உங்களைக் குறைத்து மதிப்பிட்டுப் பேசும் நபர்கள் அடிக்கடி உபயோகிக்கும் 7 வகை வார்த்தை ஜாலங்கள்!

7 types of verbal tricks often used by people who belittle you!
7 types of verbal tricks often used by people who belittle you!
Published on

தினசரி வாழ்வில் நீங்கள் பழகிக்கொண்டிருக்கும்  நபர்களில் சிலர், அவர்களின் சாமர்த்தியமான பேச்சினால் உங்களை மட்டந்தட்டிப் பேசி, உங்களை நீங்களே தாழ்வாக நினைக்கும் நிலைக்குத் தள்ளி விடுவார்கள். அவர்கள் அடிக்கடி உபயோகிக்கும் தந்திரமான 7 வகை  வார்த்தைகள் என்னென்ன, அவர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. சும்மாதான் சொல்றேன் (I am just saying): உங்களைப் பற்றி ஓர் எதிர்மறையான கருத்தையோ விமர்சனத்தையோ கூறி, ‘சும்மா சொல்றேன்...’ என்று முடிப்பார்கள். அது உங்களை, நிஜமாகவே நீங்கள் அதிகப்பிரசங்கியோ அல்லது சென்சிடிவானவரோ என்றெண்ணச் செய்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கும். இதுதான் அவர்களது எதிர்பார்ப்பு.

2. நீ ரொம்ப உணர்ச்சி வசப்படுகிறாய் (You are too sensitive):  உங்களின் உணர்ச்சிகளையும் நீங்கள் எதிர்வினையாற்றும் விதத்தையும் குறைவாக மதிப்பீடு செய்து, இந்த வார்த்தைகளை அவர்கள் கூறும்போது, நீங்கள் குழப்பமடைந்து, "நாம் சாதாரணமாக இல்லையோ... அவர் கூறுவதுபோல்தான் இருக்கிறோமோ" என உங்களை நீங்களே சந்தேகம் கொள்ளச் செய்யும்.

3. உனக்குத் தெரியும்னு நெனச்சேன் (I thought you knew): இந்த வார்த்தைகள் மிகச் சாதாரணமாகத் தோன்றினாலும் தந்திரசாலிகள் உங்களைப் புரிதலும் புத்திசாலித்தனமுமற்ற மக்கு என உணர்த்தவே இவ்வாறு கூறுவர். ஒரு விஷயத்தை அவர்கள் ஏற்கெனவே கூறி நீங்கள் அதை மறந்து விட்டது போலவும் அல்லது அது ஒரு பொதுவான விஷயம். அது கூட தெரியாமல் இருக்கிறாய் என குத்திக்காட்டச் செய்யும் வார்த்தைகள் இவை. இதுவும் உங்களின் ஞாபக சக்தி மற்றும் புத்திசாலித்தனத்தை சந்தேகிக்கச் செய்து உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை உண்டுபண்ணும்.

இதையும் படியுங்கள்:
உணவுடன் சேர்த்து சாப்பிடும் சாஸ் வகைகள் உடலுக்கு ஆரோக்கியமானதா?
7 types of verbal tricks often used by people who belittle you!

4. நான் உன்னை காயப்படுத்த விரும்பல; இருந்தாலும்... (I don't want to hurt you, but...): தந்திரசாலிகள் உங்களிடம் தரக்குறைவாக எதையாவது சொல்லி காயப்படுத்துவதற்கு விரும்பி, அதற்கு முன்னோடியாக உபயோகப்படுத்தும் வார்த்தைகள் இவை. இதைக் கேட்டதும் உங்களுக்குள் ஒரு பய உணர்ச்சி பரவி, அவர்கள் சொல்லப்போவதைக் கேட்கத் தயாராவீர்கள். அவர்கள் கூறுவது உங்களை நிஜமாகவே காயப்படுத்தும். நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். எச்சரிக்கும் விதத்தில் ஒரு விஷயத்தைக் கூறுவதாயின், ஆரம்பத்திலேயே இப்படிக் காயப்படுத்த வேண்டாமே!

