
இந்தியத் திருநாடு சுதந்திரம் அடைந்து இந்த வருடம் 79வது சுதந்திர தினத்தை நாளைய தினம் ஆகஸ்ட் 15 அன்று கொண்டாட இருக்கிறது. இந்த நன்னாளில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் மற்றும் மக்களின் சேவைக்காகப் பணிபுரியும் அனைவருக்கும் நம்முடைய நல்வாழ்த்துகளை தெரிவிக்கலாமே.
இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அனைத்து வீரர்களின் மற்றும் தியாகிகளின் சந்ததியினருக்கு மிகப் பெரிய வாழ்த்துக்கள். கடந்த 78 வருடமாக இந்தியப் பிரதமராகவும், குடியரசுத் தலைவராகவும் மற்றும் அனைத்து தேசிய துறையிலும் அமைச்சராகப் பணி புரிந்து நம் தேசத்தை காத்தவர்களுக்கும், இப்போது காப்பவர்களுக்கும் நம் வாழ்த்துக்கள்.
அனைத்து மாநிலங்களிலும் முக்கிய மந்திரியாகவும் ஆளுநராகவும் அமைச்சராகவும் பணிபுரிந்தவர்களுக்கு / புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு நமது வாழ்த்துக்கள். இந்திய ராணுவத்தின் சிப்பாய்களுக்கும் கடற்படை மற்றும் விமானப் படை ஊழியர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்திய எல்லைப் பகுதியில் இரவு, பகல் பாராது அயராது பாடுபடும் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் நம் வாழ்த்துக்கள்.
ரயில் சேவையையும், சாலை வழி போக்குவரத்தையும், விமான சேவையையும் மக்களுக்காகத் திறம்பட செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் வாழ்த்துக்கள். பொதுப் பணித் துறையிலும் சேவைத் துறையிலும் பணிபுரிந்து, பல உதவிகளையும் நன்மைகளையும் நாட்டிற்காக செய்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.
காவல் துறை, தபால் துறை, தகவல் தொடர்புத் துறை மற்றும் உள்ள மிக அத்தியாவசியமான துறைகளில் பணி புரிந்து மக்கள் தேவையை பூர்த்தி செய்பவர்களுக்கு வாழ்த்துக்கள். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அமைச்சகத்தில் பணிபுரியும் அமைச்சர்களுக்கும் ஊழியர்களுக்கும் நம் வாழ்த்துக்கள்.
வருங்கால இந்தியாவின் வீரர்களை உருவாக்குவதற்கும், பொறியியல், மருத்துவம், வர்த்தகம் போன்ற துறைகளில் பணிபுரிவதற்கு ஏற்றவாறு மாணவ, மாணவிகளுக்கு கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். வன விலங்குகளைப் பேணி, அவற்றிற்கான தேவைகளைப் பூர்த்தி செய்து நமக்கு பாதுகாப்பாக இருக்கும் வனவிலங்குத் துறை அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இவர்கள் எல்லோரையும் விட, நாம் உண்பதற்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், வசிப்பதற்குத் தேவையான வீட்டு வசதிகளை உருவாக்கிக் கொடுக்கும் தொழிலாளர்களுக்கும், உடுப்பதற்கு ஆடைகளைத் தயாரிக்கும் நெசவாளர் மற்றும் தையல் துறை ஊழியர்களுக்கும் நம்முடைய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.
என்னதான் இந்தியா சுதந்திரம் அடைந்தபோதிலும் அந்தந்த துறையிலிருக்கும் அதிகாரிகளும் அமைச்சர்களும் ஊழியர்களும் தங்களுடைய சேவைகளை செய்யாமல் இருந்திருந்தால், நாம் எல்லோருமே சுதந்திரமாக, பாதுகாப்பாக, அமைதியாக, நிம்மதியாக வாழ்ந்திருக்க முடியாது. ஆகவே, இந்திய குடிமக்களாகிய நாம், நமக்காக சேவை செய்யும் அனைவர்களையும் என்றென்றும் மறவாமல் அவர்களுக்கு நம்முடைய நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்போமாக!
வாழ்க இந்தியா! வளர்க அதன் புகழ்! பாரத் மாதா கி ஜே!