Business Magnet
Business Magnethttps://cubecreative.design

தொழிலதிபர்களை, ‘பிசினஸ் மேக்னட்டு’ என அழைப்பதன் 9 சுவாரஸ்ய காரணங்கள்!

பொதுவாக, காந்தம் இரும்பை ஈர்க்கும் இயல்புடையது. தொழிலதிபர்களை 'பிசினஸ் மேக்னட்டுகள்’ என்று சொல்வார்கள். அதற்கான காரணங்கள் என்னவென்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. மக்களை ஈர்ப்பதால்: தொழிலதிபர் மக்களை காந்தம் போல தம்பால் ஈர்க்கிறார். எனவே, அவரை காந்தம் என்கிறார்கள். அவருடைய தன்னம்பிக்கை, தொழில் வெற்றி மற்றும் ஆளுமைத் தன்மையால் மக்களை காந்தம் போல ஈர்க்கிறார்.

2. தலைமைத்துவப் பண்பு: ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் நல்ல தலைமைத்துவ பண்பை கொண்டிருப்பார். அவரை ரோல் மாடலாகக் கொண்டு பின்பற்றி நடக்க ஏராளமான நபர்கள் தயாராக இருப்பார்கள். அவர் தனது தொழிலில் ஏற்படுத்திய வெற்றியின் ரகசியத்தை அறியவும், அவரது பாணியை பின்பற்றவும் விரும்பும் மனிதர்களை அவர் காந்தம் போல ஈர்க்கிறார்.

3. வலுவான டீம்: ஒரு தொழிலதிபர் அதிகமான மக்களை சந்திப்பார். அவருக்கென்று ஒரு வலுவான டீம் இருக்கும். அவருடன் இணைந்து வேலை செய்யவும், அவரின் கீழ் பணியாற்றவும் அறிவார்ந்த ஆற்றல்மிக்க மனிதர்கள் இருப்பார்கள். அவருடைய யோசனைகளைக் கேட்டு பின்பற்றி நடக்க அவர்கள் தயாராக இருப்பார்கள்.

4. நற்பெயர்: ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் பெரும்பாலும் நம்பகமானவராக இருப்பார். நல்ல பெயரைப் பெற்றிருப்பார். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பார். தொழிலில் தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்திருப்பார். எனவே, இத்தகைய நல்ல பண்புகளால் அவர் நற்பெயரும் பெற்றிருப்பார். எனவே, அவருடன் வியாபார ரீதியாக தொடர்பு வைத்துக்கொள்ள பிற நிறுவனங்கள் விரும்பும். அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் மற்றவர்களுக்கு நிறைய பாடங்கள் அவரிடம் இருக்கும். அதனால் அவர் பிறரை காந்தமாக இழுக்கிறார்.

5. காந்த ஆளுமை: காந்த ஆளுமைத்தன்மை கொண்ட ஒரு தொழில் அதிபர் எங்கு சென்றாலும் பிறரிடம் மிக எளிதாக நட்புக் கொண்டு பழகக் கூடியவர். அதனால் இயல்பாகவே மக்கள் அவர்பால் ஈர்க்கப்படுகிறார்கள். அவருடன் பேசவும் கைகுலுக்கவும், செல்பி எடுத்துக் கொள்ளவும் விரும்புகிறார்கள்.

6. வாய்ப்புகள்: எப்போதும் புதிய வாய்ப்புகளை தேடும் இயல்புடையவராக ஒரு தொழிலதிபர் இருக்கிறார். அந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள அவர் ரிஸ்க் எடுக்கவும் தயங்குவதில்லை. புதிய திட்டங்களை தீட்டி புதிய முயற்சிகளில் இறங்கும் அவரது தன்மையால் காந்தம் போல பிறரை கவர்கிறார்.

இதையும் படியுங்கள்:
கைக்குழந்தைக்கு பாதுகாப்பு கவசமாகத் திகழும் தாய்ப்பாலின் மகத்துவம்!
Business Magnet

7. செல்வாக்கு: ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர் பெரும்பாலும் அவரது தொழில் வட்டாரத்திலும் சமூகத்திலும் குறிப்பிடத்தக்க செல்வாக்கை கொண்டிருப்பார். இது அவரது நிபுணத்துவம் மற்றும் தொழில் ரீதியான ஞானத்தை நிரூபிக்கிறது. அவர் மற்றவர்களை ஈர்க்க இவையும் காரணமாக அமைகின்றன.

8. நிதி ஈர்ப்பு: ஒரு தொழில் அதிபர் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்றவராக இருப்பார். எனவே, அவர் முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் அவரிடம் தொடர்பு கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களை மிக எளிதாக கவர்கிறார். அவருடன் நட்பு வைத்துக்கொள்ள சமுதாயத்தில் மிகுந்த ஆவலுடன் பெரிய பணக்காரர்கள் முன் வருகிறார்கள். அவருடன் புதிய ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ளவும் விரும்புவார்கள்

9. வளர்ச்சி: ஒரு தொழிலதிபர் எப்போதும் வளர்ந்துகொண்டே இருக்கும் இயல்புடையவர். தன்னுடைய தொழிலில் தொடர்ந்து வளர்ச்சி காண்பார். மேலும், புதிய யோசனைகள், திறமைகள் மற்றும் தொழில் சார்ந்த அறிவை ஈர்க்கும் காந்தம் போன்றவர். இந்த வளர்ச்சி மனப்பான்மையை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளவும் ரோல் மாடலாக ஏற்றுக் கொள்ளவும் விரும்புவோரை ஒரு சக்தி வாய்ந்த காந்தம் போல அவர் தன்னை நோக்கி ஈர்க்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com