புளியை நீண்ட நாட்கள் சேமிக்க ஒரு சூப்பர் டிப்ஸ்!

Tamarind
Tamarind
Published on

நம்ம சமையல்ல புளி ஒரு முக்கியமான பொருள்னு சொல்லலாம். புளிப்புச் சுவைய கூட்டவும், சில குழம்புகளுக்கு ஒரு தனி மணத்தைக் கொடுக்கவும் புளி ரொம்பவே உதவுது. ஆனா, இந்த புளியை வாங்கிட்டு வந்து அப்படியே வச்சிட்டா, கொஞ்ச நாள்லயே புழு புடிச்சு வீணாகிடும். அப்புறம் என்ன, கஷ்டப்பட்டு வாங்கினது வீண் தானே? அதுக்குத்தான் ஒரு சூப்பரான வழி இருக்கு. இதைத் தெரிஞ்சுக்கிட்டா, புளி எவ்வளவு நாள் ஆனாலும் புழு வராமல் புதுசு போல இருக்கும்.

புளியில ஏகப்பட்ட சத்துக்களும் இருக்கு. முக்கியமா எலும்பு தேய்மானத்தால வர மூட்டுவலிக்கு இது ஒரு நல்ல மருந்துன்னு சொல்றாங்க. அதுமட்டுமில்லாம, ரத்த சோகை வராம தடுக்கத் தேவையான இரும்புச்சத்தும் இதுல நிறைய இருக்கு. செரிமானப் பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்தி, ரத்த ஓட்டம் சீராகறதுன்னு பல விஷயங்களுக்கு புளி ரொம்பவே நல்லது.

சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துறதுல இருந்து, உடம்புல இருக்கிற கொழுப்பைக் கரைக்கிற வரைக்கும் புளியோட நன்மைகளை அடுக்கிக்கிட்டே போகலாம். கால்ல வர வீக்கம், கீழ்வாதம்னு பல பிரச்சனைகளுக்கும் புளி ஒரு நல்ல தீர்வுன்னு சொல்றாங்க.

இவ்வளவு நல்லது இருக்கிற புளியை  நீண்ட நாட்கள் சேமிக்கிறது ரொம்ப முக்கியம். அதுக்கு ரொம்ப சிம்பிளா ஒரு ஐடியா இருக்கு. ஒரு கண்ணாடி பாட்டிலோ அல்லது பிளாஸ்டிக் பாட்டிலோ எடுத்துக்கோங்க. அதுல புளியை வைக்கிறதுக்கு முன்னாடி, பாட்டிலோட அடியில ஒரு கைப்பிடி அளவுக்கு கல் உப்பைப் போட்டுருங்க. அப்புறமா புளியை அதுக்குள்ள வைக்கும்போது, அங்கங்க கொஞ்சமா கல் உப்பைத் தூவி விடணும். புளியை அடுக்கும்போது ஒவ்வொரு லேயருக்கும் இடையில கொஞ்சம் உப்பு போடலாம்.

இதையும் படியுங்கள்:
recipes புளி மிளகாய் தொக்கும் - புழுங்கல் அரிசி பால் கொழுக்கட்டையும்
Tamarind

இப்படியே நீங்க புளியை பாட்டிலுக்குள்ள நிரப்பி, மூடி போட்டு வச்சிட்டீங்கன்னா, எவ்வளவு நாள் ஆனாலும் புழுவோ பூச்சியோ எட்டி கூட பார்க்காது. புளி அப்படியே பிரெஷ்ஷா இருக்கும். இந்த மாதிரி செஞ்சு வச்சிட்டா, வருஷம் முழுக்க புளிப்பத்தி கவலையே பட வேண்டாம். சீசன்ல மட்டும் கிடைக்கிற புளியை இப்படி பாதுகாத்து வச்சா, எப்பவும் நமக்கு புளி கையில இருக்கும். ரொம்ப சிம்பிளான ஐடியாதான், ஆனா பயங்கர எஃபெக்டிவா இருக்கும். நீங்களும் ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com