நீங்க பேனாவ எப்படி பிடிப்பீங்க? அப்ப நீங்க இப்படித்தான்!

Pen holding style
Pen holding style
Published on

ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைல் ஆக பேனாவை பிடிப்பார்கள்.  சிலர் கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் இடையே பேனாவை பிடித்திருப்பார்கள். மற்றவர்களோ, தங்கள் ஆள்காட்டி மற்றும் நடுவிரலுக்கு இடையில் பேனா பிடித்திருப்பார்கள். இன்னும் சிலர் கட்டைவிரல் மற்றும்  நடுவிரலும் இடையில் பேனாவை பிடிப்பார்கள். இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலில் பேனா பிடிப்பதை வைத்தே அவர்களின் இயல்பு, பண்புகள் என அவர்களின் குண நலன்களை கணிக்க முடியும்.

உடனே ஒரு பேனாவை கையில் எடுத்து சோதனையில் இறங்கி விட்டீர்களா? சரி வாருங்கள், உங்கள் ரகசியத்தை தெரிந்துக் கொள்வோம்!

ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரல்

உங்கள் கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் நீங்கள் பேனாவை பிடிப்பவராக இருந்தால், நீங்கள் புதிய விஷயங்களைச் செய்யவும், புதிய வழியில் வாழவும் விரும்புவீர்கள். அதுமட்டுமின்றி, நீங்கள் புதிய அனுபவங்களைப் பெறவும், புதிய இடங்களை ஆராயவும் ஆர்வம் காட்டுவீர்கள். குறிப்பாக, நீங்கள் ஒரு மர்மமான நபராகவும், உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமங்களை சந்திப்பவராகவும் இருப்பீர்கள்.

ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல்

ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் பேனாவைப் பிடித்தால், நீங்கள் யாரை அதிகம் நம்புகிறீர்களோ அல்லது யாருடன் உங்களுக்கு ஆழ்ந்த தொடர்பு இருக்கிறதோ அவர்களுடன் மட்டுமே உங்கள் விஷயங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். நீங்கள் எதிர்மறையான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த விரும்ப மாட்டீர்கள். மேலும் மோசமான நினைவுகள் அல்லது சம்பவங்களை விரைவாக மறந்துவிடுவீர்கள். உங்கள் அமைதியான மற்றும் கண்ணியமான இயல்பினால் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் நீங்கள் பிடித்தவராக இருப்பீர்கள்.

இதையும் படியுங்கள்:
நேரம் தவறாமையினால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
Pen holding style

கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல்

கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலை பயன்படுத்தி பேனாவை பிடித்தால், உங்களிடம் இரண்டு குணங்கள் இருக்கலாம். சூழ்நிலையைப் பொறுத்து நீங்கள் உணர்ச்சி வசப்படலாம். சில சமயங்களில் நீங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகலாம், சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட கோபம் கொள்பவராக இருக்கலாம். பொதுவாகவே, நீங்கள் மென்மையாகவும், கனிவாகவும் இருப்பீர்கள். ஆனால் நேரம் வரும்போது விமர்சகராகவும் கூட மாறுவீர்கள்.

முக்கியமாக, இந்த மூன்று ஸ்டைலில் நீங்கள் பேனாவை பிடிக்கும்போது  சிலர் கட்டைவிரலால் பேனாவை அழுத்தி பிடிப்பர். எனில், நீங்கள் மிகவும் சுறுசுறுப்பான நபராக இருப்பீர்கள். செல்வாக்கு மற்றும் லட்சியம் உள்ள நபராகவும் இருக்கலாம். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலோ அல்லது கோபமாக இருந்தாலோ உங்கள் உணர்வுகளை யார் முன்னிலையிலும் வெளிப்படுத்த மாட்டீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com