5. நான்தான் அப்படி நினைக்கிறேனோ (May be it's just me...): நயவஞ்சகர்கள் உங்களை தரக்குறைவாக உணரச் செய்யும் வகையில் விமர்சனம் செய்து அல்லது எடை போட்டு ஒரு கருத்தை கூறிவிட்டு, கடைசியில் இந்த வார்த்தைகளைக் கூறி முடிப்பர். அதாவது. அது அவர்களின் சொந்தக் கருத்து எனவும், அதை நீங்கள் நம்ப வேண்டுமென வற்புறுத்தவில்லை எனக் கூறுவதுபோல் அது இருக்கும். உண்மையில் அது உங்களின் உறுதியைக் குலைப்பதாகவும் உங்களின் சரியான கண்ணோட்டத்தை சந்தேகம் கொள்ளச் செய்வதாகவும் அமையும்.

6. நீ எப்பொழுதும் / ஒருபோதும் நீ... (You always / you never...): அவர்கள் உங்களிடம், ‘நீ எப்பொழுதும் கவனிக்க மறந்துவிடுகிறாய்’ அல்லது ‘நீ ஒருபோதும் எனக்கு என்ன தேவை என்பது பற்றி கவலைப்படுவதில்லை’ என்று கூறி உங்களை மடக்க முயல்வர். நீங்கள் எப்பொழுதும் உங்கள் செயல்களை நியாயப்படுத்துவதற்கும், உங்களை தற்காத்துக் கொள்வதற்கும் விரும்புகிறீர்கள் என்கிற குற்றச்சாட்டை உங்கள் மீது சுமத்துவதற்கு சமமாகும் இந்த வார்த்தைகள். இது முற்றிலும் உண்மை. நீங்கள் நிஜமாகவே உங்களை தற்காத்துக்கொள்ளும் மன நிலையில் இருக்கும்போது அவர்கள் கூறும் நியாயமற்ற குற்றச்சாட்டுகளை எங்கே கவனிக்க முடியும்?

இதையும் படியுங்கள்:
இந்த அறிகுறிகள் இருந்தால் கண் திருஷ்டி அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்!
7 types of verbal tricks often used by people who belittle you!

7. உனக்குப் புரியாது (You wouldn't understand): நீங்கள் ஸ்மார்ட்டாக இல்லை, உங்களுக்கு அனுபவம் போதாது, உங்களிடம் புரிந்துகொள்ளக்கூடிய திறமை இல்லை ஆகிய குறைபாடுகளை உங்கள் மீது சுமத்தவே தந்திரக்காரர்கள் உங்களிடம் பேசும்போது இந்த இரண்டு வார்த்தைகளை அடிக்கடி கூறி வெறுப்படையச் செய்வர். இதன் மூலம் உங்களை அவர்கள் தங்கள்  கட்டுப்பாட்டிற்குள் வைக்கவும், உங்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவில் திறமையின் அளவு சமநிலையில் இல்லை என்பதை நிரூபிக்கவும் செய்வர். நாளடைவில் நீங்களும் இதை நம்ப ஆரம்பித்து, உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மை தலைதூக்க ஆரம்பித்துவிடும்.

தந்திரக்காரர்களின் தற்புகழ்சியும் சூதும் தற்காலிகமானவை. நீங்கள் விழிப்புணர்வோடு, உங்கள் மீது நம்பிக்கை கொண்டு, உங்கள் உணர்ச்சிகளையும் எல்லைக் கோட்டையும் நன்கறிந்து செயலாற்றும்போது உங்கள் மதிப்பு உங்களுக்குப் புரிய வரும். வேறு எவராலும் அதைக் குறைக்கவோ குலைக்கவோ முடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com