டெங்கு கொசுவை ஒழிக்கணுமா? வீட்டின் இந்த 7 இடங்களை உடனே சுத்தம் செய்யுங்க!

நீங்கள் கவனிக்காத இந்த சிறு இடங்களில்தான் கொசுக்கள் லட்சக்கணக்கில் முட்டையிடுகின்றன.
டெங்கு
டெங்குGemini image
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on: 

டெங்கு காய்ச்சல் என்பது 'ஏடிஸ்' (Aedes) வகைக் கொசுக்களால் பரவும் ஒரு கொடிய நோயாகும். இந்த கொசுக்கள் சுத்தமான நீரில் மட்டுமே முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.

வீட்டிலேயே டெங்கு கொசுக்கள் எளிதாக வளரக்கூடிய 7 முக்கிய இடங்கள் மற்றும் அவற்றைத் தடுக்கும் முறைகள் இதோ:

1. ஃபிரிட்ஜ் பின்பக்க டிரே: 

நமது வீடுகளில் 24 மணி நேரமும் இயங்கும் ஃபிரிட்ஜின் பின்பகுதியில், உருகும் பனிக்கட்டி நீர் சேகரமாவதற்காக ஒரு தட்டு இருக்கும். அதில் எப்போதும் நீர் தேங்கி ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட மிகவும் பாதுகாப்பான இடமாக மாறுகிறது.

அதனை தடுக்க வாரத்திற்கு ஒரு முறையாவது ஃபிரிட்ஜின் பின்புற தட்டை கழற்றி அதில் உள்ள தண்ணீரை ஊற்றி விட்டு, நன்றிக கழுவி காயவைக்க வேண்டும்.

2. பூந்தொட்டிகள் மற்றும் அவற்றின் கீழ்த்தட்டுகள்: 

வீட்டை அழகூட்ட வளர்க்கப்படும் செடிகளின் பூந்தொட்டிகளுக்கு அடியில் உபரி நீர் வெளியேறாமல் இருக்க வைக்கப்படும் சிறிய தட்டுகளில் தண்ணீர் தேங்கி நிற்கும். மேலும், மணி பிளாண்ட் போன்ற நீரில் வளர்க்கப்படும் அலங்காரச் செடிகளின் நீரும் கொசுக்களின் புகலிடமாக மாறுகிறது.

இதனை தடுக்க தொட்டித் தட்டுகளில் நீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்ற வேண்டும். மணி பிளாண்ட் போன்ற நீர்ச் செடிகளின் தண்ணீரை 3 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும்.

3. மொட்டை மாடி மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள கழிவுப் பொருட்கள்:

மழைக்காலத்தில் வீட்டின் மொட்டை மாடியிலும், பின்புறத்திலும் போட்டு வைக்கப்படும் உடைந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், டயர்கள், இளநீர் கூடுகள், உடைந்த பானைகள் மற்றும் பிளாஸ்டிக் கப் போன்றவற்றில் மழை நீர் சிறிதளவு தேங்கினாலும், அதில் ஆயிரக்கணக்கான கொசு முட்டைகள் உருவாகும்.

இதனை தடுக்க மழைக் காலத்திற்கு முன்பாகவே மொட்டை மாடி மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள தேவையற்ற கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.

4. மூடப்படாத நீர் சேமிப்பு தொட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் டிரம்: 

குடி நீரையோ அல்லது வீட்டு உபயோக நீரையோ வீட்டின் மேல்நிலை நீர்த் தொட்டி கீழ்நிலைத் தொட்டி அல்லது பிளாஸ்டிக் டிரம்கள் சரியாக மூடப்படாமல் இருந்தால், ஏடிஸ் கொசுக்கள் அதில் எளிதாக நுழைந்து முட்டையிடும்.

இதனை தடுக்க நீர் சேமிக்கும் தொட்டிகள் மற்றும் டிரம்களை எப்போதும் இறுக்கமான மூடிகளால் மூடி வைக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை தொட்டிகளை நன்றாக தேய்த்து கழுவி உலர வைக்க வேண்டும்.

டெங்கு
டெங்குGemini image

5. ஏசி (AC) வெளியேற்றும் நீர் மற்றும் ஏர் கூலர்கள்: 

கோடைகாலத்திலும் மழைக்காலத்திலும் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகளில் (AC) இருந்து வெளியேறும் தண்ணீர் சேகரிக்கப்படும் பாத்திரங்கள் அல்லது ஏர் கூலர்களில் பல நாட்கள் தேங்கி நிற்கும் பழைய நீர் கொசுக்கள் வளர ஏதுவாகிறது.

இதையும் படியுங்கள்:
நாய்களை விட பூனைகளை ஏன் அதிக மக்கள் விரும்புகிறார்கள்? சுவாரஸ்ய ரகசியம்!
டெங்கு

இதனை தடுக்க ஏசி கழிவுநீரை சேகரிக்கும் பாத்திரங்களை தினமும் காலியாக்க வேண்டும். ஏர் கூலர்களில் உள்ள தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை மாற்றி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

6. பயன்பாட்டில் இல்லாத கழிப்பறைகள் மற்றும் உரல்/ஆட்டுக்கல்: 

வீட்டில் அரிதாகப் பயன்படுத்தப்படும் கழிப்பறைகளின் வெஸ்டர்ன் க்ளோசெட் மற்றும் ஃப்ளஷ் டேங்குகளில் எப்போதும் நீர் இருக்கும். அதேபோல், திறந்தவெளியில் உள்ள ஆட்டுக்கல்லின் குழியில் மழைநீர் தேங்கி நிற்கும்.

இதனை தடுக்க பயன்படுத்தாத கழிப்பறைகளை வாரத்திற்கு ஒருமுறை ஃப்ளஷ் செய்ய வேண்டும். வெளியில் இருக்கும் ஆட்டுக்கற்களை தலைகீழாக கவிழ்த்து வைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டில் டெங்கு கொசு வளரும் மறைமுகமான இடங்கள்… உடனே பாருங்கள்!
டெங்கு

7. வீட்டின் கூரை மற்றும் மழைநீர் வடிகால் குழாய்கள்: 

வீட்டின் கூரையில் உள்ள காய்ந்த இலைகள், தூசிகள் அடைத்துக் கொள்வதால் கூரையில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கும். இந்த தேங்கிய நீரில் கொசுக்கள் பெருமளவில் இனப்பெருக்கம் செய்யும்.

இதனை தடுக்க மழைக்காலத்திற்கு முன் வீட்டின் கூரை மற்றும் மழைநீர் செல்லும் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கி, நீர் சீராக வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும்.

"தேங்கிய நீரை அகற்றுவோம்; டெங்கு கொசுவை ஒழிப்போம்!"

நீர் தேங்கும் அந்த மறக்கப்பட்ட மூலைகளைக் கண்டறிவது, உங்கள் வாழும் இடத்தை டெங்கு கொசுக்களின் புகலிடமாக மாற்றாமல் முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த உதவும் துல்லியமான வழிகாட்டியாக அமைகிறது.

logo
Kalki Online
kalkionline.com