Teenage children and parents
Teenage children and parents

டீன் ஏஜ் குழந்தைகள் பெற்றோருடன் இணக்கமாக இருப்பதற்கான 6 வழிமுறைகள்!

Published on

வ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் டீன் ஏஜ் வாழ்க்கைதான் மிகவும் சந்தோஷமான காலகட்டமாக இருந்தது என்பதுதான் பெரும்பாலானவரின் கருத்து. இந்த வயதில்தான் உடலும் மனமும். மாற்றத்திற்கு உள்ளாகின்றன. தெளிவான மனநிலையை இந்த வயதில் பெற்றோர்கள் குழந்தைகளிடம் காண முடியாது. ஆதலால் ஒருவித இடைவெளி ஏற்படுவதை ஒவ்வொரு வீட்டிலும் உணர முடிகிறது. டீன் ஏஜ் மகனிடம் பெற்றோர்கள் எப்படி நெருக்கமாக பழக வேண்டும் என்பதற்கான பதிவுதான் இக்கட்டுரை.

1. ஊக்கப்படுத்துங்கள்: உங்களது மகன் படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு, இசை என எந்தத் துறையில் ஆர்வமாக இருந்தாலும் அதில் அவன் சிறப்பாக வர ஊக்கப்படுத்துங்கள். அதைத் தவிர அவன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கும் அவனுடன் சென்று கைத்தட்டி ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தினால் பெற்றோர்களுடன் நெருக்கமாவதற்கு டீன் ஏஜ் வயதினர் தானாகவே முன்வருவர்.

2. நேரத்தை ஒதுக்குங்கள்: உங்கள் டீனேஜ் மகனிடம் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது தியேட்டருக்கு செல்வது நடைப்பயிற்சி போன்ற விஷயங்களில் எல்லாம் ஒன்றாக நேரத்தை செலவிட்டு அவனுடைய மனதை புரிந்து கொண்டாலே உங்களுக்கும் அவனுக்குமான பிணைப்பு பலப்பட ஆரம்பிக்கும்.

3. முன்மாதிரியாக இருக்கவும்: பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு கதாநாயகன். ஆதலால் பெற்றோர்கள் அவர்களது வாழ்க்கையில் நேர்மை, உழைப்பு, மரியாதை, கருணை போன்ற நற்செயல்களை பின்பற்றுவதன் மூலம் அதைப் பார்த்து உங்களது டீன் ஏஜ் மகனும் பின்பற்றுவான். ஆதலால் எப்போதும் நீங்கள் உங்கள் மகனுக்கு முன்மாதிரியாக இருங்கள்.

4. பாராட்டுங்கள்: உங்கள் மகன் செய்யும் ஒவ்வொரு முயற்சிகள் மற்றும் சாதனைகளை பாராட்ட மறக்காதீர்கள். மேலும், சில சமயங்களில் ஆக்கபூர்வமான கருத்துகளையும் அவனிடம் சொல்லுங்கள். ஆனால், ஒருபோதும் விமர்சிக்காதீர்கள்.

இதையும் படியுங்கள்:
முறுக்கப்பட்ட நரம்பு பாதிப்பும் நிவாரணமும்!
Teenage children and parents

5. பொறுமை அவசியம்: டீன் ஏஜ் வயதில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான உறவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்க பெற்றோர்கள் பொறுமையை கையாளுவது மிகவும் அவசியம். டீன் ஏஜ் வயதினர் எந்த மாதிரியான சவால்களையும் சந்திக்க அமைதியாகவும் அவர்களுக்கு ஆதரவாகவும் எப்போதும் பெற்றோர் இருக்க, இருவருக்குமான உறவு மிகவும் நெருக்கப்படும்.

6. ஆரோக்கியமான பழக்கத்தை ஊக்கப்படுத்தவும்: ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கும் நாள்தோறும் உடற்பயிற்சிகள் செய்யவும் நல்ல தூக்கம் ஆகியவற்றிலும் உங்களது டீனேஜ் மகனை ஊக்கப்படுத்தி பழக்கப்படுத்துங்கள். மேலும் நீங்களும் இந்த விஷயங்களில் உங்கள் மகனுடன் இணைந்து இருந்தால் உங்கள் மகன் உங்களுடன் அனைத்தையும் பகிர்வான்.

மேற்கூறிய ஆறு விஷயங்களை கையாண்டாலே டீன் ஏஜ் குழந்தைகள் பெற்றோருடன் இணக்கமாக இருப்பர் என்பதில் சற்றும் ஐயமே இல்லை.

logo
Kalki Online
kalkionline.com