
நம் வீட்டில் வைத்திருக்கும் சில பொருட்கள் எப்படி செல்வத்தை ஈர்க்கிறதோ? அதுப்போலவே நம் வீட்டில் தூக்கிப் போடாமல் தேவையில்லாமல் நாம் வைத்திருக்கும் சில பொருட்களுக்கு நெகட்டிவ் எனர்ஜியை ஈர்க்கும் சக்தி உண்டு. அதுப்போன்ற பொருட்களை வீட்டில் வைத்திருப்பது தவறு. உடனே அதை அப்புறப்படுத்த வேண்டும். அத்தகைய பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. உடைந்த கண்ணாடிகள்:
வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடி, வீட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடி, கண்ணாடி பொருட்கள் உடைந்து விட்டால், அதை தூக்கிப் போட்டுவிட வேண்டும். இல்லையென்றால் வீண் செலவுகள், விபத்துக்கள் ஏற்படும்.
2. ஓடாத கடிகாரம்:
வீட்டில் ஓடாத அல்லது பழுதான கடிகாரம் இருந்தால் சிலர் அதை கண்டுக்கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். இவ்வாறு செய்வது மிகவும் தவறாகும். இதனால் குடும்பத்தில் பிரச்னை, கடன் ஏற்படும்.
3. காய்ந்த செடிகள்:
வீட்டில் வளர்க்கக்கூடிய செடிகளான துளசி, வாழை, வெற்றிலை போன்றவற்றை காய விடாமல் பச்சைப்பசேல் என்று வளர்க்க வேண்டும். வீட்டில் செடிகள் காய்ந்துப் போனால் தொழில் நஷ்டம், நிம்மதியின்மை ஏற்படும்.
4. துருப்பிடித்த இரும்புகள்:
வீட்டில் உள்ள இரும்புகள் துருப்பிடித்திருக்கக் கூடாது. வீட்டில் உள்ள சாவி, பூட்டு, தாழ்பாள், இரும்பு கேட் துருப்பிடிக்கக்கூடாது.
5. கிழிந்த துணிகள்:
வீட்டில் பழைய கிழிந்த துணிகள் இருந்தால், அதை அப்புறப்படுத்தி விடுவது நல்லது. பழைய கிழிந்த துணிகளை அணிவதால், தரித்திரம் உண்டாகும்.
6. மூழ்கும் கப்பல்:
மூழ்கும் கப்பல் உள்ளது போன்ற படத்தை வீட்டில் வைப்பதால் வீட்டில் உள்ளவர்களின் முன்னேற்றத்தில் தடை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. மூழ்கும் கப்பல் அதன் கடைசி கட்டத்தை எட்டுவதுப்போல வீட்டில் உள்ளவர்கள் வாழ்வும் அழிந்துவிடும் என்று பொருள்.
7. உடைந்த சிலை:
வீட்டில் உடைந்த சிலைகள் வைப்பதின் மூலமாக வீட்டில் கெட்ட சக்திகள் குடியெறிவிடும். இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு பிரச்னை ஏற்படும்.
8. அழுக்கான நுழைவாயில்:
வீட்டின் நுழைவாயிலை தூய்மையாகவும், தோரணம் கட்டியும் வைப்பது நல்ல சக்தியை வீட்டில் குடியேற செய்யும். வீட்டின் நுழைவாயில் பக்கத்தில் குப்பைத்தொட்டியை வைக்கக்கூடாது. அது வீட்டினுள் கெட்ட சக்தியை கொண்டுவரும் என்று சொல்லப்படுகிறது. இந்த 8 பொருட்களில் எது உங்கள் வீட்டில் இருந்தாலும் உடனே அப்புறப்படுத்திவிடுவது லக்ஷ்மி கடாட்சத்தை அதிகரிக்கும்.