குளியலறையை பளபளக்க வைக்க ஒரு சூப்பர் ஐடியா!

bathroom Cleaning
bathroom Cleaning
Published on

நம்மில் பலர், குளியலறையை சுத்தம் செய்யணும்னாலே ஒரு பெரிய வேலைன்னு நினைப்போம். அதுவும் உப்புக்கரை பிடிச்சிருந்தா, கெமிக்கல் கிளீனர் வாங்கித்தான் சுத்தம் செய்யணும்னு தோணும். ஆனா, அந்த கெமிக்கல் வாசனையும், கையெல்லாம் எரியுறதும் சில சமயம் மூச்சுத்திணறல் கூட வரலாம். அதனால, நம்ம வீட்ல இருக்கிற பொருட்களை வச்சே குளியலறையை எப்படி புதுசு மாதிரி ஆக்கலாம்னு பார்க்கலாம் வாங்க.

வீட்டிலேயே இருக்கு அற்புத தீர்வு:

குளியலறை உப்புக்கரையால் அசிங்கமா இருக்கேன்னு கவலைப்பட வேண்டாம். அதிக காசு கொடுத்து கடையில கிளீனர் வாங்கத் தேவையில்லை. ஒரு சின்ன கிளாஸ்ல, நம்ம வீட்ல சமையலுக்கு பயன்படுத்தற சோடா உப்பு, துணி துவைக்கும் சோப்பு பவுடர், கொஞ்சம் வினிகர், அப்புறம் தண்ணி இது நாலும் போதும். முதல்ல, சோடா உப்பு கூட சோப்பு பவுடரை போட்டு நல்லா கலக்கணும். அப்புறம் வினிகரை ஊத்துனதும், அப்படியே பொங்கி வரும் பாருங்க, பாக்கவே ஆச்சரியமா இருக்கும். நல்லா கலக்கிட்டு, கொஞ்சம் தண்ணி சேர்த்து ஒரு ஸ்பிரே பாட்டிலுக்கு மாத்திக்கிட்டீங்கன்னா, நம்ம வீட்டிலேயே தயார் பண்ணின கிளீனர் ரெடி.

இப்போ குளியலறையில எங்கெல்லாம் உப்புக்கரை பிடிச்சிருக்கோ அங்கெல்லாம் இந்த கிளீனரை நல்லா தெளிங்க. கரை ரொம்ப அதிகமா இருந்தா, ஒரு இருபது நிமிஷம் அப்படியே ஊற விடுங்க. இந்த நேரம், நீங்க ஒரு டீ குடிச்சு ரிலாக்ஸ் ஆகலாம். அப்புறம் ஒரு ஸ்க்ரப்பர் எடுத்து நல்லா தேய்ச்சு விடுங்க. என்ன ஆச்சரியம், கரை எல்லாம் அப்படியே காணாம போயிடும். தேய்க்கும்போது ரொம்ப சிரமப்படத் தேவையில்லை, ஈஸியா போயிடும். சுத்தமான குளியலறை கிடைச்சதும், நீங்களே ஆச்சரியப்படுவீங்க.

இதையும் படியுங்கள்:
இனி மொழி ஒரு தடையல்ல... கூகுளின் மாபெரும் அப்டேட்!
bathroom Cleaning

இனி பணமும் மிச்சம், ஆரோக்கியமும் பாதுகாப்பு:

இந்த முறையைப் பயன்படுத்தினா, உங்க குளியலறை உப்புக்கரை இல்லாம புதுசு மாதிரி பளபளக்கும். முக்கியமா, இனிமேல் கெமிக்கல் கிளீனருக்கு அதிகமா காசு செலவு பண்ண வேண்டாம். அப்புறம், கெமிக்கல் வாசனை பிடிக்காதவங்களுக்கும், சரும அலர்ஜி இருக்கிறவங்களுக்கும் இது ஒரு அருமையான தீர்வு. உங்க பணத்தையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க இதைவிட ஒரு சிறந்த வழி வேற என்ன இருக்கு? இந்த ஈஸியான வழியை நீங்களும் உங்க வீட்ல முயற்சி பண்ணி பாருங்க, கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com