
காதல் என்ற வார்த்தையே புனிதமானதாகும். நமது துணையை காதல் செய்வது என்பது நமக்கு ஒரு மகிழ்ச்சியான வேலை தான். இருந்தாலும், ஒரு வழிகளில் இல்லாமல் 7 வழிகளில் காதல் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. காதல் என்றால் ரொமான்ஸ் மட்டும் தானா என்றால் கிடையாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தை கொண்டிருப்பார்கள் என்பதால், அவர்களின் காதல் வெளிப்பாடு வேறுபடும். அந்த வகையில் நீங்கள் எந்த ரகம் என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் துணையும் எந்த ரகம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
1. மகிழ்ச்சியான மற்றும் சுதந்திரமான ஜோடிகள்: (Happy and Independent)
இந்த உறவில், இருவரும் தங்கள் சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் மற்றும் ஒன்றாக இருக்க முடிவு செய்கிறார்கள். அவர்கள் பிரிந்து வாழ்ந்தாலும், அவர்களின் உணர்ச்சி பிணைப்பு வலுவாக உள்ளது. சுதந்திரமும், பரஸ்பர மரியாதையும் இங்கு முக்கியமாகும். இத்தகைய தம்பதிகள் வெளிப்படையாகப் பேசுகிறார்கள், தனிமையை அனுபவிக்கிறார்கள், ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட வளர்ச்சியிலிருந்து கிடைக்கும் மகிழ்ச்சியை இருவரும் அனுபவிக்கிறார்கள்.
2. ஒருங்கிணைக்கப்பட்ட ஜோடிகள்: (Happy and Consolidated)
இந்த ஜோடிகள் உணர்ச்சி ரீதியான தொடர்பைக் கொண்டுள்ளனர். அவர்கள் ஒருவருக்கொருவர் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் மற்றும் ஒன்றாக வாழ்க்கையை வாழ்கிறார்கள். இந்த உறவு பாதுகாப்பானது, ஆதரவானது. மேலும், இவர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களை கூட நேர்மறையான முறையில் கையாள்கிறார்கள்.
3. ஆராய்தல்: (Exploratory)
இந்த உறவுகள் நிலையானதாக இருக்காது. இவர்கள் தங்களின் உறவில் பொருந்தக்கூடிய தன்மை, மற்றும் எல்லைகளை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ளாததால், தவறான புரிதல்கள் ஏற்படலாம். அத்தகைய உறவுகள் பிற்காலத்தில் முறிந்தும் போகலாம்.
4. உறவில் சிக்கிக்கொண்ட ஜோடிகள்: (Stuck)
இந்த ஜோடிகள் நீண்ட காலமாக உறவில் இருந்தாலும், அவர்கள் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கிறார்கள், இருந்தாலும் அவர்களால் ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்து செல்ல முடியவில்லை. தனியாக இருப்பதற்கான பயம், நிதி பிரச்சினைகள் அல்லது உணர்ச்சி ரீதியான பிணைப்பு ஆகியவை அவர்களைத் தடுத்து நிறுத்துகிறது.
5. அதிக தீவிரம் கொண்ட ஜோடிகள்: (High Intensity)
அதிக தீவிரம் கொண்ட உறவுகள் தீவிரமானவை, ஆனால் நிலையற்றவை. ஏனெனில் இந்த உறவுகளில் முறிவுகள் மற்றும் மீண்டும் இணைதல் ஆகியவை ஏற்படுவது பொதுவானவை. உறவில் தொடர்ந்து பிரச்சினைகள் இருந்தாலும், ஒருவரை ஒருவர் பிரிந்து செல்வது கடினம்.
6. தொலைதூர ஜோடிகள்: (Long-Distance Loyalists)
இந்த ஜோடிகளுக்கு இடையே இடைவெளி இருந்தபோதிலும், இவர்கள் நம்பிக்கை, தொடர்பு மற்றும் ஆதரவு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் ஒரே இடத்தில் இல்லை என்றாலும், உறுதியுடனும், உணர்ச்சி ரீதியாகவும் ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். தொலைதூர காதலர்கள், காலங்களைக் கடந்து கூட தங்கள் காதலை செழிக்க வைக்க முடியும் என்பதைக் காட்டுகிறார்கள்.
7. ஆறுதல்: (Healing Together)
இந்தத் தம்பதிகள் தங்கள் வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளில் ஒருவரையொருவர் சந்தித்து, ஆறுதல் பெறுகிறார்கள். அவர்கள் அதிர்ச்சி, மனவேதனை அல்லது துக்கம் போன்ற அனுபவங்களை தங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த உறவு இரக்கம், பொறுமை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த ஜோடிகள் தங்கள் காதலை அன்பால் வளர்த்துக் கொண்டால், அவர்களின் உறவும் அழமானதாக மாறும்.