பூனை ஆற்றல் கொண்ட மனிதர்களின் 9 தனித்துவமான பண்புகள்!

பூனை ஆற்றல் கொண்ட மனிதர்கள்
பூனை ஆற்றல் கொண்ட மனிதர்கள்
Published on

கேட் எனர்ஜி (Cat Energy) எனப்படும் பூனை ஆற்றல் கொண்ட மனிதர்களின் தனித்துவமான 9  பண்புகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

1. சுதந்திரம்: சுதந்திரமாக சுற்றித் திரியும் பூனைகள் போலவே இந்த நபர்கள் தங்கள் சுதந்திரத்தை எல்லாவற்றிற்கும் மேலாக மதிக்கிறார்கள். சொந்தமாக முடிவுகளை எடுக்கவும் செயல்களை செய்யவும் விரும்புகிறார்கள். தடைகள் இல்லாமல் தாங்கள் விரும்பும் சுதந்திரம் கிடைக்கும்போது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். பிறரை அவ்வளவாக நம்பவும் விரும்புவதில்லை.

2. சிறிய குழுக்களே விருப்பம்: பிறருடன் நேரத்தை செலவழிக்க விரும்பினாலும் பெரிய கூட்டத்தை விரும்பாமல் சிறிய அளவிலான மக்கள் கூட்டத்தையே விரும்புவார்கள். அதிலும் அவர்கள் மிக நெருக்கமான நண்பர்கள் அல்லது உறவினர்களாக இருக்க வேண்டும். இவர்கள் பெரும்பாலும் பெரிய குழுக்களை ஒதுக்கும் இயல்புடையவர்கள் மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் மிகவும் சங்கடமாக உணர்வார்கள்.

3. ஆர்வம்: இயற்கையாகவே ஆர்வ மனப்பான்மை கொண்ட இந்த நபர்கள், புதியனவற்றை கற்க விரும்புவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்களை கற்க நேரும்போது அவர்கள் மிகவும் ஆழமாக தெரிந்து கொள்வார்கள். புதிய விஷயங்களை எச்சரிக்கையான மனோபாவத்துடன் அணுகுவார்கள்.

4. விளையாட்டுத்தனம்: இவர்கள் மிகவும் விளையாட்டுத்தனமான இயல்புடையவர்கள். நகைச்சுவையான வேடிக்கையான செயல்பாடுகளை விரும்புவார்கள். அவற்றில் ஈடுபடவும் செய்வார்கள். இவர்களது நகைச்சுவை உணர்வு தனித்துவமானது. இவர்களின்  விளையாட்டுத்தனமான இயல்பு பிறரை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது போல இருக்கும்.

5. சொகுசு விரும்பிகள்: பூனை எனர்ஜி உள்ள மக்கள் சொகுசான வாழ்க்கை வாழ விரும்புவார்கள். வசதியான இடத்தில் வசிப்பது, ஓய்வெடுப்பது நல்ல உயர்தர ஆடைகளை அணிவது, விருப்பமான செயலில் ஈடுபடுவது என எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு வசதியான சூழலை உருவாக்கி விடுவார்கள். அவர்கள் இருக்கும் இடத்தை மிகவும் சவுகரியமாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள்.

6. உற்று கவனித்தல்: இவர்கள் உற்று கவனிக்கக் கூடியவர்கள். பிறர் தவறவிடக்கூடிய நுட்பமான விவரங்களை அடிக்கடி உற்று கவனிப்பார்கள். தூரத்தில் இருந்து அமைதியாக பார்க்கும் பூனைகளைப் போல இவர்கள் முழுமையாக எந்த காரியத்திலும் ஈடுபடுவதற்கு முன்பு சூழ்நிலைகளை மதிப்பிடுவார்கள். விழிப்புணர்வு மற்றும் நுண்ணறிவு இவர்களுக்கு அதிகம்.

7. சமநிலை மனப்பான்மை: நண்பர்கள் உறவுகள் குடும்பத்தினர் மீது பாசமும் அன்பும் காட்டினாலும் தனக்கான தனித்தன்மையை விட்டு தர மாட்டார்கள். தங்கள் தொழில் உறவுகள் மற்றும் தங்களுடைய தனித்தன்மை போன்றவற்றில் சமநிலைத் தன்மையை பராமரிப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
குழந்தை வளர்ப்பு என்பது யார் பொறுப்பு?
பூனை ஆற்றல் கொண்ட மனிதர்கள்

8. ரகசியம் காத்தல்: கேட் எனர்ஜி உள்ள மக்கள் தங்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் வெளியே சொல்ல மாட்டார்கள். சிலவற்றை மர்மமான முறையில் ரகசியமாக பாதுகாப்பார்கள். தங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அவ்வளவு சீக்கிரத்தில் வெளிப்படுத்த மாட்டார்கள். இது பிறருக்கு புதிராக தோன்றும் ஆனால் இந்த குணாதிசயம் பெரும்பான்மையானவர்களை இவர்களை நோக்கி ஈர்க்க வைக்கிறது.

9. சுய கவனிப்பு: பூனை ஆற்றல் உள்ள நபர்கள், சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பார்கள். தங்கள் சொந்த தேவைகளை உணர்ந்து பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கை எடுப்பதில் திறமையானவர்கள். நன்றாக ஓய்வெடுப்பது, தனக்கான எல்லைகளை அமைத்துக்கொள்வது, தங்களை ரீசார்ஜ் செய்யும் செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் தருவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com