உங்க ரிலேஷன்ஷிப் மோசமா இருக்கா? அப்போ இந்த 8 டிப்ஸ் உங்களுக்குதான்!

Relationship Tips.
Relationship Tips.

ரிலேஷன்ஷிப் சரியாக செல்லவில்லை என்றாலே அது மிகப் பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த மன அழுத்தமானது நம்மை எந்த வேலையிலும் கவனம் செலுத்தவிடாமல், முடங்கச்செய்துவிடும். இப்படி நீங்களும் ரிலேஷன்ஷிப் மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்றால், இந்த டிப்ஸ்களைப் பின்பற்றினால் உங்கள் ரிலேஷன்ஷிப்பை சிறப்பாக மாற்ற முடியும். 

  1. என்னதான் உங்களுடைய ரிலேஷன்ஷிப் மோசமாக இருந்தாலும், ஒருவர் தங்களின் தேவைக்காக உங்களிடம் பேசும்போது கட்டாயம் பதில் அளிக்க கற்றுக் கொள்ளுங்கள். இப்படி ஈகோ இல்லாமல் பேசிக் கொள்ளும்போது கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய ரிலேஷன்ஷிப் பலமடைய வாய்ப்புள்ளது. 

  2. முடிந்தவரை உங்கள் துணை செய்யும் சிறிய விஷயமாக இருந்தாலும் அதை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள். பொதுவாகவே பிறந்த நம்மை பாராட்டினால் அது மிகுந்த மகிழ்ச்சியை நமக்கு அளிக்கும். இப்படி பாராட்டுவதால் உங்களுக்குள் சிறு மனஸ்தாபம் இருந்தாலும் அதை மறந்து ஒரு நட்புணர்வை ஏற்படுத்தும். 

  3. உங்கள் துணையின் கடினமான காலங்களில் நீங்கள் ஆறுதலாக இருங்கள். அவர்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டால் மோசமாக கண்டிக்காமல், உறுதுணையாக இருந்து அரவணைக்கும்போது உங்களுக்குள் மீண்டும் பிணைப்பை ஏற்படுத்தலாம். 

  4. ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் இருவரும் அவர்களின் சுயமதிப்பை தெரிந்து தங்களின் இலக்குகளில் கவனம் செலுத்தி கலந்தாலோசித்து முயற்சிப்பது உங்களுக்குள் புரிதலை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இருவருக்கும் பொதுவான குறிக்கோள் இருந்தால், அதைப் பற்றி கலந்துரையாடுவது மூலமாக உங்களது பிணைப்பை பலப்படுத்தலாம். 

  5. நல்ல மற்றும் கெட்ட காலங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் ஆதரவாக இருந்து முடிந்தவரை பிரச்சனையின்றி பார்த்துக் கொள்ளுங்கள்.

  6. பணியிடம் மற்றும் குடும்பத்தில் இருக்கும் மன அழுத்தத்தை இருவரும் சேர்ந்து சமாளிக்க வேண்டியது முக்கியம். இத்தகைய சவாலான சூழ்நிலைகளுக்கான தொடக்கத்தை கண்டறிந்து இருவரும் ஒன்றாக சேர்ந்து தீர்க்க முயலுங்கள். 

  7. ஏதாவது ஒரு விஷயத்தில் முக்கிய முடிவெடுக்க வேண்டும் என்றால், நீங்கள் மட்டுமே தனியாக முடிவெடுக்காமல், உங்கள் துணையுடனும் ஆலோசனை செய்து முடிவெடுப்பது உங்களுக்குள் பரஸ்பர பரிமாற்றத்தை வளர்க்க உதவும். 

  8. எந்த பிரச்சினையாக இருந்தாலும் முதலில் இருவரும் மனம் விட்டு பேசிக் கொள்ளுங்கள். ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பிரச்சினைகளை வெளிப்படையாக பேசினாலே அனைத்தும் சுமூகமாக முடிந்துவிடும். எனவே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்ளாமல் மனம் விட்டு பேசுங்கள். 

இதையும் படியுங்கள்:
உங்கள் Motivation-ஐ குறைக்கும் 4 விஷயங்கள் என்ன தெரியுமா? 
Relationship Tips.

இந்த எட்டு விஷயங்களைக் கடைப்பிடித்தால் எவ்வளவு மோசமான ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் ஓரளவுக்கு நல்லபடியாக மாறும் வாய்ப்புள்ளது. எனவே இவற்றை முயற்சித்துப் பார்த்து இருவரும் மகிழ்ச்சியாக இருங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com