
குழந்தைகளுக்கு கதை சொல்வது (Telling stories to children) காலம் காலமாக கடைபிடிக்கப்படும் ஒரு அறிவுப் பூர்வமான செயலாகும். ஏனெனில் குழந்தைகளுக்கு நாம் சொல்லும் கதைகளின் வாயிலாக அவர்களுடைய மனதில் இலக்குகளை நிர்ணயிப்பதோடு ஒழுக்கமான வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை கற்பிக்க முடியும். மேலும் கதை கேட்கும் குழந்தைகள் தன்னம்பிக்கையுடனும் உதவும் மனப்பான்மையுடனும் இருப்பார்கள். அந்த வகையில் குழந்தைகளுக்கு கதை சொல்வதால் ஏற்படும் 5 நன்மைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1.உறவை வலுப்படுத்துதல்
குழந்தைகளிடம் கதை சொல்லும் பொழுது குழந்தை களுக்கும் பெற்றோருக்கும் இடையே ஒரு வலுவான பிணைப்பு உருவாகிறது. அதோடு குழந்தைகள் கதைகளில் மூழ்கி இருக்கும்போது பெற்றோரின் அன்பையும், அரவணைப்பையும் அப்போது முழுமையாக உணர்வதால் ,இந்த கதை சொல்லும் நிகழ்வு குடும்ப உறவுகளை மேம்படுத்துகிறது.
2.அறிவாற்றல் வளர்ச்சி
குழந்தைகள் கதைகளை கேட்கும்போது அவர்களின் புரிந்து கொள்ளும் திறன் அதிகரித்து கதையில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றி கேள்வி கேட்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இது குழந்தைகளின் அறிவாற்றலை வளர்த்து சிந்தனை திறனை மேம்படுத்துகிறது.
3.மொழி வளர்ச்சி
குழந்தைகள் கதைகளை கேட்கும் போது அவர்களின் சொல்லகராதி விரிவு படுகிறது. இதனால் அவர்கள் புதிய வார்த்தைகளை அறிந்து ,எப்படி பயன்படுத்துவது என்பதை புரிந்து கொள்வதால் அவர்களின் எழுதும் திறன் மேம்படுகிறது.
4.பண்பாடு மற்றும் விழுமியங்கள்
கதை கேட்பதால் குழந்தைகள் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை தெரிந்து கொள்கின்றனர். இது மற்றவர்களை புரிந்து கொள்ள உதவுவதோடு அவர்களின் மனதை விரிவாக்குகிறது. மேலும் கதைகளின் மூலம் பண்பாடு மற்றும் நல்லொழுக்கங்களை தெரிந்து கொள்வதோடு வாழ்க்கையின் விழுமியங்களை அறிந்து கொள்கிறார்கள்.
5.கற்பனை திறன்
குழந்தைகளுக்கு கதை சொல்வதால் அவர்களின் கற்பனை திறன் வளர்வதோடு கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் இடங்களை மனதில் உருவாக்கிக்கொள்வதால் அவர்களின் படைப்பாற்றல் ஊக்குவிக்கிறது. ஆகவே கதை சொல்வது குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவுவதோடு அவர்களை சிறந்த மனிதர்களாகவும் மாற்றுகிறது.
குழந்தைகளுக்கு நீதி கதைகள், நல்லதை செருகி தீயதை தவிர்க்கும் கதைகள், அற்புதமான வாழ்க்கை கதைகள் ஆகியவை மிகுந்த பயனளிப்பவையாக இருக்கும்.