உங்க மிக்ஸியை புதுசு போல பராமரிக்க நச்சுன்னு சில டிப்ஸ்! 

Mixer Grinder
Tips to keep your mixer looking like new!
Published on

நவீன கால சமையலறையில் மிக்சிக்கு என்றுமே தனி இடம் உண்டு. அழைப்பதில் தொடங்கி மாவு பிசைவது வரை எல்லா வேலைகளுக்கும் உதவும் இந்த இயந்திரம் இல்லாமல் இன்றைய காலத்தில் சமைப்பது மிகவும் கடினமானது. ஆனால் மிக்ஸியை அடிக்கடி பயன்படுத்தினால் விரைவில் பழுதடைந்து விடும். எனவே இந்தப் பதிவில் மிக்ஸியை புதுசு போல பராமரிக்க சில எளிய குறிப்புகளைப் பார்ப்போம். 

மிக்ஸி பயன்படுத்துவதற்கு முன்: 

  • முதலில் புதிதாக மிக்ஸி வாங்கும் போது அதன் பாகங்களை நன்றாக சரி பார்க்கவும். ஏதேனும் சேதம் அடைந்திருந்தால் உடனடியாக திருப்பிக் கொடுத்து மாற்றி விடவும். 

  • அடுத்ததாக User Manual-ஐ நன்கு படித்து மிக்ஸியை எப்படி இயக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் எல்லா வழிமுறைகளையும் பின்பற்றவும். 

  • நீங்கள் அரைக்கப் போகும் பொருளை ஜாரில் சரியான அளவு மட்டுமே சேர்க்க வேண்டும். அதிகமாக சேர்த்தால் மோட்டார் மீது அழுத்தம் அதிகரித்து பழுதடைந்து விடும். 

  • தண்ணீர் அல்லது வேறு ஏதேனும் திரவம் சேர்க்காமல் உலர்ந்த பொருட்களை அரைக்க முயற்சிக்காதீர்கள். அதேபோல மிக்ஸியை அதிக நேரம் தொடர்ந்து இயக்க வேண்டாம்.

மிக்ஸி பயன்படுத்திய பின்: 

  • ஒவ்வொரு முறை மிக்ஸியை பயன்படுத்திய பின்னரும் ஜாரையும், மூடியையும் நன்றாகக் கழுவவும். குறிப்பாக பிளேடு பகுதியை நன்கு கழுவவும். ஈரமான ஜாரை அப்படியே வைக்காதீர்கள். அதை உடனே துடைத்து விடவும். 

  • மிக்ஸியின் வெளிப்புறத்தை ஈரமான துணி பயன்படுத்தி துடைத்து விடவும். மதத்திற்கு ஒருமுறையாவது ஜாரில் சிறிது தண்ணீர் மற்றும் சோப்பு சேர்த்து அரைத்து நன்கு கழுவவும். இது பிளேடுகளில் படிந்திருக்கும் எண்ணெய் மற்றும் கடினமான கறைகளை நீக்க உதவும். 

  • ஆறு மாதத்திற்கு ஒரு முறை மிக்ஸியின் மோட்டார் பகுதியில் உள்ள எண்ணெய் விடும் இடத்தில் சிறுதுளி எண்ணெய் ஊற்றவும். இது மோட்டார் நன்றாக இயங்க உதவும். 

பராமரிப்பு குறிப்புகள்: 

மிக்ஸியை தூசியில் இருந்து பாதுகாக்க அதை ஒரு சுத்தமான துணியால் எப்போதும் மூடி வைக்கவும். மிக்ஸியை ஒருபோதும் நேரடி சூரிய ஒளியில் வைக்காதீர்கள். மேலும், தண்ணீர் அதிகமாக இருக்கும் இடங்களிலும் வைக்காதீர்கள். 

மிக்ஸியில் இருந்து ஏதேனும் புகை அல்லது தேவையில்லாத வாசனை வந்தால் உடனடியாக அதை இயக்குவதை நிறுத்திவிட்டு சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்லவும். அதையும் மீறி பயன்படுத்தினால், மோட்டார் எரிந்துவிடும் வாய்ப்புள்ளது. இது ஆபத்தானதாகக் கூட மாறலாம். 

இதையும் படியுங்கள்:
இந்த உணவுகளை சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் புற்றுநோயே வராதா? அடேங்கப்பா! 
Mixer Grinder

மிக்ஸி வாங்கும்போது வாரண்ட்டி கார்டு கொடுப்பார்கள், அதை வாரண்ட்டி காலம் முடியும் வரை கவனமாக வைத்திருங்கள். அத்துடன் யூசர் மேனுவலையும் பாதுகாத்து வைத்திருப்பது நல்லது. 

உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்களாகவே அதை சரி செய்ய முயற்சிக்காமல் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரை அணுகுவது நல்லது. இந்த எளிய குறிப்புகளை முறையாகப் பின்பற்றினால் உங்கள் மிக்சி நீண்ட காலம் நன்றாக வேலை செய்யும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com