உணவு, உடை, உறைவிடம் மூன்றும் அத்தியாவசியமான தேவைகள். இதில் உறைவிடமான சொந்த வீடு கனவு இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கிறது. சொந்தமாக நிலம் இருந்தால் வீடு கட்டுவது சற்று எளிதான காரியம் தான். அந்தவகையில் அரசின் புறம்போக்கு நிலம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய இளைஞர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்று புறம்போக்கு நிலம் பற்றியது. அரசின் சொத்தாக புறம்போக்கு நிலம் இருக்கிறது. புறம்போக்கு நிலங்கள் பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகின்றன.
வேளாண்மை செய்ய முடியாத நிலங்களாக இருக்கும் புறம்போக்கு நிலம், சாலை, மேய்ச்சல் நிலம், தரிசு நிலம், கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால் போன்ற நீர்நிலைகள் மற்றும் சுடுகாடு போன்றவை பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளால் புறம்போக்கு நிலங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வருவாய் ஆவணங்களுக்கு வெளியே இருப்பதால் இந்த நிலங்கள் புறம்போக்கு நிலம் என்று அழைக்கப்படுகிறது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களை மக்கள் பயன்பாட்டு நிலங்கள் என்றும் அரசின் நிலம் என்றும் அழைக்கின்றனர்.
அரசு பள்ளிகள், கல்வி நிலையங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்ற அரசு தொடர்பான விஷயங்களுக்கு புறம்போக்கு நிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது தவிர இந்த புறம்போக்கு நிலத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு, வீட்டு வசதியை வழங்கும் வகையில் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக அரசு இந்த புறம்போக்கு நிலங்களுக்கு இலவச பட்டா வழங்குகிறது.
நீர்நிலைகளான ஏரி, குளம், கால்வாய் ஓடை, குட்டை போன்றவற்றையும் புறம்போக்கு நிலம் என்று தான் கூறுகின்றனர். ஆகவே தான் தனியார் அமைப்புகள் இந்த நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ய அரசு அனுமதிப்பதில்லை. நீர் நிலைகள் கொண்ட இந்த புறம்போக்கு நிலத்திற்கு எக்காரணம் கொண்டும் பட்டா வழங்கக்கூடாது என்பதுதான் அரசின் உத்தரவாக உள்ளது.
மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக புறம்போக்கு நிலத்தில் ஒருவர் வாழ்ந்து வந்தால் அவருக்கு அந்த நிலத்திற்கான வீட்டுமனை பட்டாவாக வழங்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. குடியிருப்பு பகுதியில் இருக்கும் புறம்போக்கு நிலம் நத்தம் புறம்போக்கு நிலம் என அழைக்கப்படுகிறது.
இளைஞர்களே புறம்போக்கு நிலம் பற்றி தெரிந்து கொண்டீர்களா? இனிமேல் வீடு கட்ட இடம் வாங்கும் போதும் யாராவது ஆக்கிரமிப்பு செய்யும் போதும் விதிகளை உணர்ந்து செயல்படுங்கள்.