பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான உறவு மிகவும் புனிதமானது. குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துதான் வாழ்க்கையின் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். பெற்றோர்கள் அன்பாகவும், அமைதியாகவும் இருந்தால், குழந்தைகள் அதை அப்படியே பிரதிபலிப்பார்கள். ஆனால், பெற்றோர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தால், அதன் பாதிப்பு குழந்தைகளை ஆழமாகத் தாக்கும்.
1. குழந்தைகள் தங்கள் பெற்றோரை பாதுகாப்பின் அடையாளமாக பார்க்கிறார்கள். பெற்றோர்கள் சண்டை போடும்போது, குழந்தைகளுக்கு பயம் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். வீட்டில் நிம்மதியான சூழல் இல்லை என்று அவர்கள் நினைக்கத் தொடங்குகிறார்கள். இந்த உணர்வு அவர்களின் மனதை ஆழமாக பாதிக்கும்.
2. பெற்றோரின் சண்டைகளை பார்க்கும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் மற்றும் பதட்டம் அதிகரிக்கும். சத்தம், கோபம், அழுகை போன்றவற்றை குழந்தைகள் பார்க்கும்போது, அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இது அவர்களின் தூக்கம் மற்றும் உணவு பழக்கத்தையும் மாற்றலாம்.
3. வீட்டில் சண்டை போடும் சூழ்நிலை அடிக்கடி இருந்தால், குழந்தைகளின் நடத்தையில் எதிர்மறை மாற்றங்கள் ஏற்படலாம். அவர்கள் கோபம் மற்றும் ஆக்ரோஷம் நிறைந்தவர்களாக மாறலாம். சண்டை போடுவதை இயல்பான விஷயம் என்று நினைத்து, அவர்களும் மற்றவர்களிடம் சண்டை போட ஆரம்பிக்கலாம்.
4. மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக குழந்தைகளின் கவனம் சிதறக்கூடும். வீட்டில் அமைதி இல்லாத சூழ்நிலை படிப்பில் கவனத்தை செலுத்த விடாமல் தடுக்கும். இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படையும், தேர்வில் மதிப்பெண்கள் குறையலாம்.
5. பெற்றோரின் சண்டைகளை பார்த்து வளரும் குழந்தைகள், மற்றவர்களுடன் நல்லுறவு வைத்துக்கொள்வதில் சிரமம் ஏற்படலாம். நட்பு மற்றும் குடும்ப உறவுகளை சரியாக கையாள தெரியாமல் போகலாம். அவர்கள் தனிமையை விரும்பும் மனநிலைக்கு கூட தள்ளப்படலாம்.
6. வீட்டில் சண்டை நிறைந்த சூழ்நிலை குழந்தைகளுக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். தன்னம்பிக்கை குறைந்து, எதிலும் தைரியமாக முடிவெடுக்க முடியாமல் போகலாம். தங்கள் திறமைகளை குறைத்து மதிப்பிட்டு, வாழ்க்கையில் பின்தங்க நேரிடலாம்.
7. குழந்தைகள் பெற்றோரைத்தான் முன்மாதிரியாக எடுத்துக்கொள்கிறார்கள். பெற்றோர்கள் சண்டை போடுவதை பார்த்து, அதுதான் சரியான வழி என்று குழந்தைகள் நினைக்கக்கூடும். தாங்களும் எதிர்காலத்தில் தங்கள் துணை மற்றும் குழந்தைகளிடம் இதேபோல் சண்டை போடும் பழக்கத்தை பின்பற்றலாம்.
இந்த காரணங்களால், பெற்றோர்கள் தங்களுக்குள் பிரச்சனைகள் இருந்தால், அதை தனியாகவும், அமைதியாகவும் பேசி தீர்த்துக்கொள்வது சிறந்தது. குழந்தைகளுக்கு அன்பான மற்றும் அமைதியான சூழ்நிலையை வீட்டில் உருவாக்குவது அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.