குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 8 வழிமுறைகள்!

Ways to help children develop brain
Ways to help children develop brain
Published on

குழந்தை வளர்ப்பு என்பது சவாலான, அதேநேரத்தில் மகிழ்ச்சியான பணியும் கூட. குழந்தைகளின் பகுப்பாய்வு திறன் மற்றும் மனதை கூர்மைப்படுத்துவதில் பெற்றோர்களின் பங்கு அளப்பரியது. அந்த வகையில், குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. முதலில் பிள்ளைகளின் எண்ணங்களிலும் செயல்களிலும் வெளிப்படை தன்மையைக் கொண்டு வர கற்றுக் கொடுக்க வேண்டும். சிறு வயதிலேயே எந்த பயமும் தயக்கமும் இல்லாமல் தங்கள் பிரச்னைகளை வெளிப்படையாகப் பேச கற்றுக் கொடுப்பதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கிறது.

2. சிறு வயதிலிருந்தே பிரச்னைகளை எதிர்கொள்ளும் தைரியத்தை குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துவதால் அவர்கள் பிரச்னையை அப்படியே விட்டு விட்டு ஓடி விடாமல் தீர்வு காண முற்படுவார்கள். இதனால் குழந்தைகளின் சிந்தனை திறன் அதிகரிக்கிறது.

3. குழந்தைகள் எதிர்மறையான சிந்தனையில் ஈடுபடுகிறார்கள் என்பதைக் கண்டறியும்போது சுய பிரதிபலிப்பு பயிற்சிகள் பத்திரிகைகள் அல்லது வெளிப்படையான உரையாடல்கள் மூலம் இதனை களைய முற்படுவதன் மூலம் குழந்தையின் மூளை செயல் திறன் அதிகரிக்கிறது.

4. என்னால் இதைச் செய்ய முடியும், எனக்குத் தகுதி இருக்கிறது போன்றவற்றை அடிக்கடி குழந்தைகளிடம் சொல்ல வைக்கும்பொழுது அவர்களது தோல்வி பயம் மறைந்து சுயமரியாதை அதிகரித்து சிந்தனை திறன் ஊக்கப்படுத்தப்படுகிறது.

5. உட்புற விளையாட்டுகள் மற்றும் வெளிப்புற விளையாட்டுகள் இரண்டையும் விளையாட குழந்தைகளை ஊக்கப்படுத்துவதோடு, பெற்றோர்களாகிய நீங்களும் அவர்களுடன் விளையாடும்போது குழந்தைகளின் உடலும் மனதும் சரியாக பராமரிக்கப்பட்டு, மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறது.

6. குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்கப்படுத்தும்போது அது அறிவாற்றல் செயல்பாடு, உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அவர்களின் வளர்ச்சியில் பெரிதும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
சொரியாசிஸ் நோயை எதிர்கொள்ளும் விதமும், தடுப்பு முறைகளும்!
Ways to help children develop brain

7. குழந்தைகள் எந்த ஒரு பிரச்னைகளுக்கும் மற்றவர்களை சார்ந்து இருப்பதற்கு பதிலாக அவர்களே சொந்த தீர்வுகளைக் கண்டறிய ஊக்கப்படுத்துவதன் மூலம் சுய சார்பு உடையவர்களாக மாற்றுவது அவர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

8. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு போதுமான தூக்கத்தையும் ஆரோக்கியமான உணவையும் உறுதிப்படுத்துவது அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

மேற்கூறிய எட்டு வழிமுறைகளை கையாளுவதன் மூலம் பெற்றோர்கள் குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிட முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com