உங்கள் Motivation-ஐ குறைக்கும் 4 விஷயங்கள் என்ன தெரியுமா? 

4 Things that reduce your Daily Motivation.
4 Things that reduce your Daily Motivation.

கடந்த சில மாதங்களாகவே ‘எனக்கு பிடித்த விஷயங்களை நான் செய்ய விரும்பாதது’, என்னை மோட்டிவேஷனை ஏற்படுத்திக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வைத்தது. என்னைப் பொறுத்தவரை மோட்டிவேஷன் என்பது எதுபோன்ற விஷயங்களை நாம் சிறப்பாக செய்ய விரும்புகிறோம் என்பதை விட, உண்மையிலேயே எந்தெந்த விஷயங்களை முயற்சி செய்தோம் என்பதிலேயே அடங்கியுள்ளது. 

எல்லா நாளும் ஒரே மாதிரி உந்துதளுடன் இருப்பது மிகவும் கடினமாகவே உள்ளது. இந்த நிலைக்கு முக்கிய காரணமாக இருக்கும் 4 விஷயங்கள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம். 

1. பொய்யான கிளர்ச்சி: நமக்கு உண்மையான கிளர்ச்சி அல்லது மகிழ்ச்சி என்பது நாம் கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்து அதில் கிடைக்கும் வெற்றி மூலமாக கிடைக்க வேண்டுமே தவிர, பிடித்த ஜங்க் ஃபுட் உண்பதாலோ, தவறான திரைப்படங்கள் பார்ப்பதாலோ அல்லது போதைப்பொருட்களை பயன்படுத்துவதாலோ கிடைக்கக் கூடாது. இந்த பொய்யான கிளர்ச்சி என்பது, நமது தினசரி மோட்டிவேஷனை மோசமாகக் கெடுத்துவிடும். இதன் காரணமாகவே பலர் இந்த கிளர்ச்சிக்கு அடிமைப்பட்டு தங்களுக்கான செயல்களை செய்யாமல் போய்விடுகிறார்கள். 

2. மோட்டிவேஷனுக்காக காத்திருப்பது: நான் பல நாட்கள் என்னுடைய முக்கியமான வேலைகளை செய்வதற்கு எனக்கு போதிய உந்துதல் தேவை என காத்துக் கொண்டு செய்யாமலேயே இருந்திருக்கிறேன். அதன் பிறகுதான் மோட்டிவேஷன் என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல அது நமது செயல்களில் இருந்து கிடைக்கக்கூடியது என்பதைப் புரிந்து கொண்டேன். மோட்டிவேஷன் இருந்தால் மட்டுமே நான் எனக்கான வேலைகளை செய்வேன் என காத்துக்கிடந்தால், எதையுமே உருப்படியாக செய்ய முடியாது. மோட்டிவேஷன் இல்லை என்றாலும் கஷ்டப்பட்டு ஏதோ ஒரு வேலையை செய்யும்போது மட்டுமே, அதிலிருந்து நமக்கு உந்துதல் கிடைக்கும். 

இதையும் படியுங்கள்:
உங்களை சிறப்பாக மாற்ற முயற்சிக்கிறீர்களா?.. இந்த 5 விஷயங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்! 
4 Things that reduce your Daily Motivation.

3. உங்களைப் பற்றி அதிகம் சிந்திப்பது: பெரும்பாலானவர்களுக்கு மோட்டிவேஷன் இல்லாமல் போவதற்கு இந்த ஒரு விஷயமே காரணம் ஆகும். அதாவது உங்களைப் பற்றி சிந்திப்பது என்றால், ஏதாவது ஒரு வேலையை செய்ய முடிவெடுக்கும் போது, “எனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது, எனக்கு இதில் அனுபவம் இல்லை, என்னால் இது முடியாது, நான் இந்த துறையில் பயிலவில்லை” என அதை முயற்சிப்பதற்கு முன்பாகவே உங்களை முன்னிறுத்தி ஒரு வேலையை செய்யாமல் நிறுத்தி விடுவதாகும். இப்படி எத்தனை பேர் எத்தனை வாய்ப்புகளை வேண்டாம் எனக் கூறி இழந்திருக்கிறீர்கள்? என சிந்தித்துப் பாருங்கள். இத்தகைய எண்ணமும் உங்களுடைய மோட்டிவேஷனை குறைத்துவிடும். 

4. “இப்படி நடந்தால்” மனநிலை: நான் பல தருணங்களில், இருக்கும் வேலையை விட்டுவிட்டு எனது வாழ்வில் நடக்காத விஷயங்களைப் பற்றி நினைத்துப் பார்த்து, “ஒருவேளை இப்படி இது நடந்தால் நன்றாக இருக்குமே” என சிந்தித்து பொய்யான மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். இப்படி நாம் எந்த செயலிலும் ஈடுபடாமல் இது நடந்தால் நன்றாக இருக்கும், அது நடந்தால் நன்றாக இருக்கும் என சிந்தித்துக் கொண்டிருப்பதால் எதுவும் மாறப் போவதில்லை. இதனால் நேரம் மட்டுமே வீணாகுமே தவிர, எந்த ஒரு மோட்டிவேஷனும் இத்தகைய சிந்தனையால் கிடைக்காது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com