பெண்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் இரட்டை ஆபரணம்!

A double ornament that brings luck to women
A double ornament that brings luck to women

பெண்கள் எப்போதும் மன உறுதி மற்றும் வலிமையோடு இருக்க வேண்டும். அவர்களை அவ்வளவு சுலபத்தில் யாராலும் வீழ்த்தி விட முடியாது. அப்படிப்பட்ட பெண்களுக்கு அதிர்ஷ்டத்தை இன்னும் கொஞ்சம் கூடுதலாக கொடுக்கத்தான் இந்த பரிகாரம். இதை பரிகாரம் என்று சொல்ல முடியாது. அதிர்ஷ்டத்தை தரக்கூடிய ஒரு விஷயம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்தவர்களால் பெண்கள் தோற்கடிக்கப்படக் கூடாது என்றால், பெண்கள் அதற்கு உண்டான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். எல்லா விஷயத்திற்கும் அடுத்தவர்களை சார்ந்து இருக்கக் கூடாது. சொந்தக் காலில் நிற்கக்கூடிய பெண்களுக்கு எப்போதுமே மனபலம், தைரியம் அதிகமாகத்தான் இருக்கும். ‘யாரையும் சார்ந்து நான் வாழவில்லை. என் சொந்த காலில் உழைத்து சம்பாதித்து வாழ்கிறேன்’ என்ற கர்வம் பெண்களில் மனதில் இருந்தால் அது ஒன்றும் தவறும் கிடையாது.

பொதுவாக, திருமணமான பெண்கள் கழுத்தில் ஒரு சரடை மட்டும்தான் அணிந்திருப்பார்கள். ஆனால், ஒருசிலர் சரடுடன் சேர்த்து இன்னொரு செயினையும் அணிந்திருப்பார்கள். அதாவது, ஒரு செயின் மட்டும் கழுத்தில் இல்லாமல், துணை செயின் ஒன்றும் இருக்கும். இப்படிப் பெண்கள் கழுத்தில் இரண்டு சங்கிலியை அணிந்திருந்தால் அதுபோன்ற பெண்களுக்கு அதிர்ஷ்டம் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு, நிறைய பெண்கள் கழுத்தில் மஞ்சள் கயிறில் சரடு போட்டு இருப்பார்கள். அதன் மேலே ஒரு செயின் போட்டு இருப்பார்கள். அப்படிப்பட்ட பெண்களின் சுபாவம் ஒரு மாதிரி இருக்கும். ஒரே ஒரு சரடு அணிந்திருக்கக்கூடிய பெண்களின் சுபாவம் வேறொரு மாதிரி இருக்கும். வேண்டுமென்றால், ஒரே ஒரு சரடு அணிந்திருக்கக்கூடிய பெண்கள் கழுத்தில் கூடுதலாக மற்றொரு செயினையும் அணிந்துதான் பாருங்களேன். உங்களின் சுபாவத்தில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். மனதில் துணிச்சல் மேம்படும். நீங்கள் எதிலும் வெற்றியாளராக மாறிவிடுவீர்கள்.

இதையும் படியுங்கள்:
தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது தெரியுமா?
A double ornament that brings luck to women

அந்தக் காலத்தில் பாட்டிகள் கூட, தாலி சரடோடு இரட்டை வட செயின் அல்லது கோதுமை செயின் என்று விதவிதமாக செயின்களை போட்டிருப்பார்கள். அதேபோல், அந்தக் காலத்தில் அட்டிகை அணியாத பெண்களே பெரும்பாலும் இருக்க மாட்டார்கள். கோயில்களில் அம்மன் முதற்கொண்டு, ஆடை அலங்காரங்களில் ஆரத்திற்கு மேலே அட்டிகை போட்டிருப்பது வழக்கம். தாலி சரடு போட்டு இருந்தாலும் சரி அல்லது திருமணம் ஆகாமல் சாதாரண செயின் அணிந்திருந்தாலும் சரி, உள் கழுத்தில் எப்போதும் ஒரு மாலை இருக்கும். ஒரு முத்துமாலையாவது இருக்கும். அப்படி உள் கழுத்தில் அணியக்கூடிய அந்த அணிகலனுக்கு தனிச்சிறப்பு தான். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். இப்படி இரட்டை நகை அணிந்த மூன்று மாதத்திற்குள்ளேயே உங்களால் நல்ல வித்தியாசத்தை உணர முடியும்.

இப்படி இரண்டாவதாக அணியக்கூடிய அந்த நகையை தங்கத்தில்தான் போட வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. வெள்ளியில் போடலாம். செம்பில் போடலாம். முத்துமாலையாகக் கூட போடலாம். இது உங்களுக்கு அழகு சேர்ப்பதோடு, அதிர்ஷ்டத்தையும் கொடுக்கக் கூடியதாக விளங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com