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com