இந்த உணவுகளை சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் புற்றுநோயே வராதா? அடேங்கப்பா! 

Cancer
Cancer
Published on

புற்றுநோய் என்பது உலக அளவில் மக்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். பலரது மரணத்திற்கும், நோய் தொற்றுகளுக்கும் முக்கிய காரணமாக இது விளங்குகிறது. புற்றுநோய் வராமல் தடுப்பதில் பல காரணிகள் பங்கு வகித்தாலும் அதில் உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. சில உணவுகளை நமது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்க முடியும். அத்தகைய உணவுகள் என்னென்ன என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள்: 

பழங்கள் மற்றும் காய்கறிகளில் நார்ச்சத்து, விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. அவை புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்க உதவும். எனவே தினசரி பச்சை இலை காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள், தக்காளி, பூசணி வகைகள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோயை எதிர்த்து போராடலாம். 

முழு தானியங்களில் நார்ச்சத்து விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதால், இவற்றை நாம் கட்டாயம் சாப்பிட வேண்டும். எனவே முழு தானியங்கள், ஓட்ஸ், பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. 

இயற்கையாகவே பருப்பு வகைகளில் புரதம், விட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. இவை புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுப்பதால், இவற்றை நம் உணவில் சேர்த்துக் கொள்வது, நமது ஆரோக்கியத்திற்கு பெரிதளவில் உதவும். 

கொழுப்பு நிறைந்த மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருக்கும். இவை அழற்சியைக் குறைத்து புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்க உதவும். எனவே வாரத்துக்கு இரண்டு முறை, சால்மன், மத்தி போன்ற மீன்களை சாப்பிடுங்கள். 

பால் பொருட்கள் கால்சியம் மற்றும் விட்டமின் டி போன்றவற்றின் நல்ல ஆதாரமாகும். அவை சில வகை புற்று நோய்களுக்கு எதிராக உங்களை பாதுகாக்க உதவும். குறைந்த கொழுப்புள்ள அல்லது கொழுப்பு இல்லாத பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதால் நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். 

இதையும் படியுங்கள்:
புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் மிக்கது சுரைக்காய் என்பது தெரியுமா?
Cancer

இது தவிர தினசரி போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும். இது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடைபடும். எனவே தினசரி 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

ஆரோக்கியமான உணவு உட்கொள்வது புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான ஒரு முக்கிய வழியாகும். எனவே மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமான எடையை பராமரிப்பது மூலம், எல்லா விதமான நோய்களில் இருந்தும் நீங்கள் பாதுகாப்புடன் இருக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com