உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தங்களது ஆரோக்கியம் கெடாமல் உடல் எடையைக் குறைக்க உதவும் எட்டு ஆரோக்கிய பானங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தண்ணீர்: கலோரி அளவு ஏதுமின்றி உடலை நீரோட்டமாய் வைக்கக்கூடியது தண்ணீர். இது பசி உணர்வை கட்டுப்படுத்தும்.
க்ரீன் டீ: இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களும் கேட்டாசினும் மெட்டபாலிசம் சரிவர நடைபெறவும், கொழுப்பை எரிக்கவும் உதவும். இது சர்க்கரையோ கலோரிகளோ அற்றது. இதில் குறைந்த அளவு சக்தி தரக்கூடிய காஃபைன் அடங்கியுள்ளது.
ஹெர்பல் டீ: காஃபைன் இல்லாத குறைந்த அளவு கலோரி கொண்டது. ஜீரணத்துக்கு உதவும். மன அழுத்தத்தை குறைக்கக் கூடியது.
வெஜிடபிள் ஜூஸ்: ஊட்டச்சத்து நிறைந்தது. உடல் எடையை அதிகரிக்கக்கூடிய சர்க்கரை இல்லாதது. குறைந்த கலோரி கொண்டது. வைட்டமின்களும் மினரல்களும் அதிகளவு நிறைந்தது வெஜிடபிள் ஜூஸ்.
பால்: குறைந்த கொழுப்பு சத்து கொண்டது பால். எலும்பு மற்றும் தசைகளின் ஆரோக்கியத்துக்கு தேவையான கால்சியமும் புரோட்டீனும் தரக்கூடியது. குறைந்த கலோரியுடன் சாச்சுரேட்டட் கொழுப்பு அடங்கிய ஸ்கிம்ட் மில்க் அல்லது குறைந்த கொழுப்பு சத்துடைய பாலை தேர்ந்தெடுத்து அருந்துவது நலம்.
இளநீர்: இயற்கையான எலக்ட்ரோலைட்கள் நிறைந்தது இளநீர். இதில் குறைந்த கலோரியும் அதிகளவு பொட்டாசியமும் உள்ளது. ஒர்க் அவுட்டுக்குப் பின் அருந்தினால் புத்துணர்ச்சி அளிப்பது.
ஸ்பார்க்லிங் வாட்டர்: ஆரோக்கியம் தரும் சோடா போன்று நுரைத்து வரும் தன்மை கொண்ட மினுமினுக்கும் தண்ணீர் (sparkling water). சர்க்கரை சத்தோ, செயற்கை இனிப்பூட்டியோ அற்றது. கலோரியும் இல்லாதது. இதற்கு பதிலாக ஆரோக்கியம் கொண்ட சோடாவையும் அருந்தலாம்.
ஸ்மூத்தி: ஊட்டச்சத்து மிக்க கீரைகள், பழங்கள், புரோட்டீன் நிறைந்த க்ரீக் யோகர்ட் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் ஸ்மூத்திகளை உட்கொள்வது நல்ல ஆரோக்கியம் தரும். அவற்றை சர்க்கரை சேர்க்காமல் குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்கும்.
எடை குறைத்து, ஆரோக்கியத்துடன் கூடிய ஸ்லிம்மான உடலைப் பெற விரும்புவோர் மேற்கண்ட உடல் நலம் தரும் டயட்டை பின்பற்றி நலம் பெறலாம்.