உடலில் பொட்டாசியம் குறைவாக உள்ளது என்பதற்கான 7 அறிகுறிகள்! 

potassium
7 signs that the body is low in potassium!
Published on

பொட்டாசியம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒரு தாது உப்பு. இது நரம்பு செயல்பாடு, தசை சுருக்கம், இதயத்துடிப்பு ஆகியவற்றை சீராக வைத்திருக்க உதவுகிறது. எனவே, உடலில் பொட்டாசியம் அளவு குறைந்துவிட்டால், பலவிதமான உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். இந்தப் பதிவில் உடலில் பொட்டாசியம் குறைபாட்டின் 7 முக்கிய அறிகுறிகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

1. பொட்டாசியம் தசைச் சுருக்கங்களுக்கு மிகவும் முக்கியமானது. பொட்டாசியம் குறைபாடு ஏற்படும்போது தசைகள் பலவீனம் அடைந்து, வலி அதிகம் ஏற்படலாம். குறிப்பாக, கால்களில் அதிகமாக வலி ஏற்படுவது பொட்டாசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். 

2. பொட்டாசியம் குறைபாடு காரணமாக தசைகள் அடிக்கடி பிடித்துக்கொள்வது ஒரு பொதுவான அறிகுறி. எனவே, பொட்டாசியம் குறைபாடு காரணமாக தொடர்ச்சியான சோர்வு, உடல் வலிமை இழப்பு ஏற்படலாம். 

3. உடலில் செல் ஆற்றலை உற்பத்தி செய்ய பொட்டாசியம் உதவுகிறது. பொட்டாசியம் உடலில் குறையும் போது தொடர்ச்சியான சோர்வு மற்றும் உடல் பலகீனம் பிரச்சனை ஏற்படும். 

4. இதயத் துடிப்பு சீராக இருக்க பொட்டாசியம் உதவுகிறது. பொட்டாசியம் குறைபாடு காரணமாக இதயத் துடிப்பு வேகமாகவோ அல்லது மெதுவாகவோ மாறும் வாய்ப்புள்ளது. சிலருக்கு ஒழுங்கற்ற முறையில் இதயத்துடிப்பு ஏற்படலாம். 

5. செரிமானம் சீராக இருப்பதற்கு பொட்டாசியம் சத்து மிகவும் அவசியம். இது குறைவதால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயு பிரச்சனைகள் போன்ற செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. 

6. உடலின் நரம்பு செயல்பாட்டிற்கு பொட்டாசியம் மிகவும் முக்கியம். கை கால்களில் உணர்வின்மை, நரம்பு பிடிப்பு போன்ற பிரச்சனைகள் இந்த குறைபாட்டினால் ஏற்படலாம். 

7. நமது மூளை செயல்பாட்டிற்கும் பொட்டாசியம் மிகவும் முக்கியம். இது குறைவதால் மனச்சோர்வு, மனக்கலக்கம் மனநிலை மாற்றங்கள் போன்ற மனநிலை பிரச்சனைகள் ஏற்படக்கூடும். 

இதையும் படியுங்கள்:
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் சில பச்சை நிறப் பழங்கள்!
potassium

இந்த பதிவின் வாயிலாக பொட்டாசியம் நம் உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். எனவே, பொட்டாசியம் குறைபாடு நம் உடலில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொண்டு, மேற்கூறிய அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். 

பொட்டாசியம் குறைபாட்டைத் தடுக்க பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் போன்ற பொட்டாசியம் அதிகம் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். விருப்பப்பட்டால் மருத்துவரின் ஆலோசனை பேரில் பொட்டாசியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com