பணக்காரர் ஆக ஆசையா? சாணக்கியரின் இந்த 8 விதிகளைப் பின்பற்றுங்கள்!

chanakya-principles
chanakya-principles
அகிலா சிவராமன்

வணக்கம், நான் சென்னையில் பிறந்து வளரந்தேன். 1995 ஆம் ஆண்டு திருமணத்திறகுப் பிறகு நான் ஜம்ஷேட்பூரில் settle ஆகி விட்டேன். நான் கடவுள்களின் பெயரில் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் தான் எனக்கு எழுதும் ஆர்வம் வந்தது. நான் முதன் முதலாக எழுதிய கதை, புயலின் மறுபக்கம் கல்கியின் மங்கையர் மலரில் 04.01.2025 அன்று வெளி வந்தது. கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதன்முதலாக எழுத சந்தர்ப்பம் கொடுத்த கல்கி குழுவினருக்கும், எனக்கு ஆதரவு தரும் வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும உங்களின் மனதை கவரும் வகையில் எழுத முயற்சி செய்வேன்.

Updated on

நாம் எல்லோருமே ஏதாவது ஒரு விதத்தில் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்று நாள்தோறும் போராடிக் கொண்டிருக்கிறோம் சிலர் பரம்பரை பரம்பரையாகவே பணக்காரர்களாக இருக்கிறார்கள். சிலருக்கு அதிர்ஷ்டவசமாக நல்ல வேலை கிடைத்து கார் பங்களா என வசதியாக இருக்கிறார்கள். சிலபேருக்கு எத்தனை பணம் வந்தாலும் அவர்களுடைய கைகளில் அது நிற்பதில்லை. ஒரு சில பேருக்கு அதற்கான வாய்ப்பே வருவதில்லை. பணக்காரர்களாக ஆகவேண்டும் என்றால் இந்த எட்டு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார் வாருங்கள் அவருடைய எட்டு விதிகளை பார்ப்போம்.

நேரத்தை வீணாக்காதீர்கள்:

வாழ்க்கையில் நம்மில் பல பேர் இந்த தவறைதான் செய்கிறோம். இன்று செய்யவில்லை என்றால் என்ன? நாளை செய்து கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துவிடுகிறோம். ஒருவர் நம்மை இன்று ஒரு வேலை விஷயமாக வந்து பார் என்று சொல்லும் பட்சத்தில் அலட்சியமாக இருந்துவிட்டு நாம் அடுத்த நாள் சென்றால், அந்த வேலை நமக்கு கிடைக்குமா? அது மட்டும் இல்லாமல் அன்றாடம் என்ன வேலை செய்யவேண்டுமோ அதை செய்ய பழகிக்கொள்ள வேண்டும். நேரத்தை வீணாக்காமல் நல்ல முறையில் உபயோகப்படுத்த வேண்டும்.

சேமிப்பு இல்லாமல் செலவு செய்யாதீர்கள்:

நமக்கு எத்தனை பணவரவு வருகிறதோ அதிலிருந்து குறைந்தபட்ச பணத் தொகையை வங்கியிலோ அல்லது வேறு ஏதாவது திட்டத்திலோ போட்டு சேர்த்து வைக்கவேண்டும் மீதி இருக்கும் பணத்தைத்தான் நான் செலவழிக்க வேண்டும் மாதம்தோறும் வரும் பணம் முழுவதையும் ஒரு பைசா கூட மிச்சம் வைக்காமல் செலவு செய்யும் வழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

பயம் காரணமாக முயற்சி செய்யாமல் இருக்காதீர்கள்:

நிறைய பேர் பயத்தை மனதில் வைத்துக்கொண்டு இதை ஆரம்பித்தால் வெற்றி கிடைக்குமா? கிடைக்காதா? என்று மனதிற்குள்ளே எண்ணி எண்ணி பயத்திலியே அதை கைவிட்டு விடுகிறார்கள். இந்த வேலைக்கு சென்றால் முன்னேற்றம் கிடைக்குமா? என்னால் செய்ய முடியுமா? என்றெல்லாம் பலவிதமான சிந்தனைகளை மனதில் போட்டு குழப்பிக்கொண்டு பயத்தோடு வாழ்நாளை அப்படியே கழித்து விடுபவர்கள் நம்மில் பலர் உண்டு. ஏதாவது தயவு செய்து பயப்படாமல் நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதை செய்து பாருங்கள் உங்களுக்கு சரியான தோன்றினால் அதை கண்டினியூ பண்ணுங்கள் இல்லை என்றால் விட்டு விட்டு வேறொன்றை பாருங்கள் அதற்காக முயற்சி செய்யாமலேயே இருக்காதீர்கள்.

