குழந்தைகளை வளர்ப்பதற்கான பொறுப்பு பெரும்பாலும் தாய்மார்களின் கையில்தான் வந்து சேர்கிறது. ஆனால் முறையான அனுபவமின்மை அல்லது தவறான நம்பிக்கைகளால் தாய்மார்கள் சில தவறுகளைச் செய்வதுண்டு. இந்தத் தவறுகள் குழந்தையின் மனதில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தி அவர்களது எதிர்காலத்தைக் கூட பாதிக்கலாம். இந்தப் பதிவில் குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் பொதுவாக செய்யும் தவறுகள் பற்றி பார்க்கலாம்.
குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசைதான் ஒவ்வொரு தாய்க்கும் இருக்கும். ஆனால், அதிகப்படியான பாதுகாப்பு குழந்தையின் வளர்ச்சியைச் தடுக்கிறது. இதனால், குழந்தைகள் சுந்தரமாக சிந்திக்கவும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் வாய்ப்பு கிடைப்பதில்லை. இது அவர்களின் சுயமரியாதையை குறைத்து அவர்களை பயந்த சுபாவம் கொண்டவர்களாக மாற்றிவிடும்.
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அவர்களின் வளர்ச்சி வேகம் ஒரே மாதிரி இருக்காது. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவது குழந்தையின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் நம்பிக்கையை சிதைக்கும்.
சில தாய்மார்கள் தங்கள் குழந்தையின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் நிஜ உணர்வுகளைப் புறக்கணிக்கிறார்கள். எனவே, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வது மிகவும் முக்கியம்.
குழந்தைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில தாய்மார்கள் மிகவும் கண்டிப்பான அணுகுமுறையை கையாளுகின்றனர். இது குழந்தைக்கு பயத்தை ஏற்படுத்தி, அவர்களுடன் தாய்மார்களுக்கு இடையே தூரத்தை ஏற்படுத்தும்.
குழந்தைகளின் எல்லா வேலைகளையும் தாய்மார்களே செய்து கொடுப்பது அவர்களின் சுயசார்பு தன்மையை குறைக்கும். குழந்தைகள் தங்கள் வயதுக்கு ஏற்ற வேலையை செய்வதற்கு தாய்மார்கள் ஊக்குவிக்க வேண்டும்.
எந்த ஒரு செயலுக்கும் அதிகபடியாக பாராட்டுவது அல்லது திட்டுவது குழந்தைகளின் மனதை பாதிக்கும். அவர்களின் செயல்களை நடுநிலையாக மதிப்பிட்டு அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை தாய்மார்கள் வழங்க வேண்டும்.
குழந்தைகள் தவறு செய்வது இயல்பு என்பதைப் புரிந்துகொண்டு, அவர்கள் தவறு செய்தாலும் அதை மன்னித்து அடுத்தமுறை எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்று அறிவுறுத்த வேண்டும்.
குழந்தை வளர்ப்பு என்பது தொடர்ச்சியாக பல விஷயங்களை கற்றுக்கொள்ளும் செயல்முறையாகும். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி நன்கு புரிந்துகொண்டு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். மேற்கூறப்பட்ட தவறுகளைத் தவிர்த்து, குழந்தைகளுக்கு நேர்மாறான சூழலை உருவாக்கி, அவர்களின் வளர்ச்சிக்கு தாய்மார்கள் உதவ வேண்டும்.