
குழந்தைகளிடம் உள்ள சவாலான நடத்தைகளை நிர்வகிப்பதில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை பெரும்பாலான பெற்றோர்கள் சந்திக்கிறார்கள். குறிப்பாக காலை நேர அவசரத்தின் போது அல்லது வேலையில் சமநிலைப்படுத்தும் போது, நேரத்திற்காக அழுத்தம் கொடுக்கப்படும் போது சில பெற்றோர்கள் ஜோராக சத்தம் போடுகிறாரகள்.
82 சதவீதம் பெற்றோர்கள் மன அழுத்தத்தின் போது குரல் எழுப்புகிறார்கள் அல்லது தங்கள் குழந்தைகளை அடிக்கிறார்கள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. அதே நேரத்தில் 66 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளிடமிருந்து பொது இடங்களில் எதிர்மறையான நடத்தைகளைக் கவனிக்கிறார்கள்; ஆனால் தனிப்பட்ட அமைப்புகளில் அதே நடத்தைகளைக் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.
விரக்தியான தருணங்களில், சில பெற்றோர்கள் பெற்றோருக்குரிய எந்த உத்தியும் செயல்படாதது போல் உதவியற்றவர்களாக உணர்கிறார்கள். இருப்பினும், குழந்தைகளின் சவாலான நடத்தைக்கான மூல காரணங்களைப் புரிந்துகொள்வதால், அது பெற்றோரை மிகவும் ஆக்கபூர்வமான தீர்வுகளை நோக்கி வழிநடத்த உதவும்.
குழந்தைகளின் நடத்தை பல்வேறு காரணிகளால் வடிவமைக்கப்படுகிறது. சில நடத்தைகள் உதாரணமாக, திடீர் உணர்ச்சி ரீதியான செயல்கள் அல்லது கோபங்கள், குழந்தையின் உள்ளுணர்வு திறனின் ஒரு பகுதியாகும். இவற்றை குழந்தைகள் மற்றவர்களைக் கவனிப்பதன் மூலம் கற்றுக் கொள்கிறார்கள். வளர்ச்சி நிலைகளும் ஒரு பாத்திரத்தை வகிக்கின்றன.
உதாரணமாக, குழந்தைகள் சுயநலமாக இருக்க முடியும் மற்றும் திடீர் உணர்ச்சியுடன் செயல்படலாம். தங்களுக்கு எது சிறந்தது என்று அவர்கள் நம்புகிறார்களோ அதன் அடிப்படையில் எதிர்வினையாற்றலாம். கூடுதலாக, ஒழுங்கற்ற வீடு அல்லது சீரற்ற வழக்கங்கள் போன்ற சுற்றுச்சூழல் காரணிகள், ஒரு குழந்தையின் மன அழுத்தத்தை அதிகரித்து, சீர்குலைக்கும் நடத்தைக்கு வழிவகுக்கும் என்பது குழந்தை நல நிபுணர்களின் கருத்து.
இந்த நடத்தைகளை திறம்பட நிவர்த்தி செய்ய, பெற்றோர்கள் முன்கூட்டியே செயல்படும், உடனடியாக செயல்படும் உத்திகளைப் பயன்படுத்த வேண்டும். முன்கூட்டியே செயல்படும் உத்திகள் சவாலான நடத்தை ஏற்படுவதற்கு முன்பே அதைத் தடுப்பதில் கவனம் செலுத்துகின்றன. இதில் குழந்தைகளுடன் தெளிவான, சுருக்கமான தொடர்பு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க அவர்களின் சூழலை ஒழுங்கமைத்தல் ஆகியவை அடங்கும்.
குழந்தைகளை ஒழுங்கபடுத்த உதவும் வழிகளை பார்க்கலாம்.
1. ஆபத்தான நடத்தைகளைப் புறக்கணிக்கவும்:
ஒரு குழந்தை சவாலான நடத்தையை வெளிப்படுத்தும் போது, உடனடி உத்திகள் முக்கியம். பெற்றோர்கள் கூச்சலிடுட்டு தண்டிக்கவோ அல்லது உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றுவதையோ தவிர்க்க வேண்டும்.
2. தர்க்க ரீதியான விளைவுகளை வழங்குங்கள்:
மிகவும் தீவிரமான நடத்தைகளுக்கு, உடைந்த பொம்மையை அதே நிலையில் விட்டு விட வேண்டும். அத்தகைய தர்க்கரீதியான விளைவுகளை வழங்கும் போது குழந்தைகள் தங்கள் செயல்களின் தாக்கத்தைப் புரிந்து கொள்ள முயலுவார்கள்.
3. குழந்தையிடம் நெருக்கமாக இருங்கள்:
வருத்தமாக இருக்கும் ஒரு குழந்தையுடன் உடல் ரீதியாக நெருக்கமாக இருக்க வேண்டும். அது குழந்தைக்கு ஆறுதலாகவும் மற்றும் நிலைமையை சரி செய்யவும் உதவும்.
4. கத்தாமல் அமைதியாக வழி நடத்தவும்:
சவாலான தருணங்களில் மிக முக்கியமான கொள்கை என்னவென்றால், அமைதியாக இருப்பதுதான், கத்துவது பதற்றத்தை அதிகரிக்கும், அதே நேரத்தில் அமைதியான பதில் செய்தியை வலுப்படுத்தும். குழந்தைகள் கத்தும் போது நீங்களும் சேர்ந்து கத்தினால் விபரீதம்தான் நேரும். நிலைமை சிறிது சாந்தமானவுடன் நீங்கள் பொறுமையாக குழந்தைகளுக்கு அவர்களின் தவற்றை எடுத்துரைத்து புரிய வைக்கலாம்.
5. ஆறுதலாக இருங்கள்:
குழந்தைகளை ஆறுதல்படுத்தி அன்போடு அவர்களின் செயல்கள் ஏன் பொருத்தமற்றவை என்பதை விளக்கும்போது, அவர்கள் உணர்ச்சி ரீதியான தாக்கத்தைப் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
6. ஒரு பெற்றோர்களாக, நண்பர்களாக மற்றும் வழிகாட்டிகளாகவும் இருங்கள்:
இறுதியாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நண்பர்களாக மட்டுமல்லாமல் வழிகாட்டிகளாகவும் இருக்க முயற்சிக்க வேண்டும். பொருத்தமான நடத்தையை வெளிப்படுத்துவதன் மூலமும், விதிகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு இணங்குவதன் மூலமும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மரியாதையையும் ஒத்துழைப்பையும் சம்பாதிக்கிறார்கள்.
பெற்றோர் வளர்ப்பு என்பது மறுக்க முடியாத அளவுக்கு சவாலானது, ஆனால் முன்கூட்டியே செயல்படும், உடனடியாக செயல்படும் மற்றும் பிரதிபலிக்கும் உத்திகளைப் பயன்படுத்துவதன் மூலம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடத்தைகளை திறம்பட நிர்வகிக்க முடியும், தண்டனை அல்லது வெகுமதிகளை கொடுக்காமலேயே ஒரு நேர்மறையான சூழலை வளர்க்க முடியும்.