உலகளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோயாளிகள் வீட்டில் இருந்தபடியே குளுக்கோ மீட்டர் சோதனை மேற்கொள்ளும்போது கடைபிடிக்க வேண்டிய 8 முக்கியமான விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. குளுக்கோ மீட்டர் சோதனைக்கு ஆள்காட்டி விரல், கட்டை விரலைத் தவிர்த்து மோதிர விரல் நடுவிரலைப் பயன்படுத்த வேண்டும்.
2. விரல் நுனிகளில் குறைவான உணர் திறன் இருப்பதால் அங்கு அதிக இரத்த நாளங்கள் இருப்பதாலும் போதுமான இரத்தம் கிடைத்துவிடும் என்ற காரணத்தாலும் இந்த சோதனைக்கு விரல் நுனிகளைப் பயன்படுத்த வேண்டும்.
3. அடிக்கடி குளுக்கோ மீட்டர் சோதனையை எடுப்பவர்கள் ஒரே விரலை பயன்படுத்தாமல் சுழற்சி முறையில் அடுத்தடுத்த விரலைப் பயன்படுத்துவதால் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவும்.
4. சோதனை செய்வதற்கு முன்பாக கைகளை சுத்தமாக கழுவி உலர்ந்த நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
5. சாதனத்தின் செட்டிங்கை தேவையான அளவு ஆழத்திற்கு செல்லும்படி அமைப்பது வலியை குறைப்பதற்கு உதவும்.
6. சோதனை மூலமாக உங்களுக்குக் கிடைத்த உங்களுடைய இரத்த சர்க்கரை அளவுகளின் முடிவுகளை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். தேதி, நேரம் மற்றும் உணவு அல்லது மருந்து போன்ற தேவையான விஷயங்களை அதில் எழுதி வைத்துக் கொள்வது சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் மற்றும் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படுகிறதா என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.
7. சோதனை செய்யும்போது ஒருபோதும் விரல்களை அழுத்தி இரத்தம் எடுக்கக் கூடாது. விரல்களை பொறுமையாகக் கையாளுவதன் மூலமாகத்தான் துல்லியமான முடிவுகளைப் பெற முடியும்.
8. ஒவ்வொரு சோதனைக்கும் ஒரு புதிய லேண்சைட் பயன்படுத்துவது வலியை குறைப்பதோடு தொற்று ஏற்படுவதையும் தவிர்க்கும்.
மேற்கூறிய 8 விஷயங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு முறையாக பின்பற்றினால் வீட்டில் இருந்தே செய்யும் குளுக்கோ மீட்டர் சோதனையில் துல்லியமான முடிவுகளை நீரிழிவு நோயாளிகள் பெறுவதோடு, வலி மற்றும் தொற்று ஏற்படுவதை தவிர்க்கவும் முடியும்.