கம்பர்ட் ஸோனை விட்டு வெளியே வரக் கற்க வேண்டிய 9 பாடங்கள்!

life lesson to get out from the comfort zone
life lesson to get out from the comfort zoneImage Credits: HuffPost

ம்முடைய வாழ்க்கைக்கு மாற்றம் என்பது மிகவும் முக்கியமானது. மாற்றம் இருந்தால்தான் அடுத்த கட்டத்திற்கு வாழ்க்கையை நகர்த்தி சென்று வெற்றி பெற முடியும். ஆனால், நம்மில் பலர் ‘கம்பர்ட் ஸோனை’ விட்டு வெளிவர தயங்குகிறோம். 'இதுவே நன்றாக இருக்கிறதே' என்று எண்ணி ஒரே இடத்தில் தேங்கி நிற்பது நமக்கு என்றுமே பயனளிக்கப் போவதில்லை. எனவே, கம்பர்ட் ஸோனை விட்டு வெளிவர நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய 9 பாடங்கள் என்னவென்று பார்க்கலாம்.

1. வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைபவர்களை உற்று நோக்கினால், அவர்கள் பெரிய அறிவாளிகளாகவோ அல்லது கடின உழைப்பாளிகளாகவோ இருப்பதில்லை. அவர்கள் எல்லாவற்றையும் விரைவாக கற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். நமக்கு பயனுள்ளதாக இருப்பதைக் கற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

2.கம்பர்ட் ஸோன் என்பது நிழலுக்கு கீழே செடியை வளர்ப்பது போன்றதுதான். செடியின் மீது வெயில் படவில்லை என்றால் எந்த வளர்ச்சியும் இருக்காது. நம் வாழ்க்கையில் நாம் போகும் விதத்தை மாற்ற எண்ணாமல் இப்போது இருப்பது போலவே இருப்போம் என்று நினைத்தால், எப்போதும் இப்படியேதான் இருக்க நேரிடும்.

3. நான் எல்லாவற்றிலும் சரியாக இருப்பேன். நான் என் வாழ்வில் ஒரு சின்ன தவறுக்கூட செய்யாமல் Perfect ஆக இருப்பேன் என்று நினைப்பதும் தவறு. அதேபோல் எந்த வேலையையும் முடிக்காமல் நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதும் தவறு. எதுவாக இருந்தாலும் இன்று செயல்படுத்துவதே வெற்றியை தரும்.

4. நம் வாழ்க்கையில் எதிர்க்கொள்ளும் பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணம் யார் எது கேட்டாலும் யோசிக்காமல் ‘எஸ்’ சொல்வதும், எப்போது ‘நோ’ சொல்ல வேண்டும் என்று தெரியாமல் இருப்பதுமேயாகும்.

5. காலையில் எழுந்ததும் அன்றைக்காக நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். நாம் வாழ்வதால் மகிழ்ச்சியாக இருக்கிறோம், யோசிச்கிறோம், பிடித்ததை சாப்பிடுகிறோம். எனவே ஒவ்வொரு நாளும் நமக்கு வரப்பிரசாதமே. அத்தகைய வாழ்க்கையை வாழ்வதற்கு மகிழ்ச்சியடைய வேண்டும்.

6. நம்முடைய வாழ்க்கையில் கஷ்டப்பட்டும் இலக்கை அடைய முடியவில்லையே என்று நினைத்து வருத்தப்பட தேவையில்லை. சிலருக்கு வாழ்க்கையில் இலக்கு என்பதேயில்லை என்பதே உண்மையாக வருத்தப்படக்கூடிய விஷயமாகும்.

7. சில செயல்கள் செய்வதற்கும், பார்ப்பதற்கும் கடினமாக இருக்கும். ஆனால், எதுவுமே தொடங்குவதற்கு முன்பு கடினமாகவே தோன்றும். தொடங்கி வெற்றியடைந்த பிறகு தூசியை போன்ற உணர்வு வரும். எனவே தொடங்குவதற்கு தயங்க வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
கடினமான நேரத்திலும் மறக்கக்கூடாத 12 வாழ்க்கைப் பாடங்கள்!
life lesson to get out from the comfort zone

8. ரிஸ்க் எடுப்பதற்கு இங்கே பலர் தயங்குவதுண்டு. வாழ்க்கையில் மிக பெரிய ரிஸ்க் எதுவென்றால், எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் இருப்பதுதான். உலகம் தினமும் மாறிக்கொண்டேயிருக்கிறது. அதற்கு இணையாக செல்ல வேண்டும் எனில் மாற்றம் தேவை, ரிஸ்க் தேவை. அப்படியில்லையேல் ரிஸ்க் எடுக்காமல் கம்பர்ட் ஸோனில் இருப்பது தோல்வியை தரும்.

9. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நொடியும் முக்கியமானதாகும். எனவே எந்த செயலையும் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவது உங்கள் கைக்கு கிடைக்கும் வெற்றியை நாளைக்கு வரச் சொல்லி திருப்பி அனுப்புவதற்கு சமமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com