மெதுவாய் சுற்றும் ஃபேன்... சூப்பர் ஸ்பீடாக மாற்ற எளிய வழி!

Ceiling fan
Ceiling fan
Published on

கோடைக்காலம் வந்துவிட்டாலே வீடுகளில் மின்விசிறிகளின் தேவை அதிகமாகிவிடும். பல வீடுகளில் குளிர்சாதன வசதிகள் இல்லாவிட்டாலும், ஃபேன் காற்றாவது இதமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. ஆனால், சில சமயங்களில் நன்றாக ஓடிக் கொண்டிருந்த ஃபேன் கூட, வெயில் காலத்தில் மட்டும் வேகம் குறைந்து மெதுவாகச் சுற்றுவதைக் கவனிக்கலாம். மற்ற காலங்களில் குறைந்த வேகத்திலேயே நல்ல காற்றைத் தந்த ஃபேன், கோடையில் அதிக வேகத்தில் சுற்றியும் போதிய காற்று வராமல் இருக்கலாம்.

மின்விசிறியின் வேகம் குறைகிறது என்றால், பெரும்பாலும் அதன் இறக்கைகளில் தூசி படிந்து இருப்பதே காரணமாக இருக்கும். இதை நாம் அவ்வப்போது சுத்தம் செய்வதுண்டு. ஆனால், இறக்கைகளைச் சுத்தம் செய்த பிறகும் காற்றின் வேகம் எதிர்பார்த்த அளவு அதிகரிக்காமல் இருக்கலாம். இது வேறு ஒரு பிரச்சனையின் அறிகுறியாகும். இந்தச் சமயத்தில் ஃபேன் மெதுவாகச் சுற்றுவதால், கோடையில் நமக்குத் தேவையான குளிர்ச்சியான காற்று கிடைக்காமல் சிரமப்பட வேண்டியிருக்கும்.

மின்விசிறியைச் சுத்தம் செய்த பிறகும் அதன் சுழற்சி வேகம் குறைவாகவே இருந்தால், அதற்குக் காரணம் 'கண்டென்ஸர்' (Condenser) என்ற ஒரு சிறிய பாகமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த கண்டென்ஸர் மின்விசிறியின் மோட்டாருக்கு மின்சாரம் சீராகச் செல்ல உதவுவதுடன், அதன் சுழற்சி வேகத்தையும் கட்டுப்படுத்துகிறது. கண்டென்ஸர் பலவீனமடையும்போது அல்லது பழுதடையும்போது, ஃபேன் அதன் முழு வேகத்தில் இயங்க முடியாமல் போகும்.

இந்த கண்டென்ஸரை மாற்றுவது பெரிய கடினமான வேலையல்ல. சற்றுத் தொழில்நுட்ப அறிவுள்ள யாராலும் இதைச் சுலபமாகச் செய்துவிட முடியும். மேலும், இந்த உதிரி பாகத்தின் விலையும் மிகக் குறைவுதான்; சுமார் எழுபது முதல் எண்பது ரூபாய்க்குள்ளேயே கிடைத்துவிடும். எனவே, புதிய ஃபேன் வாங்கும் செலவுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைந்த செலவே.

கண்டென்ஸர் பொதுவாக ஃபேன் மோட்டருக்கு மேல் உள்ள பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும். பழைய கண்டென்ஸரை மாற்றுவதற்கு முன், அதில் இணைக்கப்பட்டுள்ள ஒயர்கள் எப்படி இருக்கின்றன என்பதை மிக கவனமாகப் பார்த்து குறித்துக் கொள்ளுங்கள். பழையதை அகற்றிய பிறகு, புதிய கண்டென்ஸரை அதே ஒயர் இணைப்புகளில் சரியாகப் பொருத்த வேண்டும். இந்த ஒரு விஷயத்தை மட்டும் கவனமாகச் செய்தால் போதும். கண்டென்ஸரை மாற்றிய பிறகு மின்விசிறியை ஆன் செய்தால், முன்பு போலச் சூப்பர் வேகத்தில் சுழன்று, நல்ல காற்றைத் தரும்.

இதையும் படியுங்கள்:
வீட்டிற்கு அடிக்கும் வெண்மை நிறப்பூச்சினால் உண்டாகும் நன்மைகள்!
Ceiling fan

மின்விசிறியை அவ்வப்போது சுத்தம் செய்து, கண்டென்ஸர் போன்ற பிரச்சனைகளைச் சரியான நேரத்தில் சரி செய்வதன் மூலம், உங்கள் ஃபேன் நீண்ட நாட்களுக்குச் சிறப்பாகச் செயல்பட வைப்பதுடன், கோடையிலும் இதமான காற்றை அனுபவிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
மின்விசிறி மற்றும் அயர்ன் பாக்ஸ் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள்!
Ceiling fan

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com