காக்கை கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடம்!

Crow Life lesson
Crow Life lesson
Published on

காகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம். அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத்திய குணங்கள் அதற்கு உண்டு என்பதையும், காகம் மனிதனைவிட உயர்ந்த வாழ்வியல் நெறி முறைகளை கடைபிடிக்கும் பறவை என்பதையும் அறியோம். இப்பதிவில் அறிந்து கொள்வோம்.

வாழ்க்கை பாடம்:

காகம் உயர்ந்த ஒழுக்க நெறி கொண்ட பறவை. கற்புக்கு உதாரணமாக காகத்தை சொல்லலாம். தனது ஜோடியுடன் மட்டுமே இணை சேரும்.

பெரும்பாலும் மாலையில் நீர் நிலைகளில் குளித்து விட்டு தான் தன் கூட்டுக்கு செல்லும் வழக்கம் உடையது.

காகம் உணவை ஒருபோதும் தனியாக சாப்பிடவேண்டும் என்கிற சுயநலம் சிறிதும் இல்லாத பறவை. உணவு கிடைத்தால் கரைந்து தன் சகாக்களையும் அழைத்து பகிர்ந்து சாப்பிடும் சிறந்த குணம் காக்கைக்கு உண்டு.

காக்கைக்கு இது தன் முட்டை இல்லை என்று தெரியும். தெரிந்தும் குயிலின் முட்டையை அடை காக்கும். குயில் குஞ்சுக்கும் தன் குஞ்சு போலவே பறக்கும் வரை உணவளித்து பராமரிக்கும். 'உலகில் மிகச்சிறந்த மாற்றந்தாய்' காகம் தான் என்பதை உணரலாம்.

தங்கள் இனத்தில் ஏதாவது காக்கை இறந்து விட்டால் அனைத்துக் காக்கைகளும் ஒன்றுகூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்கு சமமாக கருதப்படுகிறது.

தமிழ் வேதமாகிய திருக்குறளில்

“காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள” (குறள் 527)

காகம், உணவு கிடைத்தால், அதனை மறைத்துத் தான் மட்டும் உண்ணாது, மற்ற காகங்களையும் அழைத்து உண்ணும். அதுபோன்றவர்களுக்கே செல்வச் சிறப்பு கிட்டும் என்கிறார் வள்ளுவர்.

இதையும் படியுங்கள்:
நீங்க பேனாவ எப்படி பிடிப்பீங்க? அப்ப நீங்க இப்படித்தான்!
Crow Life lesson

ஆன்மிக பாடம்:

காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைப்பதால் நம் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண்பழி போன்றவை நம் கிட்டவே நெருங்காது.

செய்வினை கோளாறுகள் வீட்டுப் பக்கமே வராது.

புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும், நம்முடைய நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது .

நம் முன்னோர்களுக்கே நாம் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிதமான சக்தியை நமக்கு அளிக்கவல்ல அற்புதமான ஜீவராசி காக்கை இனம்.

குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிப் பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.

தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தக் கணுப்பிடி பூஜையையும் செய்கிறார்கள்.

காக்கை சனி பகவானின் வாகனம் காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம்.

எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம்.

தந்திரமான குணம் கொண்ட காகம் யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும் முன் கூட்டியே காகம் நம் வீட்டின் முன் கா……………….கா…………. என்று பல முறை குரல் கொடுக்கும்.

காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com