A.C. ஓடினாலும் கரண்ட் பில்லைக் குறைக்கலாம்! எப்படி தெரியுமா?

A.C. Even if you run, you can reduce the current bill! You know how?
A.C. Even if you run, you can reduce the current bill! You know how?https://english.jagran.com
Published on

கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. இரவில் ஏ.சி. இல்லாமல் பலராலும் தூங்க முடிவதில்லை. பகலிலும் பல வீடுகளில் ஏ.சி. இயங்கும் இரைச்சல் வெளியில் கேட்கிறது. இதனால் கோடையில் மின்சாரத் தேவை தாறுமாறாக அதிகரிப்பதால், தடையில்லாமல் மின்சாரம் வழங்குவதற்குள் அரசு திணறிப் போகிறது.

முன்பெல்லாம் பெரும் பணக்காரர்கள்தான் ஏசியை பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், இப்போது அப்படி அல்ல, கிராமப்புறங்களில் குடிசை வீடுகளில் கூட அதற்கான கட்டமைப்பை உருவாக்கி ஏ.சி.யைப் பயன்படுத்துகிறார்கள். டிவி, செல்போன் எப்படி வாழ்க்கையோடு ஒன்றிப் போய்விட்டதோ, அதேபோல் ஏர் கண்டிஷனரும் ஆகிவிட்டது. ஆனாலும், கரண்ட் பில்லை நினைத்தால் ஏ.சி.யில் கூட வியர்த்து விடும். ஏசி வைத்திருந்தாலும் மின்சார செலவை எப்படிக் குறைப்பது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஏர்கண்டிஷனரை கச்சிதமாக எப்படிப் பயன்படுத்துவது என நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அனலைத் தவிர்ப்பதற்கு ஏ.சி.யை அதிக குளிர்ச்சியாக வைப்பதுதான் சரி என்று நினைத்து பலரும் 18 டிகிரி முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ச்சியில் வைக்கின்றனர். இதனால் குளிர் எடுக்கும்போது போர்வையைப் போர்த்திக்கொண்டு தூங்குகின்றனர். இதனால் இரண்டுவிதமாக இழப்புகள் ஏற்படுகின்றன. மின்சாரமும் தேவையில்லாமல் வீணாகிறது; நமது உடல் நலனும் கெடுகிறது.

நமது உடலின் சராசரி வெப்பநிலை என்பது 36 டிகிரி செல்சியஸ். இதைவிட அதிக அனலில் வெயிலில் இருப்பது எப்படி உடலுக்கு ஆகாதோ, அப்படி அதிக குளிரில் இருப்பதும் ஆகாது. நமது உடல் 22 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையைத் தாங்கும் சக்தி கொண்டது. இதைவிட அதிகமான அனலில் இருந்தால் சோர்வு ஏற்பட்டு மயக்கம் வரும்; குறைவான குளிர் என்றால் உடல் நடுங்கும்.

ஏ.சி.யில் நீண்ட நேரம் குளிரில் தூங்கும்போது, நம் உடலின் வெப்பச் சமநிலை கெடுகிறது. இதனால் இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. உடலின் சில பகுதிகளுக்குப் போதுமான இரத்தம் கிடைக்காமல் போகிறது. காலப்போக்கில் இது உயர் இரத்த அழுத்தம், மூட்டுவலி போன்ற பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
நச்சு நீக்கியாகப் பயன்படும் அன்னாசிப்பூ டீடாக்ஸ் வாட்டரின் 7 நன்மைகள்!
A.C. Even if you run, you can reduce the current bill! You know how?

ஏ.சி.யிலேயே பெரும்பாலான நேரமும் இருப்பவர்களுக்கு இயல்பாக வியர்ப்பதில்லை. இதனால் உடலிலிருந்து தேவையற்ற நச்சுக்கள் வெளியேறுவதும் தடுக்கப்படுகிறது. இது நாளடைவில் சருமப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

ஏ.சி.யை அதிகக் குளிரில் வைத்துவிட்டு, போர்வையைப் போர்த்திக்கொண்டு தூங்குவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் ஏ.சி.யை வைப்பதே சரியானது. இதுவே இதமான குளிர்ச்சியைத் தந்து, நம்மை நிம்மதியாகத் தூங்க வைக்கும். இதனால் குறைவான மின்சாரம் செலவாவதுடன், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

'இந்தியர்கள் அனைவரும் ஏ.சி.யை இப்படி முறையாகப் பயன்படுத்தினால், ஆண்டுக்கு 2,000 கோடி யூனிட் மின்சாரச் செலவு குறையும்' என்கிறது மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம். இதனால் நிலக்கரியை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தி அதிக மின்சாரம் தயாரிக்க வேண்டிய தேவையும் குறைகிறது.

அது மட்டுமில்லை, ஏ.சி.யை இப்படி முறையாகப் பயன்படுத்தினால் ஓராண்டில் சுமார் 4,000 முதல் 6,000 ரூபாய் மின் கட்டணமும் குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com