இதையும் படியுங்கள்:
கோஸ்ட் ஹயரிங்: வேலைக்கு ஆட்கள் தேவை என வரும் விளம்பரங்களுக்குப் பின்னால் இருக்கும் பகீர் உண்மைகள் இதோ!
chanakya-principles

கெட்ட நண்பர்களோடு சகவாசம் வைத்து கொள்ளாதீர்கள்:

கெட்ட நண்பர்களோடு சகவாசம் வைத்து கொண்டால் அவர்கள் நம்முடைய பணம், ஒழுக்கம், நிம்மதி, மரியாதை போன்ற எல்லாவற்றையும் அழித்து விடுவார்கள். ஆகவே நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் மிகக் கவனமாக இருங்கள். உங்களைவிட வசதிகள் அதிகமாக இருக்கும் கெட்டவர்களை தேர்ந்தெடுக்காமல் வசதி குறைவாக இருந்தாலும் கண்ணியத்தோடும் உழைத்தும் வாழ்பவர்களை நண்பர்களாக தேர்ந்தெடுங்கள்.

புதிய விஷயங்களை கற்று கொள்ளுங்கள்:

தற்போதைய உலக நிலவரப்படி, ஒன்றை மட்டுமே நம்பி இருக்கவே முடியாது. ஆகவே அவ்வப்போது புது புது தொழிலையும் விஷயங்களையும் கற்றுக் கொள்ளுங்கள். இந்த துறையில் தற்சமயம் பாதுகாப்பு இல்லை எனறால் உடனடியாக உங்களால் வேறு ஒரு துறையில் வேலை செய்யக்கூடிய திறனை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

உடனடி லாபம் கிடைக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்:

உடனடியாக அதிக லாபம் கிடைக்கும் என்று யாரோ சொல்வதை கேட்டு பேராசை பட்டு சிந்திக்காமல் அத்தகைய தொழிலையோ அல்லது இன்வெஸ்ட்மேன்ட்டையோ தயவு செய்து செய்யாதீர்கள். பிறகு இருக்கிறதும் போய் முழு குருடனாகி விடுவீர்கள். எந்த தொழிலை செய்தாலும் படிப்படியாகதான் முன்னேற வேண்டும். அப்போது தான் ஒரு நிலையான பொருளாதாரத்தை அடைய முடியும். அதைப் போலவே investment செய்யும்போது சில போலியான நிறுவனத்தை நம்பி ஏமாறாதீர்கள். உடனடியாக லாபம் கிடைக்கும் என்று கூறி முதலீட்டை எடுத்து கொண்டு மோசம் செய்து விடுவார்கள்.

குறை கூறும் பழக்கத்தை தவிர்க்கவும்:

எப்போது பார்த்தாலும் உங்களுடன் வேலை புரிபவர்களையோ அல்லது வீட்டில் உள்ளவர்களையோ அல்லது உங்கள் தொழிற்சாலையில் பணிபுரிபவர் களையோ குறை கூறிகொண்டே இருக்காதீர்கள். இப்படி கூறுவதால் உங்களுடைய சொந்த தொழிறசாலையாக இருந்தால் வேலை செய்பவர்கள் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். ஆட்கள் மாறி மாறி வந்தால் தொழிலில் இலாபத்தை அடைய முடியாது. குறை கூறும் பழக்கமிருந்தால் குடும்பத்தில் உள்ளவர்களும் உங்களை விட்டு போய் விடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
மியூச்சுவல் ஃபண்டில் அதிக லாபம் பெற வேண்டுமா? உங்கள் பணத்தை இப்படி பிரித்து முதலீடு செய்யுங்கள்!
chanakya-principles

ஒழுக்கமான வாழ்க்கையை வாழுங்கள்:

மேலே கூறிய ஏழு விதிகளுக்கும் முதல்வன் இந்த எட்டாவது விதிதான், அதாவது ஒழுக்கம். ஒழுக்கமில்லாமல் பணத்தை சம்பாதிப்பது உயிரில்லாத உடலுக்கு சமம். ஆகவே, இளைஞர்களே முதலில் ஒழுக்கத்தை கடைபிடியுங்கள். பிறகு எல்லா விதிகளையும் பின்பற்றி வளமான வாழ்க்கையை வாழுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com